LATEST
Home » எழுத்தாளர்கள் » சகோ. ஷப்னா கலீல்

சகோ. ஷப்னா கலீல்

மறுமையில் சுவன வாழ்வை இழக்கும் முட்டாள்கள் – ஏப்ரல் பூல் பற்றிய சிறப்புக் கட்டுரை

நாளை ஏப்ரல் 01ம் தேதி ஆகும். ஏப்ரல் 01ம் தேதி என்றாலே பிறரை ஏமாற்றி முட்டாளாக்கும் நாள் என்று கருதி பல பேர் பலவிதமான பொய்களை கற்பனை செய்து கொண்டிருப்பார்கள் விடியும் வரை. ஏப்ரல் முதலாம் தேதி என்பது உலக முட்டாள்கள் தினம் என்று பலராலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இத்தினத்தில் பிறரை ஏமாற்றுவதும், அதற்காக பொய் சொல்வதும் பொய்யை உண்மையென்று நம்பவைக்கும் விதமாக பொய்ச் சத்தியங்களும், பொய் சாட்சிகளையும் உருவாக்குவதும் வேடிக்கையான விஷயமாக இன்று காட்சிப்படுத்தப் படுகின்றது. இதுவொரு தவறான காரியம் என்று சுட்டிக் ... Read More »

அசத்தியத்திற்கு எதிராக அல்குர்ஆன் மூலம் போராடுவோம்

எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக! (அல் குர்ஆன் 25:52) இலங்கையில் பௌத்த, முஸ்லிம் மக்களுக்கிடைய பாரியதொரு இனக்கலவரத்தை தூண்டக் கூடிய வகையில் அண்மைக் காலமாக சில பௌத்த கடும்போக்கு வாதிகள் வீரியமாக செயல்பட்டு வருகின்றனர். பள்ளிவாயல்களையும், வியாபாரத் தளங்களையும் தாக்குவதில் ஆரம்பித்து தற்போது குர்ஆன் மீதே கலங்கம் சுமத்தி முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டிப் பார்க்கக் கூடிய ஓர் இக்கட்டான கால கட்டத்தை நாம் தாண்டிக் கொண்டிருக்கின்றோம். இன்று இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளக் ... Read More »

உலகம் அழிவது நிச்சயம் – பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்

உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் நேர்வழிகாட்டியாக இறைவனால் கொடுக்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தின் செய்திகள் தினந்தோறும் நவீன அறிவியலாளர்களினால் உண்மைப் படுத்தப்பட்டு வருகின்ற காட்சிகளை கண்டு வருகின்றோம். அந்த வகையில் இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளின் ஒன்றான உலக அழிவு தொடர்பில் நவீன விஞ்ஞானம் பல புதிய தகவல்களை தந்த வண்ணமே உள்ளது. அண்மையில் லண்டன் BBC செய்திச் சேவை நடத்திய ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல விஞ்ஞானியும், அறிவியல் மேதையுமான பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் உலக அழிவு என்பது நிச்சயமான ஒன்று தான் ... Read More »

நகைச்சுவையும், காட்டூனும் நம்மை அறியாமல் செய்யும் பாவங்களே!

மனித உடலும், உள்ளமும் அடிக்கடி களைப்புக்கும், கவலைக்கும் உள்ளாகின்றன. எந்தவொரு மனிதனும் தான் இது போன்ற நிலைகளில் இருந்து விடுபட ஏதோ ஒரு வழிமுறையை கையாளுகின்றான். எவ்வாராயினும் அவ்வழிமுறை இஸ்லாம் காட்டிய வழியில் அமைந்திட வேண்டும். சிறுவர், பெரியவர்கள் உட்பட அனைவரும் ஏதோவொரு வகையில் தொலைக்காட்சியின் பக்கம் சாய்ந்தே உள்ளனர். அதனை நல்ல முறையில் பயன்படுத்துவதையும் பார்க்க தீய முறையில் பயன்படுத்துவோரே அதிகம். இதுவே தற்காலத்தின் நிலைமையாக மாறியுள்ளது. ஏதோவொரு வகையில் திரைப்படங்கள் சீரழிவுக்கு இட்டுச் செல்பவை என நாம் புரிந்து வைத்திருந்தாலும், தாம் ... Read More »