LATEST
Home » கேள்வி பதில்

கேள்வி பதில்

வெள்ளிக்கிழமை அன்று அரபா நோன்பு வைக்கலாமா?

துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு நோற்குமாறு நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இதற்கு நன்மையையும் குறிப்பிட்டுள்ளார்கள்.   صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع – (3 / 167) قَالَ وَسُئِلَ عَنْ صَوْمِ يَوْمِ عَرَفَةَ فَقَالَ « يُكَفِّرُ السَّنَةَ الْمَاضِيَةَ وَالْبَاقِيَةَ ».   துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி ... Read More »

பொருளாதாரத்தின் நன்மைகளும் தீமைகளும் – முரண்பட்ட இரு பார்வைகள்

பொருளாதாரத்தைக் குறித்து இரண்டு வகையான பார்வைகள் உலக மக்களிடம் உள்ளன. சொத்துக்களைத் திரட்டுவதிலும், வசதி வாய்ப்புக்களைப் பெருக்கிக் கொள்வதிலும் ஒருவர் ஈடுபட்டால் அவர் ஆன்மிகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியாது; கடவுளின் அன்பையும் அருளையும் பெற வேண்டுமென்றால் இவ்வுலகின் வசதி வாய்ப்புக்களைத் துறந்து விட வேண்டும்; இலை தழைகளைச் சாப்பிட்டுக் கொண்டு இறைவனுக்காக வாழ வேண்டும். அதுதான் உயர்ந்த நிலையென்பது ஒரு பார்வை. பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக உழைக்காமல் பிச்சை எடுத்துப் பிழைப்பு நடத்தும் போலி ஆன்மிகவாதிகளின் பார்வை இவ்வாறு இருப்பது ஆச்சரியமானதல்ல. பொருள் திரட்டுவதில் ... Read More »

கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியுண்டா?

முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதிகளில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமில்லை. மற்ற சமுதாய மக்களுடன் கலந்து வாழும் போது அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லி அன்பைப் பகிர்ந்து கொள்வதால் நாமும் அதற்கேற்ப நடக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இது போன்ற பண்டிகைகளில் நமக்கு உடண்பாடு இல்லாவிட்டாலும் நாம் வாழ்த்துச் சொல்லாவிட்டால் நம்மை மத வெறியர்களாக அவர்கள் கருதும் நிலை ஏற்படும். நாளை சத்தியத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்கும் இது தடையாக அமைந்து விடும் என்பதன் காரணமாகவே இது குறித்து கேள்விகள் ... Read More »

கிறிஸ்மஸ் விருந்தை உண்ணலாமா?

நாளை (25.12.2016) உலக கிருத்தவ மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட இருக்கிறார்கள். இந்நிலையில் இஸ்லாமியர்கள் கிறிஸ்மஸ் தினத்தில் கிருத்தவ நண்பர்கள் தரும் உணவுகளை உண்ண முடியுமா? என்பதைப் பற்றி நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். ஆகுமான உணவுப் பொருட்களை மாற்று மதத்தினர் நமக்கு அளித்தால் அதை உண்பது தவறல்ல. எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் பயன்படுத்தக் கூடாது. பன்றி இறைச்சி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத பிராணியின் இறைச்சி தானாக செத்தவை இரத்தம் மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக ... Read More »

ஸக்காத்தை ரமழானுக்குப் பின் கொடுக்களாமா?

ஒருவருக்கு சக்காத் கொடுக்க நினைத்த பணத்தை ரமழான் மாதத்தில் கொடுக்காமல் அதை பேங்க் ஒன்றில் தேபோசிட் செய்து பிறகு அந்த பணத்துக்கான தேவை அவர்களுக்கு வரும் பொது அதை மீள எடுத்து கொடுக்க Mudiyuma thayavusithu pathil தரவும். Nawass, srilanka,Eravur. பதில் :   ஸக்காத் என்பது ஸகாத் என்ற அரபி வார்த்தைக்கு வளர்ச்சியடைதல், அதிகமாகுதல், தூய்மைப்படுத்துதல் போன்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஒருவன் கடமையாக்கப்பட்ட இந்த ஸகாத்தை வழங்குவதின் மூலம் அவனுடைய செல்வமும் உள்ளமும் பரிசுத்தமாகிறது. அல்லாஹ் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் ... Read More »

தங்கத்திற்கான ஸகாத்தின் அளவு என்ன?

தங்கம் பற்றிய ஜக்காதின் சட்டத்தினை தயவு செய்து விளக்கவும்? – mohidin farhan – uk பதில் : இஸ்லாம் வசதியுள்ளவர்கள் மீது ஸக்காத் என்ற ஒரு கடமையை விதித்திருக்கிறது. இந்தச் சட்டம் சில சந்தப்பங்களில் வித்தியாசப்படும். கால்நடைகளுக்கு ஸகாத். விளை நிலங்களுக்கு ஸகாத். மானாவரியாக விளைபவற்றுக்கு ஸக்காத். தங்கம், வெள்ளிக்கு ஸக்காத், என்ற பலவிதமான ஸக்காத் முறைகளை இஸ்லாம் பிரித்துப் பிரித்து விளக்குகின்றது. இதில் தங்கத்திற்குறிய ஸக்காத் என்ன என்பதுதான் உங்கள் கேள்வியாகும். தங்கத்திற்கு இரண்டரை சதவீதம் ஸக்காத் கடமையாகும். அதாவது 11 பவுன் ... Read More »

“கசகசா” மார்க்கதில் அனுமதிக்கப்பட்டதா?

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் “கசகசா” என்ற பொருள் ஒரு போதைப் பொருளாகும். இதைப் பற்றிய விளக்கத்தை பார்ப்போம். கசகசா வை ஆங்கிலத்தில் Opium Pappy என்று சொல்லப்படும். இந்த பப்பி விதை எனப்படும் கசகசா என்பது பப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால் விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது அதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது அந்த விதைப் பையைக் கீறி அதிலிருந்து ... Read More »

பெண்ணின் கல்யாண செலவுக்காக ஸக்காத் கொடுக்கலாமா?

அல்லாஹ்வின் திருப்பெயரால் …அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்மதுல்லாஹ்).ஜகாத் யாருக்கு கொடுக்க கடமை பட்டவர்கள்?ஜகாத் ஒரு பெண்ணின் கல்யாண செலவுக்காக கொடுத்தால் ஜக்காதில் சேருமா அல்லது சதக்காவில் சேருமா?விளக்கம் தரவும்.  – ABDUL GHANI , U.A.E பதில் : ஸக்காத் எட்டுக் கூட்டத்தினருக்கு உரியது என்று திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உஹ்ள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன் (அல்குர்ஆன் 9:60) யாசிப்பவர்கள் 2. ஏழைகள். ... Read More »