LATEST
Home » எழுத்தாளர்கள் » ரஸ்மின் MISc

ரஸ்மின் MISc

இப்தாரின் பெயரில் பள்ளியில் “பன” ஓதுபவர்கள், சிலையை வைத்து வணங்கினாலும் ஆச்சரியமில்லை.

இலங்கையில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுள்ள இனவாத சூழ்நிலை காரணமாக, இனவாதத்தை இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் அணுகி, உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ள தெரியாத அல்லது விரும்பாத முஸ்லிம் (பெயர் தாங்கி) தலைவர்கள் மத நல்லிணக்கம் என்ற பெயரில் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டல்களையும் தூக்கியெறிந்து விட்டு வழிகேட்டின் உச்சத்திற்கே சென்று உயிர் பிச்சை கேட்க்கும் அவலம் இலங்கையில் நடந்தேறுகிறது. இனவாதத்திற்கு பயந்து, இஸ்லாத்தை விட்டுக் கொடுப்பது. கொள்கையை விட்டுக் கொடுப்பது. குர்ஆன், சுன்னாவின் வழிகாட்டல்களை புறக்கணிப்பது. சிலைகளுக்கு சேவகம் செய்வது. பன்சலைகளையும், ... Read More »

  மியன்மார் – கொன்று எரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள்

-ஆங்சான் சூசியின் கல்ல மவுனத்தை களைத்தது BBC மியன்மர் என்று அழைக்கப்படும் பர்மாவில் கடந்த பல வருடங்களாக ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய தாக்குதல்கள் அந்நாட்டு அரசாங்கத்தினாலேயே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக அஸின் விராது என்ற தேரரின் தலைமையிலான 969 இயக்கம் (969 Movement) கடந்த காலங்களில் பாரிய தாக்குதல்களையும், அத்துமீறல்களையும் மேற்கொண்டது. சிறுவர்கள் குழந்தைகள், வயோதிபர்கள் என்று யாரையும் விட்டு வைக்காது அனைவர் மீதும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை இவர்கள் முன்னெடுத்தார்கள். “அகிம்சை பேசும் பௌதம் எம் மதம்” என்று சொல்லிக் ... Read More »

1000ம் நாட்களாகியும் நீதி இல்லை, அலுத்கமை கலவரம் ஓர் மீள்பார்வை

பல தரப்பட்ட இனங்களையும், மொழி பேசுவோரையும், பல் மதங்களை பின்பற்றுவோரையும் கொண்ட ஒரு நாடு இலங்கையாகும். இலங்கையின் சமுதாயப் பரம்பலில் இலங்கை முஸ்லிம்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளாக இருக்கிறார்கள். ஆரம்ப காலம் முதல் இலங்கையின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பையும், நாட்டின் அபிவிருத்தியில் பாரிய செல்வாக்கையும் செலுத்தி வரும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக அவ்வப்போது பேரினவாதிகளினால் கலவரங்கள் நடத்தப்பட்டு முஸ்லிம்களின் உயிர், உடமைகள் அழிக்கப்பட்டுள்ளது வரலாறு. இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட பல கலவரங்களில் அதிகமானவை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரங்கள் தான் என்பதில் எவ்வித ஐயமும் ... Read More »

காமுகர்கள் தினமே பெப்ரவரி 14 என்பதை உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள்

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14ம் தேதி “காதலர் தினம்” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இளைஞர்கள், யுவதிகளுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கும் இத்தினத்தில் காதலர்கள் தமது காதலை (?) கொண்டாடுவதும், புதிய காதலர்கள் தமது காதலிக்கு அல்லது காதலனுக்கு காதலை வெளிப்படுத்துவதும் நடைபெற்று வருகிறது. காதலர் தினத்தைப் பொருத்த வரையில் இதுவொரு பாரிய சீரழிவை சமுதாயத்தில் தோற்றுவிக்கும் விஷக் கிருமி என்பதே யதார்த்தமாகும். காதல் என்ற பெயரில் சல்லாபத்தில் ஈடுபடுவோருக்கு அங்கிகாரம் வழங்குவதற்காகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது. பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் ... Read More »

ஆபாசத்தின் கூடாரங்களாக மாறும் பாடசாலைகள் – தீர்வு என்ன?

