LATEST
Home » கட்டுரைகள் » சிறப்புக் கட்டுரை » காட்போட் போராளிகளின் கவனத்திற்கு! – S.H.M இஸ்மாயீல் ஸலபியின் கற்பனை கதைகளுக்கு பதில்

காட்போட் போராளிகளின் கவனத்திற்கு! – S.H.M இஸ்மாயீல் ஸலபியின் கற்பனை கதைகளுக்கு பதில்

-கருத்து சொல்வதற்கு முன் காரியமாற்ற கற்றுக் கொள்ளுங்கள்.

JASM – ஜமாஅத் அன்சார் சுன்னதில் முஹம்மதிய்யா அமைப்பின் உத்தியோகபூர்வ பத்திரிக்கையான “உண்மை உதயம்” என்ற பத்திரிக்கையில் “இனவாதப் பேயின் கோரமுகம் மீண்டும் இலங்கையில்” என்ற தலைப்பில் அவ்வமைப்பின் பிரதான பேச்சாளரும், பத்திரிக்கை ஆசிரியருமான இஸ்மாயீல் ஸலபி என்பவர் கட்டுரை ஒன்றை (ஆசிரியர் தலையங்கம்) வெளியிட்டுள்ளார்.

குறித்த ஆக்கத்தில் இலங்கையில் நடைபெற்று வரும் இனவாத செயல்பாடுகள் தொடர்பில் விபரித்து விட்டு, தொடர்ந்து தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 03.11.2016 அன்று GSP+ வரிச்சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்கும் அரசைக் கண்டித்து நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் தனது ஆழ்ந்த மனக் குரோதத்தை அழகிய தமிழில் கக்கித் தீர்த்துள்ளார்.

குறித்த ஆர்பாட்டம் நடத்தப்பட்ட ஒரு சில நாட்களிலேயே இதே பாணியில் S.H.M பளீல் என்பவர் ஒரு ஆக்கத்தை வெளியிட்டிருந்தார். குறித்த ஆக்கத்திற்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் உடனடியாக பதில் வழங்கப்பட்டு அது ஊடகங்களிலும் வெளியிடப்பட்டிருந்து. பளீல் அவர்கள் என்ன வாதங்களை முன் வைத்து கட்டுரையை கட்டமைத்திருந்தாரோ அதே வாதங்கள், அதே முறைமையை பேணி தனது பாணியில் இஸ்மாயீல் ஸலபி என்பவர் தனது கட்டுரையை வடித்திருக்கிறார்.

கார்ட்போட் போராளிகள் சாதித்தது என்ன?

குறித்த கட்டுரையின் வாதங்களுக்கு பதிலளிப்பதற்கு முன் இங்கு நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது.

ஆம், தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டம் முதல் வெள்ள நிவாரணம் வரை அனைத்தையும் விமர்சித்து கட்டுரைகள் எழுதுவதும், வீடியோ பேசுவதையும் மாத்திரமே தொழிலாக கொண்டு இயங்கும் இஸ்மாயீல் ஸலபி மற்றும் இன்னும் பல கார்ட்போட் போராளிகள் முதலில் இந்த பிரச்சினைகளின் போது சமுதாயத்திற்காக செய்தது என்ன?

சமுதாயத்திற்காக போராடும், களத்தில் இறங்கி காரியமாற்றும், கால நேரத்தை சமுதாயத்திற்காக விரயம் செய்யும் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சிக்கும் மேதாவிகள் தங்கள் பங்குக்கு என்ன சாதனை செய்தார்கள் என்பதை தேடிப்பாருங்கள்.

கார்ட்போட் போராளிகளாக கருத்து சொன்னதைத் தவிர இவர்கள் சாதித்தது வேறொன்றுமில்லை.

கொழும்பில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வெள்ளம் ஆரம்பித்தது முதல் முழுமையாக வடிந்தோடும் வரை களப்பணியாற்றினார்கள். குறித்த வெள்ளப்பெருக்கில் வடிந்து வந்த கடைசி சொட்டுத் தண்ணீரில் கூட கால் வைக்க மனமில்லாத இந்த கார்ட்போட் போராளிகள் தான்,

தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் டீ சேர்ட் போட்டு களப்பணி செய்வது ஏன்?

