LATEST
Home » அரசியல்

அரசியல்

  மியன்மார் – கொன்று எரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்

-ஆங்சான் சூசியின் கல்ல மவுனத்தை களைத்தது BBC மியன்மர் என்று அழைக்கப்படும் பர்மாவில் கடந்த பல வருடங்களாக ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய தாக்குதல்கள் அந்நாட்டு அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக அஸின் விராது என்ற தேரரின் தலைமையிலான 969 இயக்கம் (969 Movement) கடந்த காலங்களில் பாரிய தாக்குதல்களையும், அத்துமீறல்களையும் மேற்கொண்டது. சிறுவர்கள் குழந்தைகள், வயோதிபர்கள் என்று யாரையும் விட்டு வைக்காது அனைவர் மீதும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை இவர்கள் முன்னெடுத்தார்கள். “அகிம்சை பேசும் பௌதம் எம் மதம்” என்று சொல்லிக் ... Read More »

1000ம் நாட்களாகியும் நீதி இல்லை, அலுத்கமை கலவரம் ஓர் மீள்பார்வை

பல தரப்பட்ட இனங்களையும், மொழி பேசுவோரையும், பல் மதங்களை பின்பற்றுவோரையும் கொண்ட ஒரு நாடு இலங்கையாகும். இலங்கையின் சமுதாயப் பரம்பலில் இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளாக இருக்கிறார்கள். ஆரம்ப காலம் முதல் இலங்கையின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பையும், நாட்டின் அபிவிருத்தியில் பாரிய செல்வாக்கையும் செலுத்தி வரும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அவ்வப்போது பேரினவாதிகளினால் கலவரங்கள் நடத்தப்பட்டு முஸ்லிம்களின் உயிர், உடமைகள் அழிக்கப்பட்டுள்ளது வரலாறு. இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட பல கலவரங்களில் அதிகமானவை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்கள் தான் என்பதில் எவ்வித ஐயமும் ... Read More »

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினையும், தீர்வும்.

உலக நாடுகளின் பலவற்றில் இல்லாத ஒரு சிறப்புச் சழுகையாக இலங்கையில் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. CWW கண்ணங்கரவின் முயற்சியினால் இந்த இலவச கல்வித் திட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் இவரே இலவச கல்வியின் தந்தையாகவும் வரலாற்றில் பேசப்படுகிறார். உலகின் பல வளர்ந்த நாடுகள், வளர்முக நாடுகளில் கூட இல்லாத இலவச கல்வித் திட்டத்தை கடந்த பல்லாண்டுகளாக இலங்கை நடைமுறைப் படுத்தி வருகிறது. இலங்கை மக்கள் தொகையில் 90 சதவீதமானவர்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருப்பதற்கும் இதுவொரு பெரும் காரணமாக அமைந்திருக்கிறது. மழைக்குக் கூட பாடசாலைப் பக்கம் ... Read More »

சிதறடிக்கப்படுமா சிறுபான்மைக் கனவுகள்? -அழைப்பு ஆசிரியர் பக்கம்

மஹிந்த சிந்தனை மண்ணை கவ்வுவதற்கு மூல முதற் காரணம், சிறுபான்மை சமூகத்தின் இருப்பிலும், உரிமைகளிலும் மஹிந்த அரசு கைவைத்து சீண்டிப்பார்க்க எத்தனித்தமை என்பது உலகமே ஒத்துக் கொண்ட பேருண்மை. உரிமைகள் பறிக்கப்பட்டு உணர்வுகள் அடக்கப்படும் எந்தவொரு சமூகமும் தன் இறுதி மூச்சை உள்ளிழுப்பதற்காய் எஞ்சியுள்ள மொத்த பலத்தையும் ஒன்றுதிரட்டி முழுவீச்சுடன் வெகுண்டெழுவது இயல்பானதே. ஒரு சமூகத்தின் இருப்பை தக்கவைக்க எடுக்கும் இறுதிப்பிரயத்தனம் இமைய மலையையும் துகள் துகளாய் தகர்க்கும் பலம் கொண்டது என்பதுவே யதார்த்தம். இப்படியானதொரு சிறுபான்மை இனங்களின் மீளெழுச்சியின் விளைவால் மாண்டுபோன அரசுகளின் ... Read More »

இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு!