கடந்த பெப்ரவரி 2017ல் கொழும்பு பகுதியை சேர்ந்த சிங்கள மொழி மூல பாடசாலை ஒன்றில் நடைபெற்ற மாணவ, மாணவிகள் சிலரின் காமக் கழியாட்டங்கள் இணையதளங்களில் வெளியாகி அனைவரினதும் கையடக்க தொலை பேசிகளிலும் முக்கிய காட்சியாக இடம் பிடித்ததுடன் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் யூடியுப் போன்ற சமூக வலை தளங்களிலும் வைரலாக பரவிய காட்சிகளை பார்த்திருப்பீர்கள். கல்வி, ஒழுக்கம், நேர்மை மற்றும் நல்ல பண்புகளை கற்று நாட்டின் நற்பிரஜைகளாக உருவெடுக்க வேண்டிய இளைஞர்கள் பாடசாலைக்குள்ளேயே அதுவும் பாடசாலை, பாட நேரத்திலேயே அசிங்கமாக நடந்து கொண்ட காட்சிகள் ... Read More »

சிலைகளுக்கு சேவகம் செய்யும் இப்றாஹீம் நபியின் வாரிசுகள் (?)

“உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும், அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. அல்குர்ஆன் 60:04 உலகில் உள்ள அனைவரும் ஏதோ ஒரு மதத்தை அல்லது யாரோ ஒருவரை வழிபடக் கூடியவர்களாக இருப்பதை நாம் அவதானிக்கிறோம். பெரும்பாலானா மனிதர்கள் மதங்களை பின்பற்றக் கூடியவர்களாகவும் ஒரு சாரார் கடவுளே இல்லை என்று ... Read More »

நூல் அறிமுகம் – மனிதனுக்கு மனிதன் மரியாதை செய்வது எப்படி?

நூல்: மனிதனுக்கு மனிதன் மரியாதை செய்வது எப்படி? ஆசிரியர்: அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் (PJ) வெளியீடு: நபீலா பதிப்பகம் பக்கங்கள்: 61 இலங்கை விலை: 76/= தென்னிந்திய மார்க்க அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் (PJ) அவர்கள் எழுதிய “மனிதனுக்கு மனிதன் மரியாதை செய்வது எப்படி?” என்ற நூல் 61 பக்கங்களை கொண்டதாகும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு எவ்வாறு மரியாதை செய்வது? மரியாதை செய்தலின் பெயரால் நடைபெறும் தவறுகள். மார்க்க விரோத செயல்பாடுகள் என மரியாதை பற்றிய அனைத்துத் தரப்பு செய்திகளையும் இந்நூல் ஆராய்கிறது. மனிதனுக்கு மனிதன் ... Read More »

நூல் அறிமுகம் – இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்

நூல்: இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள் ஆசிரியர்: அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் (PJ) வெளியீடு: நபீலா பதிப்பகம் பக்கங்கள்: 144 இலங்கை விலை: 215/= கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக ஏகத்துவப் பிரச்சாரத்தில் தன்னை ஈடுபடுத்தி வரும் அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தற்போது எழுதியுள்ள ஆய்வு நூல் “இஸ்லாத்தின் பார்வையில் மத்ஹபுகள்” என்பதாகும். திருமறைக் குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களையும் மாத்திரமே நாம் பின்பற்ற வேண்டும் என்கிற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை பிரச்சாரம் செய்து வரும் அறிஞர் பி.ஜெ அவர்கள் கடந்த காலங்களில் மத்ஹபுகளுக்கு ... Read More »

குற்றங்கள் இரு வகை

தலைப்பை பார்த்தவுடன் என்னடா உலகில் பலவகை குற்றங்கள் நடந்துகொண்டிருக்க அதென்ன இருவகை என்று உங்கள் மனதில் தோன்றலாம். அது வேறொன்றுமல்ல, இன்றைய மீடியாக்களின் பார்வையே. இலங்கை மட்டுமல்லாது உலக மீடியாக்களின் கோணமும் இதுவே. முஸ்லிம்கள் செய்யும் குற்றம் ஒருவகை, முஸ்லிம் அல்லாதவர்கள் செய்யும் குற்றம் இன்னொரு வகை. முஸ்லிம்கள் செய்யும் குற்றங்களை தூக்கலாகவும், கொட்டை எழுத்துக்களில் தலைப்புச் செய்திகளாகவும் பதியப்படுவது ஒருபுறமும், முஸ்லிம் அல்லாதவர்கள் செய்தால் போகிற போக்கில் ஒரு தகவலாகவும், கொசுறுச் செய்தியாகவும் பதியப்படுவது மறுபுறம். அந்த வகையில் நாம் அனைவரும் அறிந்த ... Read More »