விளம்பரப் படுத்துவது ஏன்?

பேஸ்புக்கில் தங்கள் சேவைகளை படம் பிடித்து போடுவது ஏன்?

என்று மாதக் கணக்கில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டையேனும் துப்பரவு செய்து கொடுக்க முடியாதவர்கள் தான் டீ சேர்ட் போட்டதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருந்தார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தினாலோ, வெள்ள நிவாரணம் செய்தாலோ அதனை விளம்பர மோகம் என்று சொல்லும் இந்த மேதாவிகள் தான் அரபு நாட்டுச் சில்லரையில் கிணறும், பள்ளியும் கட்டி விட்டு இவர்களின் இயக்கப் பெயரை கல்லால் பதிக்கிறார்கள்.

தவ்ஹீத் ஜமாஅத் டீ சேர்ட் போடுவது விளம்பரம் என்றால் இவர்கள் அடுத்தவன் காசில் கட்டிய பள்ளிக்கு தங்கள் கம்பணி பெயரைப் போடுவதும் மாத்திரம் இஃக்லாசோ?

ஆர்ப்பாட்டத்தை விமர்சிப்பவர்கள் ஆற்றிய பங்களிப்பு என்னவோ?

அதே போல், GSP+ சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் இலங்கை அரசு கை வைப்பதை எதிர்த்து தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தியது. குறித்த ஆர்ப்பாட்டத்தை விமர்சித்து கருத்து வெளியிடும் கார்ட்போட் போராளி இஸ்மாயீல் ஸலபியும் அவருடைய மாபெரும் இயக்கமும் “முஸ்லிம் தனியார் சட்ட விவகாரத்தில் சாதித்தது என்ன?” என்பதை கொஞ்சம் குறிப்பிட முடியுமா?

குறித்த ஆக்கத்தில் ஆர்ப்பாட்டத்தை சகட்டு மேணிக்கு விமர்சித்திருக்கும் ஸலபி அவர்கள் முஸ்லிம் தனியார் சட்ட பிரச்சினை தொடர்பில் என்ன சாதித்தார்?

தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிமுறை பிழையானது என்று எழுதுவதற்கு முன்னால் சரியான வழிமுறைப்படி தாங்கள் சாதித்தது என்ன என்பதை குறிப்பிட வேண்டுமே?

தமிழ் மொழியில் ஒரு கட்டுரையும், ஒரு ஜும்மாவும் நடத்தி விட்டதினால், உடனே முஸ்லிம் தனியார் சட்டப் பிரச்சினையை அரசாங்கம் கை விட்டு விட்டதா?

அல்லது, 23 கூட்டமைப்பினர் சார்பில் நாங்கள் அது செய்தோம். இது செய்தோம். என்று கதையளக்க நினைக்கிறார்களா?

முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் தொடர்பில் கடந்த 07 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட குழுவில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவுடன் ஒட்டி உறவாடும் இந்த அறிஞர் பெருந்தகை அவர்கள் குறித்த ஜம்மிய்யதுல் உலமாவுக்காவது பிரச்சினையை முடிக்க சொல்லியிருக்கலாமே?

முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துப் பங்கீடு போன்ற ஒரு சில விவகாரங்கள் அடங்கிய தனியார் சட்டத்தை திருத்துவதற்கு 07 வருடங்கள் இழுத்தடிப்பு செய்து இன்னும் முடிக்க முடியாமல் சமுதாயத்தை ஏமாற்றித் திரிவோரை விமர்சித்து ஒரு வரி கூட எழுத வக்கில்லாதவர்கள் தான், இன்று தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பக்கம் பக்கமாக கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டிய தனியார் சட்ட திருத்தத்தை 07 வருடங்கள் இழுத்தடித்து இந்த சமுதாயத்தின் உரிமையை அந்நிய சமுதாயத்தவர்கள் கைவைக்கும் நிலைக்கு இட்டுச் சென்று, தற்போது ஐரோப்பாவே தலையிடும் அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியவர்களை பற்றி வாய் திறக்க திராணியற்றவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டம் பற்றி பேசுவதற்கு என்ன நியாயம் இருக்கிறது?

