LATEST
Home » கட்டுரைகள் » அழைப்பு – ஆசிரியர் தலைப்பு

அழைப்பு – ஆசிரியர் தலைப்பு

சிதறடிக்கப்படுமா சிறுபான்மைக் கனவுகள்? -அழைப்பு ஆசிரியர் பக்கம்

மஹிந்த சிந்தனை மண்ணை கவ்வுவதற்கு மூல முதற் காரணம், சிறுபான்மை சமூகத்தின் இருப்பிலும், உரிமைகளிலும் மஹிந்த அரசு கைவைத்து சீண்டிப்பார்க்க எத்தனித்தமை என்பது உலகமே ஒத்துக் கொண்ட பேருண்மை. உரிமைகள் பறிக்கப்பட்டு உணர்வுகள் அடக்கப்படும் எந்தவொரு சமூகமும் தன் இறுதி மூச்சை உள்ளிழுப்பதற்காய் எஞ்சியுள்ள மொத்த பலத்தையும் ஒன்றுதிரட்டி முழுவீச்சுடன் வெகுண்டெழுவது இயல்பானதே. ஒரு சமூகத்தின் இருப்பை தக்கவைக்க எடுக்கும் இறுதிப்பிரயத்தனம் இமைய மலையையும் துகள் துகளாய் தகர்க்கும் பலம் கொண்டது என்பதுவே யதார்த்தம். இப்படியானதொரு சிறுபான்மை இனங்களின் மீளெழுச்சியின் விளைவால் மாண்டுபோன அரசுகளின் ... Read More »

கருகும் மொட்டுக்களை காப்பதற்கு என்ன வழி?

இலங்கை ஆசியாவின் ஆச்சரியமான தேசமாக மாறியதோ இல்லையோ அண்மைக்காலமாக ஆபாசத்தினதும், அனாச்சாரத்தினதும் அடிமை தேசமாக மாறிவருவது ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அம்சமாகும். 2015 ஆம் ஆண்டில் உலகளவில் ஆபாச இணையதளங்களை அதிகம் பார்வையிட்ட நாடுகள் வாpசையில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளமை இந்நாட்டின் ஒழுக்க விழுமியம் சிதைந்து வருவதனையே பிரதிபலிக்கின்றது. இலங்கையில் உத்தியோகப் பூர்வ அறிக்கையின் படி 47000 விபச்சாரிகள் உள்ளதோடு, இவர்களை நாடி நாளாந்தம் 94000 ஆண்கள் விபச்சாரத்திற்காய் சென்று வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பாக விபச்சாரிகள் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் தமக்கு சிறப்பு ... Read More »