LATEST
Home » கட்டுரைகள் » சமூக கொடுமைகள் » தவறிழைத்த தவக்குல் கர்மானும், மௌனியான ஜமாஅத்தே இஸ்லாமியும்

தவறிழைத்த தவக்குல் கர்மானும், மௌனியான ஜமாஅத்தே இஸ்லாமியும்

கடந்த 16.03.2016 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியினால் நடத்தப்படுகின்ற மாவனல்லை – ஆயிஷா சித்தீக்கா பெண்கள் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற தவக்குல் கர்மான் என்ற பெண் விசேட அதிதியாக அழைக்கப்பட்டு மாணவிகளுக்கு பட்டமளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த தவக்குல் கர்மான் தொடர்பில் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்க ஆதரவாளர்கள் மற்றும் அதன் அங்கத்தவர்கள் என்று பலரும் பல விதமான புகழாரங்களையும் சூட்டுகின்றார்கள்.

ஒரு மிகச் சிறந்த இஸ்லாமிய பெண் ஆளுமை இலங்கை வந்திருந்தார். அவரை தவ்ஹீத் ஜமாஅத்தினர் விமர்சிக்கிறார்கள் இவர்களுக்கு முற்போக்கு சிந்தனை கிடையாது. இஸ்லாத்தை முற்போக்கான முறையில் புரிந்து கொள்ளும் திரண் இவர்களுக்கு இல்லை. என்றெல்லாம் தவக்குல் கர்மானை பாராட்டியும், கர்மானின் மார்க்க விரோத செயல்பாடுகளை சுட்டிக் காட்டிய தவ்ஹீத் ஜமாஅத்தை வசைபாடியும் சமூக வலை தளங்களில் கருத்துப் பதிகிறார்கள் ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தில் பேஸ்புக் ஜிஹாதிகள்.

யார் இந்த தவக்குல் கர்மான்?

பெண் விடுதலை, பெண் உரிமைகள் மற்றும் ஆயுதமில்லா அகிம்சை ரீதியிலான போராட்டங்களை முன்னிலை தாங்கி நடத்தியதற்காக 2011 ம் ஆண்டு சர்வதேச நோபல் விருதை பெற்றுக் கொண்டார் தவக்குல் கர்மான்.

13046074_1349471581736636_751895781_nநோபல் பரிசை பெற்றுக் கொண்டதின் மூலம் சர்வதேச அளவில் இவருக்கு ஒரு அறிமுகம் கிடைத்தது. முஸ்லிம் பெண்கள் அணியும் முழு உடலை மறைத்த ஆடையை இவர் அணிந்திருப்பதினாலும், இவருக்கு நோபல் பரிசு கிடைத்ததினாலும் இவரைச் சார்ந்தவர்கள் இவரை ஒரு மிகப் பெரிய மேதையாகவே கற்பனை செய்து கொண்டார்கள்.

இஸ்லாமிய பெண் ஆளுமை என்ற மகுடத்தை இவருக்கு சூட்டியதின் மூலம் இவரை முஸ்லிம் பெண்களுக்கு ஓர் முன்மாதிரி என்ற அளவுக்கு உயர்த்தினார்கள்.

இதன் பின்னனியில் தான் கடந்த 16.03.2016 அன்று இவரை இலங்கைக்கும் அழைத்து வந்தார்கள் இங்குள்ள ஜமாஅத்தே இஸ்லாமியினர்.

ஆயிஷா சித்தீக்கா பெண்கள் அரபிக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தவக்குல் கர்மான் அங்கிருந்த மாணவிகள் மத்தியில் சிறப்புரையும் ஆற்றியிருந்தார். (அவர் ஆற்றிய உரை தொடர்பில் பின்னர் பார்க்க இருக்கிறோம்).

குறித்த கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட கர்மான் அவர்கள் பின்னர் இன்னும் சில நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்வுகளில் அவர் கலந்து கொண்ட முறைகள் பெரும் சர்சையை தோற்றுவித்தது.

குத்து விளக்கேற்றி, குத்தாட்டத்தில் கலந்து கொண்ட தவக்குல் கர்மான்.

கொழும்பு, களனி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட தவக்குல் கர்மான் நிகழ்ச்சியை ஆரம்பிக்கும் விதமாக அங்கு நடைபெற்ற குத்து விளக்கேற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு தானும் குத்து விளக்கேற்றினார்.

12729147_1730065400571072_5274379597126635019_n அதே நேரம் அங்கு நடைபெற்ற குத்தாட்ட நிகழ்விலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட தவக்குல் கர்மான் குத்தாட்டம் நடத்தியவர்களுடன் சேர்ந்து தானும் அதில் கலந்து கொள்ளும் விதமான புகைப்படங்களும் வெளியாகியிருந்தன.

