LATEST
Home » மறுப்புகள்

மறுப்புகள்

காட்போட் போராளிகளின் கவனத்திற்கு! – S.H.M இஸ்மாயீல் ஸலபியின் கற்பனை கதைகளுக்கு பதில்

-கருத்து சொல்வதற்கு முன் காரியமாற்ற கற்றுக் கொள்ளுங்கள். JASM – ஜமாஅத் அன்சார் சுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பின் உத்தியோகபூர்வ பத்திரிக்கையான “உண்மை உதயம்” என்ற பத்திரிக்கையில் “இனவாதப் பேயின் கோரமுகம் மீண்டும் இலங்கையில்” என்ற தலைப்பில் அவ்வமைப்பின் பிரதான பேச்சாளரும், பத்திரிக்கை ஆசிரியருமான இஸ்மாயீல் ஸலபி என்பவர் கட்டுரை ஒன்றை (ஆசிரியர் தலையங்கம்) வெளியிட்டுள்ளார். குறித்த ஆக்கத்தில் இலங்கையில் நடைபெற்று வரும் இனவாத செயல்பாடுகள் தொடர்பில் விபரித்து விட்டு, தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 03.11.2016 அன்று GSP+ வரிச்சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் ... Read More »

இலங்கை வெள்ளம் – மானுடமே வென்றது – ஆனந்த விகடன் இதழுக்கு பதில்

தலைப்பை சரியாக அமைத்து செய்தியை பொய்யாகத் தொகுத்த ஆனந்த விகடன் இலங்கை வெள்ளம் பற்றி ஆனந்த விகடன் வெளியிட்ட பொய்யான செய்திகள் தொடர்பில் உணர்வு வார இதழில் வெளியிடப்பட்ட மறுப்பு ஆக்கம். – தொகுப்பு: ரஸ்மின் MISc இலங்கையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் தற்போது வடிய ஆரம்பித்துள்ள இவ்வேலையில் இனவாதம், பிரதேசவாதம் போன்ற குரோத எண்ணங்களும் குப்பையோடு குப்பையாக சேர ஆரம்பித்து விட்டது.  வெள்ளம் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பாதிக்கப் பட்டவர்களுக்காக பலரும் உதவி செய்து வருகின்றார்கள். ... Read More »

நபித் தோழர்கள் சூனியத்தை நம்பினார்களா?

சூனியத்தினால் எந்த தாக்கத்தையும் உண்டாக்க முடியாது. சூனியத்தினால் தாக்கத்தை உண்டாக்க முடியும் என்று நம்புவது இணைவைப்பு, நல்லது கெட்டது எது நடந்தாலும் அது இறைவன் புறத்தினால் தான் ஏற்படுமே தவிர அதனைத் தாண்டி யாரும் யாருக்கும் எவ்வித தீங்குகளையும் செய்து விட முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். அல்லாஹ் தனக்கு ஏராளமான பண்புகள் இருப்பதாக திருமறைக் குர்ஆனில் நமக்குக் கற்றுத் தருகின்றான். அந்தப் பண்புகளில் ஏதாவது ஒன்று இறைவனுக்கு இருப்பதைப் போல் மனிதனுக்கும் உள்ளது என்று நம்புவது பகிரங்க இணை வைத்தலாகும். அப்படியொருவர் ... Read More »

போரின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய் சொன்னார்கள் என்று நாம் சொல்வது பொய்யா?

– உளறல்களுக்கு உண்மை விளக்கம்! சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு ரமலானில் தொடர் உரை நிகழ்த்திய போது ஒரு செய்தியை மேற்கோள்காட்டி பேசியிருந்தார். மூன்று சந்தர்ப்பங்களில் பொய் பேச நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்கள் என்று சொல்லி கீழ்க்கண்ட ஹதீஸை குறிப்பிட்டார். உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இரு தரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) ... Read More »

கப்ரு வணங்கிகளின் சூழ்ச்சியை வென்ற சிங்கள மொழியில் அல்-குர்ஆன் வெளியீடு -அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் சிங்கள மொழியிலான அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வை தடுத்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முயன்றவர்களின் முகத்திரையைக் அல்லாஹ் கிழித்தெரிந்தான். இலங்கை முஸ்லிம் வரலாற்றின் முக்கிய நிகழ்வு சிங்களம் பேசும் பெரும்பான்மை பௌத்த மக்களைக் கொண்ட இலங்கைத் திருநாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்கள், பிரச்சாரங்கள் முன்னெடுக்கப் பட்டு, உலக ... Read More »