உண்மையில் இவர்கள் தூங்குகிறார்களா? தூங்குவதைப் போல் நடிக்கிறார்களா?

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டத்தை விமர்சிக்கப் புகுந்த அனைவரும் மீண்டும் மீண்டும் முன் வைக்கும் வாதம் “மற்றவர்களின் மதங்களை நிந்திக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்கிறது” என்பதாகும்.

பளீல் நளீமி, ஜம்மிய்யதுல் உலமா, இப்போது ஸலபி என்று அனைவரும் இதே வாதத்தை முன் வைக்கிறார்கள்.

மாத்திரமன்றி, மற்றவர்களின் மதங்களை நிந்தனை செய்யக் கூடாது என்ற கருத்துப்பட இடம்பெற்றுள்ள அல்-குர்ஆன் வசனங்களை இதற்கு ஆதாரமாகவும் காட்டுகிறார்கள்.

அல்லாஹ்வை தொடர்ந்தும் கேவலப்படுத்தி பேசி வரும் ஞானசார என்கிற தேரருக்கு எதிராகத்தான் குறித்த ஆர்ப்பாட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பேசப்பட்டதே தவிர, எந்த இடத்திலும் அவர்களின் மதத்தைப் பற்றி ஒரு வார்த்தையும் பேசப்பட வில்லை.

அவர்களின் மதத்தை நிந்தித்துப் பேசியிருந்தால் இவர்கள் முன் வைக்கும் ஆதாரங்கள் படி நாம் தவறு செய்தவர்களாகி விடுவோம். ஆனால், குறித்த ஆர்ப்பாட்டத்தில் எந்த மதத்தையும் நிந்தித்துப் பேசப்படவேயில்லை. இனி எப்படி இவர்கள் எம்மை தவறு காண முடியும்?

அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.

திருக்குர்ஆன் 6 108

மேலுள்ள வசனம் என்ன கூறுகிறது என்பதையாவது இவர்கள் சிந்திப்பார்களா? அல்லாஹ் அல்லாதவர்களை நாம் ஏசக் கூடாது என்று கூறிய இறைவன் அதற்கு என்ன காரணத்தை முன் வைக்கிறான்? அறியாமையில் உள்ள மக்கள் அல்லாஹ்வை ஏசிவிடக் கூடாது என்பது தான்.

இங்கே அல்லாஹ் யாராலும் ஏசப்படுவதை அல்லாஹ் அங்கீகரிக்கவில்லை. அதை கடுமையான குற்றமாக அல்லாஹ் பார்க்கிறான். எனவே தான் பிற மதத்தவர்களின் கடவுள்கள் கற்பனையானவைகளாகவும் சக்தியற்றவர்களாகவும் இருந்தாலும் ஏசக்கூடாது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

இங்கே கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், முதலில் அல்லாஹ்வை ஏசியவர்கள் யார் என்பது தான். முதலில் இனவாதிகள் அல்லாஹ்வை ஏசுகிறார்கள். அல்லாஹ் ஏசப்படுவதை அல்லாஹ் கண்டிக்கிறான்.

அதற்கான கண்டனத்தை யார் தொடுப்பது? இறைவனை உண்மையாக நேசிக்கின்ற, ஈமான் கொள்கின்றவர்கள் தான் இறைவனை திட்டியவர்களுக்கு எதிராக கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். இதை தான் தவ்ஹீத் ஜமாஅத் செய்தது.

எந்தவொரு செயல்பாடாக இருந்தாலும் அது குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமாக நபி மொழிகளுக்கு உட்பட்டதாகவே அமைய வேண்டும் என்பதில் உறுதியாக செயல்படும் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டத்தை குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிப்படி தவறு என்று பகிரங்க மேடையில் நிரூபணம் செய்ய இவர்களுக்கு திராணியுண்டா?