தவக்குல் கர்மான் ஒரு இஸ்லாமிய பெண் ஆளுமை என்று பேசியவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்ற கேள்வியும் எழுந்தது.

காரணம் என்ன? குத்து விளக்கேற்றுவது என்பது மாற்று மத சகோதரர்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் செயல்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும். குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை ஆரம்பிப்பதே மங்கலகரமானது என்பதற்காகவே அவர்கள் தமது நிகழ்ச்சிகளில் குத்து விளக்கேற்றுவதை முற்படுத்துவார்கள். இப்படியான நிகழ்வுகளில் ஒரு முஸ்லிம் கலந்து கொள்வதை மார்க்கம் ஒரு போதும் அனுமதிக்க வில்லை.

அதே போல் குத்தாட்டம் போடும் நிகழ்வும் அங்கு நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் இணைந்து அந்த குத்தாட்டத்தை நடத்தினார்கள். ஒரு இஸ்லாமிய பெண் ஆளுமை இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாமா? கலந்து கொள்வதை மார்க்கம் அனுமதிக்கிறதா? என்றால் கண்டிப்பாக அனுமதிக்க வில்லை என்பது சின்னப் பிள்ளைக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும். ஆனால் இது தவக்குல் கர்மான் என்கின்ற ஜமாஅத்தே இஸ்லாமியின் பெண் ஆளுமைக்குத் தெரிய வில்லையாம்.

இதோ அல்லாஹ் சொல்லும் எச்சரிக்கையைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்.

திருக்குர்ஆன் 4:140

1939810_1730065337237745_4641768785221926665_nஒரு உண்மை முஸ்லிமாக இருந்தால், இஸ்லாமிய பெண் ஆளுமையாக இருந்திருந்தால் அல்லாஹ்வின் வசனங்கள் கேலி செய்யப்படும் இடத்தில் தவக்குல் கர்மான் இருந்திருப்பாரா? குத்து விளக்கேற்றியிருப்பாரா? குத்தாட்டத்தில் கலந்து கொண்டிருப்பாரா? என்பதை ஜமாஅத்தே இஸ்லாமியினர் ஏன் புரியவில்லை.

‘உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: முஸ்லிம் 70

தீமையைக் கண்டால் கரத்தால் தடுக்க வேண்டும். முடியாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும் அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தினால் வெறுத்து ஒதுங்கட்டும் என்று சொன்ன நபியவர்கள் இந்த நிலைதான் இறை நம்பிக்கையின் பலவீனமான நிலையாகும் என்று சொல்கிறார்கள்.

0T6A9268தவக்குல் கர்மான் குத்து விளக்கேற்றியதையும், குத்தாட்டத்தில் கலந்து கொண்டதையும் கையால் தடுக்க முடியா விட்டால் நாவால் தடுத்திருக்கலாம். அதுவும் முடியாவிட்டால் வெறுத்து ஒதுங்கியாவது இருக்கலாம். ஆனால் ஜமாஅத்தே இஸ்லாமியினரோ இவற்றை செய்யாமல் தவக்குல் கர்மான் செய்ததை சரி கண்டு கருத்து வெளியிடுவது இவர்கள் தமக்கு சூட்டிக் கொண்ட இஸ்லாமிய ஜமாஅத் என்பதை விட கர்மானை பாதுகாக்கும் கர்மான் ஜமாஅத் என்று பெயர் சூட்டிக் கொள்வதே பொருத்தமான என்பதை விபரிக்கிறது.

குத்து விளக்கேற்றியதை தடுக்க முடிய வில்லை, குத்தாட்டத்தில் கலந்து கொண்டதை தடுக்க முடியவில்லை அனால் கர்மான் செய்தது தவறு தான் என்று சொல்லவும் முடிய வில்லையா? கர்மானை காப்பாற்றப் போய் ஈமானை இழந்து கொள்ளலாமா? இதோ நபியவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : அபூதாவுத் (3512)

மாற்று சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் முஸ்லிம்களை சார்ந்தவர் இல்லை என்று நபியவர்கள் கூறுகின்றார்கள்.

குத்து விளக்கேற்றுவது மாற்று மத சகோதரர்களின் செயல்பாடு. குத்தாட்டத்தில் கலந்து கொள்வதும் இஸ்லாம் காட்டிய வழியல்ல ஆக இவற்றை செய்யும் தவக்குல் கர்மானை “இஸ்லாமிய பெண் ஆளுமை” என்று புகழ்ந்து பேசும் அளவுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது?

