LATEST
Home » அரசியல் » சிதறடிக்கப்படுமா சிறுபான்மைக் கனவுகள்? -அழைப்பு ஆசிரியர் பக்கம்

சிதறடிக்கப்படுமா சிறுபான்மைக் கனவுகள்? -அழைப்பு ஆசிரியர் பக்கம்

மஹிந்த சிந்தனை மண்ணை கவ்வுவதற்கு மூல முதற் காரணம், சிறுபான்மை சமூகத்தின் இருப்பிலும், உரிமைகளிலும் மஹிந்த அரசு கைவைத்து சீண்டிப்பார்க்க எத்தனித்தமை என்பது உலகமே ஒத்துக் கொண்ட பேருண்மை. உரிமைகள் பறிக்கப்பட்டு உணர்வுகள் அடக்கப்படும் எந்தவொரு சமூகமும் தன் இறுதி மூச்சை உள்ளிழுப்பதற்காய் எஞ்சியுள்ள மொத்த பலத்தையும் ஒன்றுதிரட்டி முழுவீச்சுடன் வெகுண்டெழுவது இயல்பானதே. ஒரு சமூகத்தின் இருப்பை தக்கவைக்க எடுக்கும் இறுதிப்பிரயத்தனம் இமைய மலையையும் துகள் துகளாய் தகர்க்கும் பலம் கொண்டது என்பதுவே யதார்த்தம். இப்படியானதொரு சிறுபான்மை இனங்களின் மீளெழுச்சியின் விளைவால் மாண்டுபோன அரசுகளின் இருள் சூழ்ந்த வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்த ஓர் அரசே மஹிந்த சிந்தனையும் என்பது 21 ஆம் நூற்றாண்டு கண்ட நிதர்சனம்.

உலக நாடுகளினதும், தங்கள் கண்களுக்கு முன்னால் துவம்சமான மஹிந்த சிந்தனையினதும் வீழ்ச்சிக்கு வித்திட்ட காரணிகளிலிருந்து கற்றவர்களும், கோலோட்ச நினைப்பவர்களும் படிப்பினை பெறுவது தங்கள் அரசியல் ஸ்தீரத்தன்மையை தக்கவைக்க உதவும் என்பது உறுதி.

பஸ்பமாகிப்போன மஹிந்த சிந்தனைக்குப்பின்னர் ஆட்சிப்பீடம் ஏறிய நல்லாட்சி அரசாங்கம் மஹிந்த விட்ட வரலாற்றுத் தவறை இனி ஒருபோதும் விடமாட்டார்கள், விடவும் கூடாது என்பதுவே இலங்கை வாழ் சிறுபான்மை இனங்களின் அகங்களில் கருக்கொண்ட ஏகமனதான எதிர்பார்ப்பு. ஆதலால் தான் ஆட்சிக்கவிழ்ப்புக்கு அடிப்படையாய் சிறுபான்மை வாக்குகள் அள்ளியள்ளிக் கொட்டப்பட்டன.

நல்லாட்சி அரசிடம் சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புகள் என்பவை

1) தங்கள் இருப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படல் வேண்டும்.

2) அனைத்து இன பூர்வீகக் குடிகளுக்கும் இருப்பது போல் தங்களுக்கும் சம உரிமைகள் கல்வியில், தொழில் வாய்ப்பில், அபிவிருத்தியில்  வழங்கப்படல் வேண்டும்.

3) விரும்பிய மதத்தை ஏற்று, அதன் நம்பிக்கை கோட்பாடுகளுக்கு இணங்க தங்கள் வாழ்வியலை நெறிப்படுத்திக் கொண்டு, மனதார ஏற்ற கொள்கைகளை எழுத்து வடிவிலும், பேச்சு வடிவிலும் மக்கள் மயப்படுத்தும் விதமாய் கருத்து வெளியிடும், களத்தில் ஒன்று கூடும் இலங்கை அரசியல் அமைப்பில் எழுத்தில் பதிந்துள்ள சட்ட உரிமை நடைமுறையில் பிரதிபளிக்கும் வண்ணம் பூரண மதச் சுதந்திரம் தரப்படல் வேண்டும்.

4) மூன்று தசாப்த கோர யுத்தத்தின் விளைவால் பூர்வீக நிலங்களை விட்டும் வெளியேற்றப்பட்ட சொந்தக் குடிகள் தத்தமது பகுதிகளில் துரித கதியில் முழுமைபெற்ற வளங்களுடன் மீள்குடியேற்றம் செய்யப்படல் வேண்டும்.