விவாதத்தை பற்றி பேசினாலே எனக்கு விவாதம் பண்ணவே தெரியாது என்று பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி ஒழியும் இஸ்மாயீல் ஸலபி என்பவர் தான் தற்போதும் தவ்ஹீத் ஜமாஅத்தை விமர்சித்து கருத்து வெளியிட்டிருக்கிறார்.

சிலை வணக்கம் கூடாது என்று இவர்கள் சொல்கிறார்கள் – பொலிஸில் போட்டுக் கொடுத்த JASM

இஸ்லாத்தை காப்பாற்ற புறப்பட்டதாக கருத்து வெளியிடும் இந்த அறிஞரின் பள்ளி கட்டும் கம்பணியின் தலைவர் அபூபக்கர் சித்தீக் மதனி என்பவரை  சார்ந்தவர்கள் மாவத்தகம பொலிஸ் நிலையத்தில் சொன்ன வார்த்தைகளுக்கு இவர் என்ன பத்வா கொடுப்பார்? எப்போது கட்டுரை வெளியிடுவார்?

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவப் பிரச்சாரம் செய்யும் முகமாக பரகஹதெனிய பகுதியில் நிகழ்ச்சி நடத்திய போது, அதனை தடுக்க பொலிஸ் நிலையம் வந்த அபூபக்கர் சித்தீக் மதனி என்பவருடன் பொலிஸ் நிலையம் வந்தவர்கள் சொன்ன வார்த்தைகள் என்ன என்பது இவருக்கு தெரியாத புதிர் அல்ல.

இவர்கள் (அப்துர் ராசிக் உள்ளிட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினர்) சிலை வணக்கம் செய்வது கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

சூனியம் இல்லையென்கிறார்கள்.

தாடி வெட்டலாம் என்கிறார்கள்.

என்றெல்லாம் மார்க்கப் பிரச்சினைக்கு மாவத்தகம பொலிஸில் பத்வா கேட்ட அபூபக்கர் சித்தீக் மதனிக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் எதிராக இவர் இன்னும் ஏன் கட்டுரை எழுதவில்லை. சம்பளத்தில் கைவைத்து விடுவார்கள் என்கிற அச்சமா?

தவ்ஹீத் ஜமாஅத்தினர் சிலை வணக்கம் செய்வது கூடாது என்று பிரச்சாரம் செய்கிறார்கள் என மாவத்தகம பொலிஸ் அதிகாரியிடம் அபூபக்கர் சித்தீக் மதனியின் முன்னிலையில் அவரின் அடிவருடிகள் சொல்லும் போதே நமது சகோதரர்கள் “அப்படியானால் நீங்கள் சிலை வணக்கம் கூடும் என்றா சொல்கிறீர்கள்?” என்று கேட்ட போது வாய் மூடி தலை குனிந்தாரே உங்கள் தலைவர்! இவரைத் தானே இன்னும் தலைவராக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?

இதுதான் இஸ்லாமா?, இவர் தான் இஸ்லாத்தை பாதுகாக்கும் தலைவரா?, இவருக்கு எதிராக பேசுவதற்கு உங்களுக்கு மனமில்லையே?

தவ்ஹீத் ஜமாஅத்தினர் என்ன செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்கிற ஜீன் உங்கள் உடம்பில் ஒட்டிக் கொண்டுள்ளது. அதனை ஆப்ரேஷனால் நீக்க முடியாது. அல்லாஹ்வின் நேர்வழியினால் மாத்திரமே நீக்க முடியும்.

மார்க்கம் புரியா மார்க்க மேதைகள்?

பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரர் என்பவர் கடந்த காலங்களில் எந்த விதங்களில் நடந்து கொள்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அவர் முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்தும் பல விதமாக கருத்துக்களையும் வெளிப்படுத்தி வருகிறார். முஸ்லிம்களை பற்றி பேசி வரும் கருத்துக்களை நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளா விட்டாலும் படைத்த இறைவனைப் பற்றி பேசும் வார்த்தைகளை தொடர்ந்தும் சகித்துக் கொண்டிருக்கும் படி இஸ்லாம் நமக்கு வலியுறுத்த வில்லை.

அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போதெல்லாம் அவரைக் கேலி செய்தனர். “நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கேலி செய்தது போல் உங்களை நாங்களும் கேலி செய்வோம்” என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 11:38

மேற்கண்ட திருக்குர்ஆன் வசனம் நமக்கு சொல்வது என்ன? என்பதை இஸ்மாயீல் ஸலபி அவர்கள் தெரிந்து தான் இருக்கிறாரா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறாரா?

நூஹ் (அலை) அவர்கள் கப்பலை கட்டுகிற நேரத்தில் அதனை கிண்டல் செய்தவர்களை கேலி செய்தவர்களை நோக்கி சொன்ன பதிலை அல்லாஹ் குர்ஆனில் நமக்கு எடுத்துக் காட்டுகிறான். அல்லாஹ்வின் பணியை கேலி செய்தவர்களுக்கே உங்களைப் போன்று நாங்களும் நடப்போம் என்று நூஹ் (அலை) அவர்கள் கூறும் போது, அல்லாஹ்வையே ஒருவன் தொடந்து கேலி செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கு மரியாதைக்கு மேல் மரியாதை கொடுப்பதற்கு எந்த குர்ஆன் வசனத்தை ஆதாரம் காட்டப் போகிறீர்கள்?

முஸ்லிம்களை திட்டுவதையோ, ஏசுவதையோ, பொருத்துப் போகலாம் என்று வைத்துக் கொள்வோம் தொடர்ந்தும் அல்லாஹ்வை கேவலப்படுத்துவதை ஏன் பொருத்துப் போக வேண்டும்?

நாம் என்ன அவருக்கு எதிராக அவரை தாக்கினோமா?, அடித்தோமா, அடிக்கும் படி தூண்டினோமா? அவருக்குறிய பதில் அளிக்கப்பட்டது அவ்வளவு தான்.

கொடுக்கப்பட்ட பதில்களை கடினமாக வார்த்தைகள் சுட்டிக் காட்டப்பட்டால் அதனை திருத்திக் கொண்டு அடுத்த கட்டம் பயணிப்பதில் எமக்கு எவ்வித தயக்கமும் இல்லை. ஆனால் அவருக்கு பதில் கொடுப்பதே தவறு என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? மார்க்கம் அதற்கு என்ன அனுமதியை தந்திருக்கிறது.

GSP+ சலுகைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் அரசாங்கம் திருத்தம் கொண்டுவருவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது, முஸ்லிம் தனியார் சட்டத்தை கிண்டல் செய்தது மாத்திரமன்றி உங்கள் அல்லாஹ்வுக்கு இரண்டு மனைவிகளா? மூன்று மனைவிகளா? என்றெல்லாம் கேலி செய்த ஒருவருக்கு பதிலளிப்பதில் என்ன மார்க்க ரீதியிலான தவறு நடந்தது?

இஸ்லாத்திற்கு எதிராக எவர் பேசினாலும் அவர்களை எதிர்த்து நாம் குரல் கொடுத்தால் அதனை தவறு காணும் இவர்கள் அமெரிக்காவிலோ அல்லது வெளிநாடுகளிலோ மாத்திரம் இஸ்லாத்திற்கு எதிராக யாராவது குரல் கொடுத்தால் அதற்கு எதிராக முந்திக் கொண்டு பதிலளிக்க முனைவது ஏன்?

வெளிநாட்டில் இஸ்லாத்தையோ, அல்லாஹ்வையோ யாராவது கேவலப்படுத்தினால் துள்ளிக் குதிக்கும் நாம், உள்நாட்டில் ஒருவன் அல்லாஹ்வை கேவலப்படுத்தும் போது மாத்திரம் ஏன் பெட்டிப்பாம்பாய் அமைதியாகிறோம்? இதுதான் இஸ்லாமா?

உள்நாட்டில் அல்லாஹ்வை எவனாவது திட்டினால் பொறுமை பத்வாவும், வெளிநாட்டில் யாராவது அல்லாஹ்வை திட்டினால் பொங்கியெழுந்து பதிலளிக்கும் பத்வாவும் எங்கிருந்து பெற்றீர்கள்?

