LATEST
Home » கட்டுரைகள் » சமூக கொடுமைகள் » காமுகர்கள் தினமே பெப்ரவரி 14 என்பதை உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள்

காமுகர்கள் தினமே பெப்ரவரி 14 என்பதை உறுதி செய்யும் ஆய்வு முடிவுகள்

ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 14ம் தேதி “காதலர் தினம்” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இளைஞர்கள், யுவதிகளுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கும் இத்தினத்தில் காதலர்கள் தமது காதலை (?) கொண்டாடுவதும், புதிய காதலர்கள் தமது காதலிக்கு அல்லது காதலனுக்கு காதலை வெளிப்படுத்துவதும் நடைபெற்று வருகிறது.

காதலர் தினத்தைப் பொருத்த வரையில் இதுவொரு பாரிய சீரழிவை சமுதாயத்தில் தோற்றுவிக்கும் விஷக் கிருமி என்பதே யதார்த்தமாகும்.

காதல் என்ற பெயரில் சல்லாபத்தில் ஈடுபடுவோருக்கு அங்கிகாரம் வழங்குவதற்காகவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது. பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை இந்த காமுக கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பல கல்வி நிலையங்களில் கூட இத்தினம் கொண்டாடப்படுவதுடன் இதற்குறிய அனுமதியும் வழங்கப்பட்டு வருவதை அவதானிக்க முடியும்.

மனிதர்களின் ஒழுக்கத்தையும், மான்பையும் எதுவெல்லாம் கெடுத்து நாசத்தை உண்டாக்குமோ அவை அணைத்துக்கும் புனித மிக்க இஸ்லாமிய மார்க்கம் தடை விதிப்பதுடன் சமுதாய சீரழிவிலிருந்து மக்களை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுகிறது.

இஸ்லாம் காதலர் தினத்தை எதிர்க்கிறது. காதலர் தினத்தை காமுகர்கள் தினமாக சித்தரிக்கிறது என்றெல்லாம் புலம்பித் திரியும் மேதாவிகளுக்கு இவ்வருட (2017) காதலர் தினக் கொண்டாட்ட முடிவுகளே போதுமான பதிலாக அமைந்து விடும்.

ஒரே நாளில் கற்பை இழக்கும் பத்தாயிரம் கண்ணியர்கள்

காதலர் தினக் கொண்டாட்டங்கள் என்பது “காமப் பசியை தீர்க்கும் கொண்டாட்டங்கள்” தான் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இந்த கொண்டாட்டங்களுக்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. 

காதலர் தினக் கொண்டாட்டம் என்பது அன்பையும், சிநேகத்தையும் வெளிப்படுத்தும் கொண்டாட்டம் என்று வெற்று விளக்கம் சொல்வோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

காதலர் தின கொண்டாட்டங்களின் போது சாராசரியாக சுமார் பத்தாயிரம் (10000) கண்ணிப் பெண்கள் தமது கற்பை இழப்பதாக Dr அஸங்க விஜேரத்ன தெரிவிக்கிறார். இலங்கையின் காதலர் தினக் கொண்டாட்டங்களின் போது ஒரே நாளில் நிகழும் அநியாயம் தான் இது.

18 வருடங்கள், 20 வருடங்கள் ஒழுக்கமாக வாழ்ந்தவள் கூட காதல் என்ற பெயரில் ஒரே நாளில் தனது காதலனிடம் தனது கற்பை பறிகொடுக்கும் அவலம் நடைபெறுகிறது. கணக்கிடப்பட்ட கணிப்பின் படி பத்தாயிரம் பெண்கள் என்றால் கணக்கில் சேராதவைகள் எத்தனை ஆயிரத்தை தொடும் என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.

ஒரே நாளில் ஆறாயிரம் வாடகை அறைகள்

காமுகர்கள் கொண்டாடும் பெப்ரவரி 14 காதலர் தினக் கொண்டாட்டத்திற்காக ஒரே நாளில் இலங்கையில் மாத்திரம் சுமார் ஆறாயிரம் (6000) அறைகள் வாடகைக்குப் பெறப்படுகிறதாக Dr அஸங்க விஜேரத்ன தெரிவிக்கிறார்.

இலங்கையில் ஒரே நாளில் இத்தனை அறைகள் வாடகைக்கு பெறப்படுவது பெப்ரவரி 14ம் தேதிதான் என்பதுடன் இவை 21 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்கள் மற்றும் யுவதிகளினாலேயே வாடகைக்க பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காதலர் தினத்தின் அன்பை வெளிப்படுத்துகிறோம், சினேகத்தை பரிமாறிக் கொள்கிறோம். என்றெல்லாம் விளக்கம் சொல்பவர்கள் சினேகத்தை பரிமாறவும், அன்பை வெளிப்படுத்தவும் தான் 6000ம் அறைகள் வாடகைக்கு தேவைப்படுகிறதா?

அறைகள் வாடகைக்கு விடப்படும் நகர் புறங்களில் தான் இந்நிலை. அறைகள் வாடகைக்கு விடப்படாத கிராமப் புறங்கள் எத்தனையோ இருக்கின்றன. அங்கெல்லாம் என்ன நிலையாக இருக்கும்? தமது காமப் பசியை தீர்த்துக் கொள்வதற்காக எந்த இடத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்வார்கள் இவர்கள்.

பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கல்விக்காக நேரத்தை செலவழிக்க வேண்டிய இளைஞர்கள் தான் பெப்ரவரி 14ம் தேதி நேரத்தை வாடகை அறைகளிலும் படிப்பதற்காக பெற்றோர் தரும் பணத்தை அறைக்கு வாடகை செலுத்துவதற்கும் பயன்படுத்துகிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

கருக் கலைப்புக்கு காரணமான நாள்

அதிகமான சட்ட விரோத கருக்கலைப்பு நடைபெறுவதற்கு பெப்ரவரி 14ம் தேதி காதலர் தினக் கொண்டாட்டங்களே காரனமாக அமைகின்றன என்கிறார் Dr அஸங்க விஜேரத்ன அவர்கள்.

