LATEST

2017

1000ம் நாட்களாகியும் நீதி இல்லை, அலுத்கமை கலவரம் ஓர் மீள்பார்வை

பல தரப்பட்ட இனங்களையும், மொழி பேசுவோரையும், பல் மதங்களை பின்பற்றுவோரையும் கொண்ட ஒரு நாடு இலங்கையாகும். இலங்கையின் சமுதாயப் பரம்பலில் இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளாக இருக்கிறார்கள். ஆரம்ப காலம் முதல் இலங்கையின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பையும், நாட்டின் அபிவிருத்தியில் பாரிய செல்வாக்கையும் செலுத்தி வரும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அவ்வப்போது பேரினவாதிகளினால் கலவரங்கள் நடத்தப்பட்டு முஸ்லிம்களின் உயிர், உடமைகள் அழிக்கப்பட்டுள்ளது வரலாறு. இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட பல கலவரங்களில் அதிகமானவை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்கள் தான் என்பதில் எவ்வித ஐயமும் ... Read More »

குற்றங்கள் இரு வகை

தலைப்பை பார்த்தவுடன் என்னடா உலகில் பலவகை குற்றங்கள் நடந்துகொண்டிருக்க அதென்ன இருவகை என்று உங்கள் மனதில் தோன்றலாம். அது வேறொன்றுமல்ல, இன்றைய மீடியாக்களின் பார்வையே. இலங்கை மட்டுமல்லாது உலக மீடியாக்களின் கோணமும் இதுவே. முஸ்லிம்கள் செய்யும் குற்றம் ஒருவகை, முஸ்லிம் அல்லாதவர்கள் செய்யும் குற்றம் இன்னொரு வகை. முஸ்லிம்கள் செய்யும் குற்றங்களை தூக்கலாகவும், கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்திகளாகவும் பதியப்படுவது ஒருபுறமும், முஸ்லிம் அல்லாதவர்கள் செய்தால் போகிற போக்கில் ஒரு தகவலாகவும், கொசுறுச் செய்தியாகவும் பதியப்படுவது மறுபுறம். அந்த வகையில் நாம் அனைவரும் அறிந்த ... Read More »

பௌத்த துறவியாக மாறிய முஸ்லிம் சிறுவன் – சமுதாயத்தின் மீதுள்ள பொறுப்பு என்ன?

பௌத்த துறவியாக மாறிய முஸ்லிம் சிறுவன் – சமுதாயத்தின் மீதுள்ள பொறுப்பு என்ன? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கை பெற்றெடுக்கிறதோ அதே போல் எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதைப் போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிருத்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் நூல்: புகாரி ... Read More »

GSP+ வரிச்சலுகை வாய்ப்பும், எழும் ஐயங்களும்

இலங்கையின் உற்பத்திப் பொருட்களை ஐரோப்பிய யூனியன் பங்குச் சந்தைகளில் விற்பனைக்கு விடும் போது குறிப்பிட்ட பொருட்களுக்கான தீர்வை வரியில் சில சலுகைகள் வழங்கப்படுவதே GSP+ வரிச்சலுகை எனப்படுகிறது. இச்சலுகையானது 2010 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் எனும் பயங்கரவாத அமைப்பினருக்கெதிரான இறுதி யுத்தத்தின் போது மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மனித உரிமைகளை மீறும் விதமாக நடந்து கொண்டது என்பதனை காரணமாக வைத்து ஐரோப்பிய யூனியனினால் நிறுத்தப்பட்டது. இவ்வரிச்சலுகை கிடைக்காமை போனமை இலங்கைக்கான வருமானத்தில் குறிப்பிடத்தக்க அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதனை மறுப்பதற்கில்லை. இச்சலுகை மீள கிடைக்கும் பட்சத்தில் ... Read More »

“மூழ்கடியுங்கள் ஆனால் சாகக் கூடாது” – அமெரிக்காவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் “வோட்டர் போட்டிங்” சித்தரவதை

குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டு வருவதற்காக அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் சித்தரவதை முறைகளில் “வோட்டர் போட்டிங்” மிகவும் அபாயகரமானதாகும். உலக வல்லரசு நாடுகளில் மிக முக்கியமான நாடாகவும், அனைத்து நாடுகளையும் விட அதிக ஆயுத பலத்த கொண்டதாகவும் அறியப்படும் அமெரிக்காவில் கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஹிலாரி க்லின்டனை தோற்கடித்து வெற்றி பெற்றார் டொனால்ட் டிரம்ப். தேர்தல் பரப்புரையின் போதே பல சர்சைகளை உண்டாக்கியவர் என்று ஊடக விமர்சனத்திற்கு உள்ளானவர் டிரம்ப். அகதிகளை வெளியேற்றுதல், முஸ்லிம் நாடுகளுடனான அமெரிக்காவின் தொடர்பை துண்டித்துக் கொள்ளுதல், அமெரிக்க ... Read More »