5) நீதிமன்றம், காவல் துறை, இராணுவம் உள்ளிட்ட துறைகளின் ஊடாக சட்டம், நீதி, நியாயம் என்பவை இன, மத, மொழி, பிரதேச ரிதியான ஓரக்கண் வஞ்சனையுடன் அனுகப்படாமல் நீதியான முறையில் அனுகப்படல் வேண்டும்.

இவை மஹிந்த சிந்தனையினை மண்ணுக்குள் போட்டு புதைத்து விட்டு தங்கள் நெற்றிப் பொட்டில் சிந்திய வியா;வைத் துளிகளை துடைத்துக் கொண்டு சிறுபான்மை மக்கள் உள்ளங்களில் ஊற்றெடுத்த எதிர்பார்ப்புகள்.

இவ்வெதிர்பார்ப்புகள் மைத்ரி – ரணில் இணைந்த நல்லாட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளதா?

அதற்கான முன்னெடுப்புகள் வீரியப்படுத்தப்பட்டுள்ளனவா? என்பது பாரிய கேள்விக் குறியாய் மக்கள் மனங்களில் கருக்கொண்டு வருவதை அவதானிக்க முடிகிறது. ‘வேதாளம் முறுங்கை மரம் ஏறியது போன்று’ மஹிந்த காலத்து சிறுபான்மை மீதான அழுத்தங்களும், அரிச்சாட்டியங்களும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் நல்லாட்சியில் அதிகரித்து வருவது நல்லாட்சி மீது சிறுபான்மை வைத்துள்ள கனவுகளை சிதறடித்துவிடுமா? என்று சிந்திக்க வைக்கிறது என்பதுவே கசப்பாயினும் உண்மை.

பொதுபல சேனாவின் முனைப்புக்காட்டப்படும் முஸ்லிம் விரோத மனப்பாங்கு, அல்லாஹ்வையும் இறைதூதரையும் கேளிப்பொருளாய் சித்தாpக்கும் கிண்டல் நடை பேச்சு வழக்கு, முஸ்லிம்களை வம்புக்கிழுப்பது போன்ற ஆணவக் கொக்காpப்பு, மஹியங்கனை உள்ளிட்ட துரும்புச் சண்டைகளை இமயமாய் தூக்கி நிறுத்தும் நாpத்தனங்கள், மாpத்துப் போன மாடறுப்பு தடை மசோதாவினை மீண்டும் தூசு தட்டும் ‘சிங்ஹ லே’ அமைப்பினாpன் மெத்தனப் போக்கு, முனை மழுங்கிப்போன ‘இஸ்லாமித் தீவிரவாதம்’ என்ற சொல்லாடலை ஜனரஞ்சகப்படுத்த எடுக்கும் பகீரதப்பிரயத்தனங்கள், இனவாதிகள் சகிதம் ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் கைகோர்த்துக் கொண்டு கண்டியில் இருந்து கொழும்பு வரை மேற்கொண்ட பாதயாத்திரை, மீள் குடியேற்றத்தில் காட்டப்படும் நத்தை வேகம் என்று நல்லாட்சியில் மீண்டும் நடந்தேற ஆரம்பித்துள்ள மஹிந்த கால ஆட்சிப் பாணியிலான போக்குகள் வாக்களித்த சிறுபான்மையினாpன் கனவுகளை களைத்து கடும் சூராவளிப்பயத்தினை அகங்களில் மாறா வடுவாய் விதைத்துவிடுமோ என்ற எண்ணத்தை விதைப்பதானது ஆரோக்கியமான போக்கு அல்ல.

சிறுபான்மை மக்களின் எண்ண ஓட்டங்களுக்கு மதிப்பளிக்காது அவா;களை மிதிக்கும் விதமாய் மஹிந்த விட்ட அதே வரலாற்றுத் தவறுகளை சாpசெய்யாமலேயே நல்லாட்சியும் தனது அரசியல் பயணத்தை தொடருமாயின், முன்னவருக்கு புகட்டிய பாடத்தினை ஆட்சிப்பீடத்தில் உள்ளவருக்கும் புகட்டுவதற்கு நீண்டகாலம் செல்லாது. மக்கள் மனங்களை வெல்லாத எந்தத்தலைவனும் எவ்வளவு பிரமாண்டமான அதிகாரத்தின் உச்சானிக் கொம்பில் வீற்றிருந்தாலும் ஒன்றிணைந்த மக்கள் சக்தியினால் நடுவீதியில் தூக்கி வீசப்படுவார் என்பதுவே வரலாறு உணர்த்தும் பாடம். படிப்பினை பெறுமா நல்லாட்சி?       

1,060 total views, 2 views today