தவக்குல் கர்மான் தாம் சார்ந்திருக்கும் இயகத்தை சேர்ந்தவர் என்பதினால் அவரது செயல்பாடுகள் மார்க்கத்தை குழிதோண்டி புதைப்பதாக இருந்தாலும் அததை தடுக்க மனது இடம் கொடுக்க வில்லை ஜமாஅத்தே இஸ்லாமியினருக்கு. இஸ்லாமிய கொள்கையை விட இயக்க உறுப்பினர் தான் முக்கியமாகி விட்டார் இவர்களுக்கு.

இஸ்லாத்தை பிரச்சாரம் செய்யவோ, இஸ்லாத்தின் அடிப்படையை மக்கள் மத்தியில் புரிய வைப்பதற்கோ, குர்ஆனிய கருத்துக்களை மக்கள் மயப்படுத்துவதற்கோ எந்த முயற்சியும் மேற்கொள்ளாத குர்ஆன், சுன்னாவுக்கு தொடர்பே இல்லாத இவரை வைத்து மத்ரஸா மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடத்தியது எந்த விதத்தில் நியாயமானது?

மார்க்கத்தை படிப்பதற்காக ஐந்து வருடங்கள், ஏழு வருடங்கள் என்று தமது வாழ்நாளை மத்ரஸாக்களில் கழிக்கும் பெண்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தும் போது மார்கத்தை குழி தோண்டிப் புதைத்து, மார்கத்தை வியாபாரமாக மாற்றும் ஒரு பெண்ணை வைத்துத் தான் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டுமா என்ன?

அண்ணிய ஆண்களுடன் கைகுழுக்கும் தவக்குல் கர்மானும், ஆயிஷா சித்தீக்கா மத்ரஸா நிர்வாகமும்.

தவக்குல் கர்மான் என்ற பெண்ணை அழைத்து வந்து பட்டமளிப்பு விழா நடத்திய ஆயிஷா சித்தீக்கா மத்ரஸா நிர்வாகம் மற்றும் அதன் ஆசிரியர்கள் இந்த விஷயத்தில் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான விடயம் ஒன்றுள்ளது.

அதாவது எந்த தவக்குல் கர்மானை “இஸ்லாமிய பெண் ஆளுமை” என்று கூறி அழைத்து வந்து மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி, முன்மாதிரி மிக்க பெண்ணாக காட்ட முயன்றார்களோ அந்த தவக்குல் கர்மானைப் பொருத்த வரையில் அவர் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிப்பவரில்லை. இது உலகறிந்த உண்மையாகும்.

Untitledஆண்களுடன் பெண்களும், பெண்களுடன் ஆண்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் தெளிவான வழிகாட்டல்களை வழங்கியிருக்கிறது. அப்படியிருந்தும் அவற்றையெல்லாம் தூசுக்கும் பொருட்படுத்தாத ஒரு பெண்மணி தான் இந்த தவக்குல் கர்மான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அண்ணிய ஆண்களுடன் பெண்களோ, அல்லது அண்ணிய பெண்களுடன் ஆண்களோ கைகுழுக்குவதை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிப்பதில்லை. நபியவர்கள் தெளிவாக இதனை எதிர்த்திருக்கிறார்கள். அப்படியிருக்கும் போது தவக்குல் கர்மான் தான் சந்திக்கும் ஆண்களுடன் எந்தவித வெட்க்க உணர்வும் இன்றி கைகுழுக்கும் காட்சிகளை நாம் காண முடியும். இந்த விவகாரத்தை பொருத்த வரையில் தவக்குல் கர்மான் மாத்திரமல்ல இவர்களுடைய ஜமாஅத்தே இஸ்லாமிய இயக்கத்தை சேர்ந்த பல அறிஞர்களும் (?) இந்த காரியத்தில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்றாகும்.

உலகின் தலை சிறந்த அறிஞர் (?) என்று இவர்கள் வாயார போற்றிப் புகழும் யூசுப் அல்-கர்ளாவி என்பவர் இது போன்ற காரியத்தில் சர்வ சாதாரணமான ஈடுபடுவதை நாம் அவதானிக்க முடியும்.

downloadஆயிஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி நிர்வாகத்தினரும், ஆசிரியர்களும் இந்த வழியில் தான் தமது மாணவர்களை அழைத்துச் செல்கிறார்களா? அண்ணிய ஆண்களுக்கு கைகொடுக்கும் கேடு கெட்ட கலாசாரத்தைத் தான் தங்கள் மாணவிகள் மூலம் இந்த நாட்டில் அரங்கேற்ற முயற்சிக்கிறார்களா?

இதோ ஜமாஅத்தே இஸ்லாமியினருக்கும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கும் அவர்கள் அறியாத அல்லது அறிந்தும் வேண்டுமென்று புறக்கணிக்கும் நபி மொழியொன்றை இங்கு சுட்டிக் காட்டுகின்றோம்.