காதலர் தினக் கொண்டாட்டம் எனும் பெயரில் தமது காமதத்தை தீர்த்துக் கொள்வதற்கு அறைகளை வாடகைக்கு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு விட்டு அதன் மூலம் உருவாகும் கருவை கலைப்பதற்கு இடம் தேடி அலைகிறார்கள் இன்றைய கால இளம் யுவதிகள்.

அதிகமான சட்ட விரோத கருக் கலைப்புக்கு காரணமாக அமையும் இந்த பெப்ரவரி 14 காதலர் தினக் கொண்டாட்டங்கள் மூலம் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் எண்ணிலடங்காதவையாகும்.

600 மடங்கு வியாபாரம் நடைபெறும் நாள்

காதலர் தினக் கொண்டாட்டம் என்பதே வியாபாரிகளின் வியாபாரத்தை அதிகரித்து அதிக இலாபத்தை அடைந்து கொள்வதற்கான யுக்தியாகவே பயப்படுத்தப் படுகிறது.

அதிகளவான வியாபாரத்துடன், பெருகிய இலாபத்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சியாகத் தான் காதலர் தினத்திற்கான அனைத்து விளம்பரங்களும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன. காதலர் தினம் என்பது ஒரு Business Mafia வாகும்.

ரோஜாப் பூ வியாபாரம் தொடங்கி அனைத்து பரிசுப் பொருட்களின் வியாபாரமும் இத்தினத்திற்காக அதிகரித்து விடும்.

காதலர் தினக் கொண்டாட்டங்களின் போது தமது காதலிக்கு கொடுப்பதற்காக வாங்கப்படும் ரோஜாக்களின் விற்பனை அபாரமானது. அதிக மக்கள் தொகையும், அதிக இளைஞர்களைக் கொண்ட நாடுகளையும் தான் இந்த Business Mafia கும்பல்கள் அதிகமதிகம் இலக்கு வைக்கின்றன.

அந்த வகையில் இந்தியாவில் கடந்த 03 ஆண்டுகளில் விற்பனையான ரோஜாக்களின் எண்ணிக்கையே காதலர் தினம் என்பது வியாபாரத்தினை அதிகரித்துக் கொள்வதற்காக திட்டமிட்டு நடத்தப்படும் காமக் கழியாட்டம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

கோடிக் கணக்கில் விற்பனையாகும் ரோஜாக்கள்

கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி 14ல் இந்தியாவில் சுமார் 01.06 கோடி ரோஜாக்கள் விற்பனை செய்யப்பட்டது.

2016ம் ஆண்டு பெப்ரவரி 14ல் 01.04 கோடியும், 2017ம் ஆண்டும் பெப்ரவரி 14 காதலர் தின கொண்டாட்டத்தின் போது 01.06 கோடி ரோஜாக்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

காதலர் தினக் கொண்டாட்ட நாளில் தாஜ் மஹாலில் மாத்திரம் சுமார் 03 கோடி ரோஜாக்கள் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு ரோஜாவின் விலை குறைந்த பட்சம் இந்திய மதிப்பில் சுமார் 10 ரூபாயில் ஆரம்பித்து 180 ரூபாய் வரை உயர்கிறது. இவை இந்தியாவின் பெங்களுர், ஓசூர் போன்ற பெரு நகரங்களில் தான் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

2017 பெப்ரவரி 04 முதல் 14 வரை பத்து நாட்களுக்குள் மாத்திரம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சுமார் 60 இலட்சம் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவை இலண்டன், துபை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்த்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

உலகில் மிகப் பெரிய ரோஜா ஏற்றுமதியாளராக நெதர்லாந்து காணப்படுகிறது. இதன் ஒரு வருட ஏற்றுமதி சுமார் 50 கோடி ரோஜாக்கள் ஆகும்.

இந்தளவு விற்பனையை ரோஜாக்களில் மாத்திரம் ஒவ்வொரு நாடுகளும் கொண்டிருக்கும் போது பெப்ரவரி 14ம் தேதி ஆடை விற்பனை, கழியாட்ட வருமானங்கள், சாராய வியாபாரம், வாடகை விடுதிகளின் வருமானம் என இந்த நாளில் நடைபெறும் வியாபாரத்தின் அளவு கணக்கிலெடுக்க முடியாதளவு வியாபித்திருக்கிறது.

முழுக்க முழுக்க பெண்களை சீரழித்து கழியாட்டம் நடத்தும் காமுகர்களின் தினமாக இருக்கிற இந்த தினத்தை கொண்டாடுவது நம் வாழ்வை நாமே அழித்துக் கொள்ளும் செயலாகவே இருக்கிறது. 

சிந்திப்பீர்! சீரழிந்து விடாதீர்!

-M.F.M

இதுவரை படிக்காவிட்டால் படித்து விடுங்கள்…

ஆபாசத்தின் கூடாரங்களாக மாறும் பாடசாலைகள் தீர்வு என்ன?

17269796_631535240372910_224133511_o

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்கம் மிக்கது. முஸ்லிம் மாணவிகள் அணியும் ஆடை சிறந்தது. என வஜிர சிறுவர் நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஹுனுபலாக வஜிர ஸ்ரீ நாயக்க தேரர் அண்மையில் தெரிவித்திருந்தமை இவ்விடத்தில் அவதானத்திற்கு உரியதாகும்.

579 total views, 1 views today