LATEST
Home » அறிவியல்

அறிவியல்

டெங்கு நுளம்பும், தவளை வளர்ப்பும் – டெங்கு நோயை தடுக்க இஸ்லாம் சொல்லும் எளிய வழி

டெங்கு நுளம்பின் தாக்கம் காரணமான இலங்கையின் பல பாகங்களிலும் டெங்கு காய்சல் ஏற்பட்டு மரணங்கள் சம்பவித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் டெங்குவை கட்டுப்படுத்த சுற்றுச் சூழல் தூய்மை தொடர்பாக விளிப்புணர்வுகள் நடைபெற்று வருகின்றன. சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருத்தல் டெங்கு நோய் பரவாமல் இருப்பதற்கு முக்கிய காரணியாக இருந்தாலும், சூழல் அடிக்கடி மாசடையாமல் இருக்கும் வகையிலான நிரந்தர தீர்வுகளையே நாம் முன்னெடுக்க வேண்டும். தவளைகள் எண்ணிக்கை  குறைந்ததால் கொசு மற்றும் நுளம்புகள் கட்டுக்கடங்காமல் பெருகி டெங்கு உள்ளிட்ட நோய்கள்  வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல்  ஆர்வலர்கள் ... Read More »

காலப் பயணம் (Time Travel) சாத்தியமா?

எல்லோரும் பல  வகை பயணங்கள் செல்வதுண்டு, ஆனால் காலப்பயணம் (Time Travel)  என்று சொன்னால் பலருக்கு அதில் ஒரு ஆசை,  சுவாரஷ்யம், விறுவிறுப்பு தொற்றிக் கொள்ளும். காரணம் மனிதனின் ஆழ்மனதிலுள்ள ஆசைகள், படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் ஒருவர் எதிர் காலத்திற்கும், கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திலிருந்தே சென்று வரலாம் அல்லது நேரத்தை உறைய வைக்கலாம், பல நாட்கள் இளமையாக வாழலாம் என்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது? பொதுவாக காலப்பயணம் தொடர்பான கருத்துக்கள் பிரபலமானது 1895 ஆம் ஆண்டு H.G.வெல்ஸ் என்பவர் எழுதிய ‘கால ... Read More »

உலகம் அழிவது நிச்சயம் – பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்

உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் நேர்வழிகாட்டியாக இறைவனால் கொடுக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தின் செய்திகள் தினந்தோறும் நவீன அறிவியலாளர்களினால் உண்மைப் படுத்தப்பட்டு வருகின்ற காட்சிகளை கண்டு வருகின்றோம். அந்த வகையில் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளின் ஒன்றான உலக அழிவு தொடர்பில் நவீன விஞ்ஞானம் பல புதிய தகவல்களை தந்த வண்ணமே உள்ளது. அண்மையில் லண்டன் BBC செய்திச் சேவை நடத்திய ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல விஞ்ஞானியும், அறிவியல் மேதையுமான பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் உலக அழிவு என்பது நிச்சயமான ஒன்று தான் ... Read More »

தாடி வளர்ப்பதினால் ஏற்படும் ஆன்மீக, அறிவியல் நன்மைகள்.

இன்று தாடி வைக்கும் ஆண்களின் எண்ணிக்கை முஸ்லிம்கள் மத்தியிலும் குறைந்து வருவதைக் காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய இளைய சமுதாயத்தினர் உலக நடைமுறைக்கு அமையவே (fashion) தாடி வைக்கின்றனர். ஒவ்வொரு விதமான நவீன வடிவங்களில் (styles) தலை முடிகளை வெட்டுவது போல் தாடிகளையும் ஒவ்வொரு நவீன வடிவங்களில் வடிவமைத்து அந்நிய கலாசாரத்திற்கு ஒப்பாக நடந்து கொள்கின்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையே சார்ந்தவர். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) ஆதாரம்: அபூதாவூத் 3512 இஸ்லாத்தின் பார்வையில் தாடி.  ... Read More »

அல்குர்ஆனும், பிரபஞ்ச தோற்றத் தத்துவமும்.

பிரபஞ்சம் தோன்றியது எவ்வாறு? எந்த ஒரு பொருளானாலும் அதற்கு ஒரு ஆரம்பமும், ஒரு முடிவும் இருப்பது நியதி. இது பொருட்களுக்கு மட்டுமல்லாது உயிரினங்களுக்கும் உள்ள பொதுவான நியதி. இவ்வனைத்தின் உருவாக்கத்திற்கும் படைப்பாளன் ஒருவன் கட்டாயம் இருந்தே ஆக வேண்டும். அப் படைப்பாளனுக்கு தொடக்கமும், முடிவும் இருக்கவே கூடாது. அப்படி இருந்தால் படைப்பாளனுக்கு படைப்பாளன், படைப்பாளனுக்கு படைப்பாளன்,படைப்பாளனுக்கு படைப்பாளன்……. என்ற அர்த்தமில்லாத முடிவிலி ஆன ஒரு சங்கிலித் தொடர்  ஏற்படும். எனவே, இதிலிருந்து நிச்சயமாக ஒரு படைப்பாளன் இருக்கின்றான் என்று எந்தவித சந்தேகமும் இன்றி புலனாகின்றது. இப்பொழுது அவனை எவ்வாறு அறிந்து கொள்வது என்ற ... Read More »

ஓரங்களில் குறையும் பூமியும், குர்ஆனின் புவியியல் கல்வியும்.

காலம் கடந்து செல்லச் செல்ல, விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் அதிகரிக்க அதிகரிக்க அல்குர்ஆனின் நம்பகத் தன்மையும், அது இறைவனின் வார்த்தைகள் தான் என்ற அசைக்க முடியாத உண்மையும் மேலோங்கிக் கொண்டே போகின்றது. அல்லாஹ் தன் வார்த்தையான அல்குர்ஆனில் குறைந்து கொண்டு வரும் பூமியின் நிலப்பரப்பைப் பற்றி பேசுகின்றான். பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை. அவன் விரைந்து விசாரிப்பவன்.  (அல்குர்ஆன் 13:41) அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம். ”பூமியை அதன் ஓரப் பகுதிகளில் ... Read More »

உலகை அச்சுறுத்தும் தூக்கமின்மை – ஓர் அறிவியல், ஆன்மீகப் பார்வை.

பகலில் ஓடியாடி திரியும் மனிதன் இரவிலே தூக்கத்தினால் சுருங்கி விடுகின்றான். இயங்கிக் கொண்டிருக்கும் உடம்பிட்கு ஓய்வு என்பது தேவையான ஒன்றாகும். பகலில் கடன் சுமையால் அல்லல் படுபவன் கூட, இரவில் தன்னை மறந்து நிம்மதியாக தூங்குகின்றான். சுருக்கமாகச் சொன்னால் தூக்கம் என்பது இறைவன் நமக்களித்த அருளாகும். அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், உறக்கத்தை ஓய்வாகவும், பகலை இயங்குவதற்காகவும் அமைத்தான். (அல்குர்ஆன் – 25: 47) அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன், இரவை அமைதிக் களமாகவும், சூரியனையும், சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். (அல்குர்ஆன் – ... Read More »