நான் சில பெண்களுடன் சேர்ந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பைஅத் (உறுதிமொழி) எடுக்கச் சென்றேன். அப்போது அவர்கள் ‘உங்களுக்கு இயன்றவரை சக்திக்கு ஏற்றவரை நிறைவேற்றுங்கள்’ என்று குறிப்பிட்டார்கள். பெண்களிடம் நான் முஸாஃபஹா செய்ய மாட்டேன் எனவும் கூறினார்கள்.

நூல் : இப்னுமாஜா 2865

13059839_1349470701736724_992748753_nபைஅத் எடுப்பதற்காக வந்த பெண்களிடம் கூட நான் உங்கள் கையைப் பிடித்து முஸாபஹா செய்ய மாட்டேன் என்று நபியவர்கள் மறுத்தார்களே? இந்த வழிமுறை தெரியாத ஒருத்தியை வைத்துத் தான் உங்கள் பட்டமளிப்பு விழாவை நடத்தினீர்களா?

இந்த செய்தி கூட தெரியாத கர்ளாவி தான் உங்களுக்கு உலகின் தலை சிறந்த (?) அறிஞரா? நபி வழியை விட கர்ளாவி வழியே சிறந்தது என்ற உங்கள் வழிகெட்ட சிந்தனை தான் இப்படி உங்களை செய்யத் தூண்டியதா?

இஸ்லாமிய பாரம்பரியத்தை விட்டு ஆயிஷா சித்தீக்கா மாணவிகள் வெளியேறுவார்களா?

ஜமாஅத்தே இஸ்லாமியின் ஆயிஷா சித்தீக்கா பெண்கள் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தவக்குல் கர்மான் அங்கு பேசிய உரை இங்கு கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றிய கர்மான் அங்கிருந்த மாணவிகளுக்கு பல செய்திகளை முன்வைத்து விளித்துப் பேசினார். அதில் ஒரு கட்டத்தில் இஸ்லாமிய பாரம்பரிய விழுமியங்களை விட்டும் வெளியேறுங்கள் அதனை உடைத்தெரியுங்கள் என்றும் அவர் கூறி உரையாற்றினார்.

இஸ்லாம் சொல்லும் பாரம்பரிய கலாசாரமாக இருக்கிற ஆண்களுக்கு பெண்கள் கைகுழுக்கக் கூடாது, ஆண்களுடன் பெண்கள் கலந்திருக்கக் கூடாது. ஒழுக்கம் பேண வேண்டும் போன்ற கட்டளைகள் தவக்குல் கர்மானைப் பொருத்த வரையில் இஸ்லாமிய அடிப்படைவாத பாரம்பரியம் தான். இதனை விட்டுத் தான் ஆயிஷா சித்தீக்கா மாணவிகளும் வெளியேற வேண்டும் என்று கர்மான் விரும்புகிறாரா? இதனை தான் ஆயிஷா சித்தீக்கா மத்ரஸா நிர்வாகவும் ஜமாஅத்தே இஸ்லாமியும் விரும்புகிறதா?

நான் ஆண்களுடன் சரி சமனாக இருந்திருக்கிறேன். கையோடு கையாக, காலோடு காலாக இருந்திருக்கிறேன் என்றெல்லாம் கர்மான் குறித்த உரையில் கூறுகிறாரே இதனைத் தான் ஆயிஷா சித்தீக்கா மத்ரஸா நிர்வாகவும் தனது மாணவிகளிடம் எதிர்பார்க்கிறதா?

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பின்பற்றி வாழ்வதுடன் இஸ்லாம்  கற்றுத் தரும் ஒழுக்க விழுமியங்களையும் அச்சொட்டாக பின்பற்றி வாழக் கூடிய சமுதாயத்தை உருவாக்க வேண்டியவர்கள். மார்க்கம் வெறுக்கக் கூடிய நபியவர்கள் தடுக்கக் கூடிய காரியங்களை செய்யும் தவக்குல் கர்மான் போன்றவர்களை “இஸ்லாமிய பெண் ஆளுமை” என்று புகழ்ந்து, பாராட்டி அவர்களுக்கு சமுதாய அங்கீகாரம் கொடுத்து, கர்மானைப் போன்றவர்களை இங்கும் உருவாக்கத் துடிக்கும் ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் ஆயிஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி நிர்வாகம் போன்றவை என்று இதனைப் புரிந்து கொள்ளுமோ?

இஸ்லாமிய ஆட்சியை உருவாக்கப் புறப்பட்டவர்களின் இஸ்லாமிய சிந்தனை இவ்வாறு தான் இருக்கிறது என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் தலைமையில் ஆட்சி வந்தால் நாடு எப்படியிருக்கும் என்பதையும் ஒழுக்கமும், நல்ல பண்பாடுகளும், பெண்களின் செயல்பாடுகளும் எப்படி அமையும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

2,174 total views, 1 views today