LATEST
Home » கட்டுரைகள் » சர்வதேச அரசியல்

சர்வதேச அரசியல்

  மியன்மார் – கொன்று எரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்

-ஆங்சான் சூசியின் கல்ல மவுனத்தை களைத்தது BBC மியன்மர் என்று அழைக்கப்படும் பர்மாவில் கடந்த பல வருடங்களாக ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய தாக்குதல்கள் அந்நாட்டு அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக அஸின் விராது என்ற தேரரின் தலைமையிலான 969 இயக்கம் (969 Movement) கடந்த காலங்களில் பாரிய தாக்குதல்களையும், அத்துமீறல்களையும் மேற்கொண்டது. சிறுவர்கள் குழந்தைகள், வயோதிபர்கள் என்று யாரையும் விட்டு வைக்காது அனைவர் மீதும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை இவர்கள் முன்னெடுத்தார்கள். “அகிம்சை பேசும் பௌதம் எம் மதம்” என்று சொல்லிக் ... Read More »

குற்றங்கள் இரு வகை

தலைப்பை பார்த்தவுடன் என்னடா உலகில் பலவகை குற்றங்கள் நடந்துகொண்டிருக்க அதென்ன இருவகை என்று உங்கள் மனதில் தோன்றலாம். அது வேறொன்றுமல்ல, இன்றைய மீடியாக்களின் பார்வையே. இலங்கை மட்டுமல்லாது உலக மீடியாக்களின் கோணமும் இதுவே. முஸ்லிம்கள் செய்யும் குற்றம் ஒருவகை, முஸ்லிம் அல்லாதவர்கள் செய்யும் குற்றம் இன்னொரு வகை. முஸ்லிம்கள் செய்யும் குற்றங்களை தூக்கலாகவும், கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்திகளாகவும் பதியப்படுவது ஒருபுறமும், முஸ்லிம் அல்லாதவர்கள் செய்தால் போகிற போக்கில் ஒரு தகவலாகவும், கொசுறுச் செய்தியாகவும் பதியப்படுவது மறுபுறம். அந்த வகையில் நாம் அனைவரும் அறிந்த ... Read More »

“மூழ்கடியுங்கள் ஆனால் சாகக் கூடாது” – அமெரிக்காவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் “வோட்டர் போட்டிங்” சித்தரவதை

குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் சித்தரவதை முறைகளில் “வோட்டர் போட்டிங்” மிகவும் அபாயகரமானதாகும். உலக வல்லரசு நாடுகளில் மிக முக்கியமான நாடாகவும், அனைத்து நாடுகளையும் விட அதிக ஆயுத பலத்த கொண்டதாகவும் அறியப்படும் அமெரிக்காவில் கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி க்லின்டனை தோற்கடித்து வெற்றி பெற்றார் டொனால்ட் டிரம்ப். தேர்தல் பரப்புரையின் போதே பல சர்சைகளை உண்டாக்கியவர் என்று ஊடக விமர்சனத்திற்கு உள்ளானவர் டிரம்ப். அகதிகளை வெளியேற்றுதல், முஸ்லிம் நாடுகளுடனான அமெரிக்காவின் தொடர்பை துண்டித்துக் கொள்ளுதல், அமெரிக்க ... Read More »

சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை சர்வதேசத்திற்கு உணர்த்திய சவுதி அரசு

நீதி என்பது எதுவென்றால் நீதீ தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ளும் விதமானதே நீதி. இதுதான் நீதியின் அடிப்படையாகும். அதனால் தான் குற்றவாளிகள் இலேசாக தப்பித்துக் கொள்ளும் தற்கால சட்டங்களை “சட்டம் ஒரு இருட்டறை” என்று சொல்லும் வழமை உலகம் முழுவதும் இருப்பதைப் பார்க்கிறோம். சட்டம் சாமானியக்கு மாத்திரமே அதிகாரம் படைத்தவர்களுக்கில்லை என்பதே உலகின் அனைத்து நாட்டு சட்டங்களிலும் எழுதப்படாத விதியாக இருக்கிறது. மனித சட்டங்கள் ஓட்டைக் கொண்டதாகவும், குற்றவாளி தப்பித்துக் கொள்ளும் விதமானதாகவும் தான் காணப்படும் அதனால் தான் அந்த ஓட்டைகளை பயன்படுத்தி பெரும் ... Read More »