ஓர் இஸ்லாமிய அரசாங்கம் போர் செய்வது, அதற்குரிய தயாரிப்புகளைச் செய்வது, அந்தப் போரில் முஸ்லிம்கள் புறமுதுகு காட்டாமல் இருப்பது, போரில் வீர மரணம் அடைவது போன்ற போர் சம்பந்தமான பல்வேறு விஷயங்களைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. அதேசமயம், போர் ஏன்? எதற்கு? எப்படி? என்ற தெளிவான சட்டங்களையும் இஸ்லாம் வகுத்துள்ளது. வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்! உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான். அல்குர்ஆன் 2:190 தமது உடன்படிக்கைகளை ... Read More »

எதிர்காலத்தை அறியும் ஆற்றல் மனித மூலைக்கு உள்ளதா? இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் ஆய்வு முடிவு.

கனவு காணாத மனிதர்களே உலகில் இல்லை. இருக்கவும் முடியாது. கனவுகள் என்பது மனித வாழ்வில் ஓர் அங்கமாக மாறி விட்டது. நாம் கானும் கனவுகளுக்கும் மனித மூலைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நவீன அறிவியல் கண்டு பிடிப்பொன்று கூறுகின்றது. எதிர்காலத்தை அறியும் ஆற்றல் மனித மூளைக்கு உள்ளதா? மனித மூளை எப்போதும் விசித்திரமானது. அதன் முழுமையான செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பல விசித்திரங்களுக்கு இன்னும் விடை கிடைத்த பாடில்லை. நாம் தூங்கும் போது மூளையும் நம்முடனே சேர்ந்து தூங்குவதாகத்தான் பலரும் ... Read More »

அமெரிக்காவில் மூன்று முஸ்லிம் மாணவர்கள் படுகொலை – மௌனம் காக்கும் ஊடகங்கள்

முஸ்லிம் செய்தால் தீவிரவாதம் முஸ்லிம் அல்லாதவர்கள் செய்தால் ஜனநாயகமா? ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி முஸ்லிம் அல்லாத ஒருவரை கொலை செய்தால், துப்பாக்கிச் சூடு நடத்தினால், ஏன் துப்பாக்கி ஒன்றை வைத்துக் கொண்டிருந்தாலே முஸ்லிம் தீவிரவாதி என்று தீவிரவாத பட்டம் சூட்டி தீர்ப்பு சொல்லி முடிக்கும் மேற்கு ஊடகங்கள், இதுவே ஒரு முஸ்லிமை முஸ்லிம் அல்லாத ஒருவர் தாக்கினாலோ, சுட்டுக் கொலை செய்தாலோ அமைதி காக்கும் நிலையே காணப்படுகின்றது. இது மீடியாக்களின் வக்கிரப் புத்தியையும், இஸ்லாமிய எதிர்ப்பு உணர்வுகளையும் தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றது. ... Read More »

நான் போகவிரும்பவில்லை, ஆனாலும் போகிறேன் – கடிதத்திலேயே மஹிந்தவின் காலில் விழும் “பச்சோந்தி” பஷீர் சேகுதாவுத்.

பாராளுமன்றத்திலேயே தங்கள் காலம் கழிய வேண்டும், சாகும் வரை MP க்களாக, அமைச்சர்களாக வாழ வேண்டும் என்ற அடிமட்ட, அசிங்கப்பட்ட அரசியல் வாழ்வுக்காக படைத்த இறைவனையும், அவனது ஆற்றல், சக்திகளையும் மறந்து, வாக்களித்த மக்கள் நலனையோ, முஸ்லிம் சமுதாயத்தின் நலனையோ கிஞ்சிற்றும் யோசிக்காது வாழும் ஜடங்கள் எத்தனையோ இலங்கை பாராளுமன்றத்தில் ஜனாஸாக்களாக இருப்பதை யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது. எதிர்வரும் 08 ம் தேதி இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள இந்நேரத்தில் ஆளும் தரப்பிலிருந்து சுமார் 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் பொது வேட்பாளர் மைத்ரிபால ... Read More »

இலங்கையின் அரசியல் வரலாற்றை மாற்றி மைத்திரியை ஜனாதிபதியாக்கிய சிறுபான்மை வாக்குகள்

கடந்த 08.01.2015 அன்று இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்புகள் நாடளாவிய ரீதியில் 12314 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெற்றது. 1 கோடியே , 55 இலட்சத்து 4ஆயிரத்து 490 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றிருந்தனர். 2014 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்குமே கடுமையான போட்டி நிலவியது. ... Read More »