LATEST
Home » கட்டுரைகள் » வணக்கங்கள்

வணக்கங்கள்

ஷவ்வால் மாத ஆறு நோன்புகள் – விமர்சனங்களும் விளக்கங்களும்

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு வைப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாகச் சிலர் ஆறு நோன்பு குறித்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிட்டு சில வாதங்களையும் முன்வைக்கிறார்கள்.   அந்த ஹதீஸ் இதுதான்:   حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ ... Read More »

பெருநாள் தொழுகையின் சட்டங்கள்

பெருநாள் தொழுகை நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில்  தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகையையும் திடலில் தான் தொழ வேண்டும். “மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுன் நபவியில் தொழுவது 1000 மடங்கு நன்மை அதிகம்” (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் ... Read More »

இஃதிகாஃபின் சட்டங்கள்

இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு “தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும். நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர். ரமலானில் இஃதிகாப் எதற்காக? ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி ... Read More »

ஆயிரம் மாதங்களை விட சிறந்த புனித லைலதுல் கத்ர் இரவு

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில் மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5) முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர் பார்த்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய ... Read More »

நோன்பு நோற்க சக்தியற்றவர் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவ்வசனத்துக்கு பொருள் செய்த பலர் சக்தியுள்ளவர் என்ற இடத்தில் சக்தியில்லாதவர் என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் அரபு மூலத்தில் யுதீ(க்)கூன என்ற உடன்பாட்டு வினைச்சொல் தான் உள்ளது. லா யுதீ(க்)கூன என்று எதிர்மறைச் சொல் பயன்படுத்தப்படவில்லை. எனவே சக்தியுள்ளவர்கள் என்று அல்லாஹ் சொல்லி இருக்க சக்தியற்றவர்கள் என்று மொழிபெயர்ப்பது தவறாகும். சக்தியுள்ளவர்கள் நோன்பு தானே நோற்க வேண்டும். அவர்கள் எப்படி பரிகாரம் செய்ய முடியும் என்று இவர்கள் சிந்தித்ததால் இப்படி இல்லாத அர்த்தம் ... Read More »

ஹஜ்ஜில் இஸ்லாம் வழங்கிய சலுகைகள்.

ஹஜ் என்பது இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். இந்தக் கடமையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு நிறைவேற்றுகிறார்கள். தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற வணக்கங்களின் செயல்முறையை இந்தப் பத்தாண்டுகளில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட நபித்தோழர்களுக்கு, ஹஜ் என்ற வணக்கத்தின் செயல்முறை மட்டும் நிலுவையில் இருந்தது. அதை நிறைவேற்றும் முகமாக நபி (ஸல்) அவர்கள் பயணத்தைத் துவக்கியதும் நபித்தோழர்கள் அன்னாரின் ஹஜ் வணக்கத்தை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கலானார்கள். “உங்களுடைய ஹஜ் மற்றும் உம்ராவைத் தெரிந்து கொள்ளுங்கள்! ஏனெனில் இந்த ... Read More »

இறுதி நபியின் இறுதி ஹஜ் – நேர்முக வர்ணனை.

அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து மறைந்த ஹதீஸ் கலை விற்பன்னர் ஆவார்கள். ஹதீஸ் துறைக்கு இவர் ஆற்றிய சேவை அளப்பரிய ஒன்றாகும். ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூற்களான திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூற்களில் அடங்கியிருந்த பலவீனமான ஹதீஸ்களுக்கென தனி நூல்கள் கண்டது; புகாரி, முஸ்லிம் மற்றும் மேற்கண்ட ஆதாரப்பூர்வமான நூற்களிலிருந்து ஹதீஸ்களைப் பொறுக்கியெடுத்துப் பல்வேறு தலைப்புகளின் கீழ் வெளிவந்த ரியாளுஸ் ஸாலிஹீன், மிஷ்காத்துல் மஸாபீஹ், அத்தர்கீப் வத்தர்கீப் போன்ற நூல்களில் இடம்பெற்ற பலவீனமான ஹதீஸ்களுக்கு அடிக்குறிப்புகள் தந்தது; எண்ணற்ற ... Read More »