உங்கள் இயக்கம் சார்பில் கையெழுத்திட்டதற்கு ஆதாரம் தராதது ஏன்?

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக 23 அமைப்புகள் சேர்ந்து கெயெழுத்திட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். நாம் அறிந்த வரை இதிலும் ஒரு பித்தலாட்ட விளையாட்டே அரங்கேறியிருக்கிறது.

10.11.2016 அன்று அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூடிய கூட்டமைப்பின் மஷுராவில் சுமார் 10க்கு உட்பட்ட இயக்கத்தவர்களே கூடியிருந்தார்கள். அதிலும் சிலர் இரண்டு இயக்கங்களுக்கு பொறுப்பாளர்கள். இப்படியான ஒரு நிலையில் தான் குறித்த அறிக்கை தயாரிக்கபட்டது மட்டுமன்றி கையெழுத்திடாமலேயே அறிக்கையும் வெளியிடப்பட்டது.

எந்தளவுக்கென்றால் குறித்த மஷுராவில் கலந்து கொண்டதற்கான கையெழுத்தைக் கூட குறித்த இயக்கத்தவர்கள் இடவில்லை என்பது மேலதிகமாக நமக்குக் கிடைத்த தகவலாகும்.  ஆக மொத்தத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டத்தின் வலுவையும், மக்களிடம் ஏற்பட்ட வரவேற்பையும் குறைத்து, குறை சொல்ல வைக்க வேண்டும் என்பதற்காக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது என்பது தெளிவாகிறது.

இந்த அறிக்கையில் இஸ்மாயீல் ஸலபியின் கிணறு கட்டும் கம்பணியான JASM சார்பிலும் கையெழுத்திட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் JASM மட்டுமல்ல எந்த இயக்கமும் கையெழுத்திடவில்லை. கையெழுத்திடாமல் தான். கையெழுத்திட்டதாக பொய் சொல்லி அறிக்கை வெளியிடப்பட்டது.

தூய்மை வாதம் பேசும் நீங்கள் இப்படியொரு துரோகத்தை செய்யலாமா?

கையெழுத்திடாமலேயே, கையெழுத்திட்டதாக குறிப்பிடுவதற்கு எந்த குர்ஆன் வசனத்தில் ஆதாரம் பெற்றீர்கள்? எந்த நபிமொழியில் விளக்கம் கிடைத்தது உங்களுக்கு?

நீங்கள் யாரும் கையெழுத்திடாமல் தான் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொய்யாக அறிக்கை வெளியிட்டீர்கள் என்பதையும், கையெழுத்திட்டதை நிரூபிக்க முடியுமா? என்றும் நீங்கள் விமர்சனத்திற்கு உட்படுத்தியுள்ள “இறை பணிக்காக ஓர் சிறைப் பயணம்” என்ற உரையிலேயே கேட்டோமே அதை மட்டும் லாவகமாக மறைத்தது ஏன்?

பதிலில்லா விட்டால் கண்டு கொள்ளாமல் சென்று விட வேண்டும். ஆனால், தவ்ஹீ் ஜமாஅத்திற்கு எதிராக பக்கம் பக்கமாக எதையாவது எழுதித் தள்ள வேண்டும்.

என்னே நியாயம்? உங்கள் நியாயத்தை நினைக்கும் போது மேனி சிலிர்க்கிறது!

இனவாதத்திற்கு எதிராக இவர்கள் செய்த பங்களிப்பு என்ன?

தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டத்தை எதிர்த்து கட்டுரை எழுதியுள்ள இஸ்மாயீல் ஸலபி என்பவரும் தவ்ஹீத் பெயரில் பள்ளி கட்டும் கம்பணி நடத்தும் மற்றவர்களும் இனவாத செயல்பாடுகளுக்கு எதிராக என்ன செய்தார்கள்? என்பதை விபரிக்க முடியுமா?