ஈராக் – சதாம் முதல் சில்காட் வரை

போர்களின் தேசம், அமைதியின்மையின் பிறப்பிடம், தீவிரவாதத்தின் நிரந்தர முகவரி போன்ற இன்னும் பல அடைமொழிகளினால் அழைக்கப்படும் தேசம் ஈராக். மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பலம் பொருந்திய நாடாகவும், நாகரீகத்தின் தொட்டிலாகவும் வியந்து பாராட்டப்பட்ட ஈராக், தற்போது அல்-காயிதா ISIS போன்ற தீவிரவாத அமைப்புகளின் தொட்டிலாக மாறியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா போன்ற வல்லாதிக்க சக்திகளுக்கு எதிராகவும், அண்டை நாடுகளின் வளர்சிக்கு போட்டியாகவும், கட்டமைப்பு சிதராத அரசாகவும் திகழ்ந்த ஈராக்கிய ஸதாம் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு சுமார் பத்தாண்டுகள் தாண்டி விட்டன. இந்நிலையில் ஈராக்கில் ... Read More »

போக்கோ ஹராம் – இயக்கத்தின் செயல்பாடுகள் இஸ்லாத்தின் பார்வையில் கண்டனத்திற்குரியவையே!

கடந்த சில வாரங்களுக்கு முன் நைஜீரியாவில் இயங்கும் போக்கோ ஹராம் என்றழைக்கப்படும் ஆயுதக் குழுவொன்று அந்நாட்டு பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் சுமார் 200 க்கும் அதிகமான மாணவிகளை கடத்திச் சென்றுள்ளது.  போக்கோ ஹராம் அமைப்பின் இந்த செயல்பாடுகள் உலக மட்டத்தில் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.  போக்கோ ஹராம் இஸ்லாமியவாத இயக்கமா? அல்லது ?  போக்கோ ஹராம் என்றழைக்கப்படும் குறித்த ஆயுத போராட்டக் குழு ஒரு இஸ்லாமிய இயக்கம் என்றும் அவர்கள் குறித்த மாணவிகளை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிவிட்டார்கள் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.  இந்த ... Read More »

இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு!

ஓர் இஸ்லாமிய அரசாங்கம் போர் செய்வது, அதற்குரிய தயாரிப்புகளைச் செய்வது, அந்தப் போரில் முஸ்லிம்கள் புறமுதுகு காட்டாமல் இருப்பது, போரில் வீர மரணம் அடைவது போன்ற போர் சம்பந்தமான பல்வேறு விஷயங்களைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. அதேசமயம், போர் ஏன்? எதற்கு? எப்படி? என்ற தெளிவான சட்டங்களையும் இஸ்லாம் வகுத்துள்ளது. வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்! உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். அல்குர்ஆன் 2:190 தமது உடன்படிக்கைகளை ... Read More »

சிரியாவில் நடப்பது உள்நாட்டுப் போர் அல்ல – கொள்கை சார்ந்த யுத்தம்.

மத்திய கிழக்கு நாடுகள் தொடங்கி எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களை அழிக்கும் படலம் நடை பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. ஈராக், ஆப்கானிஸ்தான், செச்னியா, சோமாலியா, பர்மா (மியன்மார்), பாகிஸ்தான், பலஸ்தீன், எகிப்து என முஸ்லிம்களுக்கு எதிரான யுத்தம் நடக்கும் நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அந்த வகையில் தற்போது சிரியாவிலும் முஸ்லிம்களை அழிக்கும் படலம் ஆரம்பமாகியுள்ளது.  முஸ்லிம்கள் தொடர்ந்தும் அழிக்கப்படுவது ஏன்? தொடர்ந்தும் பல நாடுகளில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு வருகின்றார்கள். தற்போது சிரியாவிலும் அதன் தொடர்ச்சி ... Read More »