  • தம்புள்ள, மஹியங்கனை, கிரேன்பாஸ், பாத்தியா மாவத்தை பள்ளி, போன்று நாட்டில் தாக்கப்பட்ட 24க்கும் அதிகமான பள்ளி பிரச்சினைகளுக்கு எதிராக இவர்கள் சாதித்தது என்ன?
  • ஹிஜாப் பிரச்சினை,
  • முஸ்லிம் பாடசாலை பிரச்சினை,
  • தெவனகல முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சினை,
  • முஸ்லிம் வர்த்தக நிலைய தாக்குதல்கள்,
  • சிங்களே பிரச்சினை,
  • ஹழால் பிரச்சினை,
  • முஸ்லிம் வங்கி முறைமை பற்றிய பிரச்சினை,
  • குர்ஆன் மீது பொது பல சேனாவின் விவாத அழைப்பு.
  • அலுத்கம பிரச்சினை,
  • மட்டக்களப்பு மங்களராம பிரச்சினை,

இப்படி இலங்கையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட இனவாத பிரச்சினைகளின் போது இஸ்மாயீல் ஸலபி என்பவரும் இவருடைய மாபெரும் பள்ளி கட்டும் கம்பணியான JASM மும் இனவாதத்திற்கு எதிராக என்ன செய்தார்கள்?

அலுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பொது மக்களிம் வசூல் செய்து சுமார் ஒரு கோடி அளவுக்கு உதவி செய்தது தவ்ஹீத் ஜமாஅத் – இவர்கள் என்ன செய்தார்கள்?

கொழும்பு வெள்ள நிவாரணத்திற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்களை இறக்கி களப்பணியாற்றியது தவ்ஹீத் ஜமாத் – இவர்கள் என்ன செய்தார்கள்?

கொழும்பு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் இரண்டரை கோடிக்கு மேல் பொது மக்களிடம் இருந்து திரட்டிய நிதியை வழங்கியது தவ்ஹீத் ஜமாஅத் – இவர்கள் எவ்வளவு வழங்கினார்கள். (வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பள்ளி கட்டிக் கொடுக்க முடியாது. முடியுமென்றால் அதனை செய்திருப்பார்கள்)

இலங்கையில் கடந்த 03 வருடங்களாக இரத்ததானத்தில் முதல் இடத்தில் தவ்ஹீத் ஜமாஅத் இருக்கிறது – இவர்கள் செய்தது என்ன?

பொது பல சேனாவினால் குர்ஆன் விவாத அழைப்பு விடுக்கப்பட்ட போது உடனடியாக அந்த விவாத அழைப்பை ஏற்றுக் கொண்டது தவ்ஹீத் ஜமாஅத் – இவர்கள் செய்தது என்ன?

தம்புள்ளை பள்ளிக்கு எதிரான இனவாதத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் செய்தது தவ்ஹீத் ஜமாஅத் – இவர்கள் செய்தது என்ன? (அப்போதும் அஸாத் ஸாலி போல் எம்மை விமர்சித்தார்கள் இவர்கள்)

கிரேன்பாஸ் பள்ளி பிரச்சினையில் இரவு முழுவதும் அங்கிருந்து பள்ளிக்காக போராடியது தவ்ஹீத் ஜமாஅத் – இவர்கள் செய்தது என்ன? – அப்போதும் நம்மை விமர்சித்தார்கள்.

இப்படி தவ்ஹீத் ஜமாஅத் இந்த சமுதாயத்திற்காக செய்த சேவைகளையும், பணிகளையும், அர்ப்பணிப்புகளையும் அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால், நம்மை எதிர்த்து கட்டுரை எழுதும் இந்த “கார்ட்போட் போராளிகள்” சமுதாயத்திற்காக உழைக்காவிட்டாலும் பரவாயில்லை, உழைப்பவர்களையும், குரல் கொடுப்பவர்களையும் குளு குளு அறையில் அமர்ந்து அணல் பறக்கும் அறிக்கை விட்டு உபத்திரவம் செய்யாமல், ஒரு ஓரமாய் அமர்ந்து வாய்மூடியிருப்பதே இவர்கள் இந்தச் சமூகத்துக்குச் செய்யும் அளப்பரிய சேவையாகும்.

-அபூ ஹயா MISc

2,595 total views, 1 views today