LATEST
Home » கட்டுரைகள் » சிறப்புக் கட்டுரை » கப்ரு வணங்கிகளின் சூழ்ச்சியை வென்ற சிங்கள மொழியில் அல்-குர்ஆன் வெளியீடு -அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

கப்ரு வணங்கிகளின் சூழ்ச்சியை வென்ற சிங்கள மொழியில் அல்-குர்ஆன் வெளியீடு -அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் சிங்கள மொழியிலான அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது.

சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வை தடுத்து, அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முயன்றவர்களின் முகத்திரையைக் அல்லாஹ் கிழித்தெரிந்தான்.

இலங்கை முஸ்லிம் வரலாற்றின் முக்கிய நிகழ்வு

சிங்களம் பேசும் பெரும்பான்மை பௌத்த மக்களைக் கொண்ட இலங்கைத் திருநாட்டில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்கள், பிரச்சாரங்கள் முன்னெடுக்கப் பட்டு, உலக மக்களின் நேர்வழிகாட்டியான திருமறைக் குர்ஆன் மீதும், அதன் கருத்துக்கள் மீதும் பலத்த சந்தேகங்களும் இனவாதிகளினால் கடந்த காலங்களில் எழுப்பப் பட்டன.

இவையனைத்துக்கும் பதிலளிக்கும் விதமான குர்ஆன் மொழி பெயர்ப்பொன்று இல்லையே என்ற குறையை நீக்கும் விதமாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் அல்-குர்ஆன் சிங்கள மொழியாக்கம் 08.11.2015 ஞாயிற்றுக் கிழமை அன்று கொழும்பில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

பி.ஜெ வருகை அறிவிப்பும், ஆட்டம் கண்ட அசத்திய வாதிகளும்.

தவ்ஹீத் ஜமாத்தின் அல்-குர்ஆன் மொழியாக்க வெளியீட்டு நிகழ்வுக்கு தென்னிந்திய மார்க்க அறிஞர் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் வருகை தருவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்ட்டன.

இதற்கான அனுமதியை இலங்கை முஸ்லிம் கலாசார தினைக்களம், முஸ்லிம் விவகார அமைச்சு, மற்றும் குடிவரவு, குடியகல்வு தினைக்களம் ஆகியவை வழங்கியிருந்தன. அதன் அடிப்படையில் பி.ஜெ வருகைக்கான விஸாவும் தவ்ஹீத் ஜமாத்திற்கு கிடைக்கப் பெற்றது.

சகோ. பி.ஜெ அவர்கள் இலங்கை வருகின்றார் என்ற அறிவிப்பை தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டது தான் தாமதம் தவ்ஹீதின் எதிரிகள் அனைவரும் ஆட்டம் காண ஆரம்பித்தார்கள்.

ஏகத்துவப் பிரச்சாரத்தின் முன்னொடியாக அறியப்படும் சகோ. பி.ஜெ அவர்களின் வருகை இலங்கையில் இருக்கும் வழிகெட்ட கொள்கைகளின் சொந்தக்காரர்களின் வருமானத்திற்கு பெருத்த அடியாக அமைந்து விடும் என்பதினால் அவரின் வருகையை தடுப்பதற்கான முழு முயற்ச்சியில் வழிகேடர்கள் இறங்கினார்கள்.

முஸ்லிம் கலாசார தினைக்களத்திற்கு கடும் அளுத்தங்களை அரசியல் ரீதியாக முன் வைத்தார்கள். முஸ்லிம் கலாசார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் சகோதரர் பி.ஜெயின் விஸாவை ரத்து செய்ய வேண்டி அளுத்தங்களை பிரயோகித்தார்கள் எதிரிகள்.

குறிப்பாக கடந்த வியாழக்கிழமை (05.11.2015) அன்று சகோ. பி.ஜெ அவர்களுக்கு வழங்கப்பட்ட விஸாவை ரத்து செய்யக் கோரி அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவினால் முஸ்லிம் கலாசார தினைக்களத்திற்கு பலத்த அளுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.

அளுத்தங்களுக்கு அடி பணியாத கலாசார அமைச்சு விஸாவை தடுப்பதற்கு மறுத்து விட்டது.

ஜம்மிய்யதுல் உலமாவுடன் கைகோர்த்த கப்ரு வணங்கிகள்.

அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையினர் பி.ஜெ வருகையை தடுப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டிருந்த அதே வேலை கப்ரு வணங்கிகளும் அதற்கான முயற்ச்சிகளில் ஈடுபட்டார்கள்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை அவசர அவசரமாக சென்று சந்தித்த ஜ. உலமா சபையினர் பி.ஜெ வருகையை தடுக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தார்கள். இந்த சந்திப்பில் ஜ. உலமா சபை சார்பில் மவ்லவி தாசிம், பாஸில் பாருக், தஹ்லான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதே நேரம் இலங்கை அரசியல் வரலாற்றில் மக்களால் தூக்கியெறியப்பட்டு, அடுத்தவன் மனைவியை அபகரித்து வைத்துக் கொண்டிக்கும் வெட்க்கம் கெட்ட ஒரு அரசியல் வாதியும், அவரது சகாக்களும் பி.ஜெ வருகையை தடுப்பதற்கு முழு மூச்சுடன் செயல்பாட்டு வந்தார்கள்.

ஏகத்துவப் பிரச்சாரகர் ஒருவரின் வருகையை தடுப்பதற்கு கப்ரு வணங்கிகள் களமிறங்கி செயல்பட்டார்கள்.

தர்காவுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய கப்ரு வணங்கிகள்

கொழும்பில் அமைந்துள்ள தெவடகஹ தர்காவுக்கு முன் கடந்த 06.11.2015 வெள்ளிக்கிழமை அன்று கப்ரு வணங்கிகள் சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கப்ரு வணங்கிகளின் தலைவர்கள் பி.ஜெ நாட்டுக்குள் நுழையக் கூடாது என்று கோரிக்கை வைத்தார்கள். சுமார் நூறு பேர் அளவில் கலந்து கொண்ட இவ்வார்ப்பாட்டத்தில் பி.ஜெ அவர்களின் புகைப்படங்களைக் கொண்ட பதாதைகளை வைக்கப்பட்டிருந்தன.

எதிரிகள் தந்த இலவச விளம்பரம்

தவ்ஹீத் ஜமாத்தின் அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு தொடர்பில் நாம் செய்த விளம்பரத்தை விட அதிகமாக எதிரிகள் இலவச விளம்பரம் தந்தார்கள்.

பி.ஜெ என்றால் யார் என்று சிறு பிள்ளைகளுக்கும் தெரியும் அளவுக்கு இவர்களின் விளம்பரம் பட்டி தொட்டியெங்கும் சென்றது.

குறிப்பாக குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு வெளியீடு பற்றிய செய்திகள் அனைத்து ஊடகங்களிலும் தினமும் இடம் பெரும் அளவுக்கு அதன் இவர்களின் விளம்பரங்கள் அமையப் பெற்றன.

ஒரு தனி மனிதனுக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பலைகள் என்ற மில்லியன் பெருமதியான கேள்விகள் அனைத்துத் தரப்பாளும் முன்வைக்கப்பட்டன. பி.ஜெ நாட்டுக்குள் நுழைவதை ஏன் தடுக்க வேண்டும்? அவர் ஒரு இஸ்லாமியப் பிரச்சாரகர். அவருடைய வருகை வரவேற்கத் தக்கது என்று எதிர்தரப்பினரின் சில முக்கியஸ்தர்களே தமது கருத்துக்களை பகிரங்கமாக வெளியிட ஆரம்பித்தனர்.

சமூக வலை தளங்களான ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப், கூகுல் ப்லஸ் போன்ற அனைத்திலும் கடந்த இரண்டு வாரங்களாக தவ்ஹீத் ஜமாத்தின் அல்-குர்ஆன் வெளியீடு மற்றும் சகோ. பி.ஜெ யின் இலங்கை வருகை பற்றிய கருத்துப் பகிர்வுகளே அதிகமாக முன் வைக்கப்பட்டு வந்தன.

சாதாரண பொது மக்களுக்கும் சென்றடையும் வகையில் பி.ஜெ அவர்களின் இலங்கை வருகை மற்றும் குர்ஆன் வெளியீடு பற்றிய நிகழ்வுக்கு இலவச விளம்பரத்தினை எதிரிகள் பெற்றுத் தந்தார்கள்.

அவமானப்பட்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை.

பி.ஜெ அவர்களின் இலங்கை வருகைக்கு எதிராக சூழ்ச்சி செய்த ஜம்மிய்யதுல் உலமா சபையினர் பி.ஜெ வருகையை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருந்ததுடன் அதனை ஊடகங்களிலும் வெளியிட்டிருந்தார்கள். குறித்த கடிதத்தில் பி.ஜெ அவர்களை இலங்கைக்கு அழைத்து வர வேண்டாம் என்றும் அவருடைய கருத்துக்கள் விஷயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் ஜம்மிய்யதுல் உலமாவினர் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.

காதியானிகள், ஷீயாக்கள், போராக்கள், கப்ரு வணங்கிகள் என்று எத்தனையோ வழிகேடர்கள் இந்நாட்டுக்கு வந்து பிரச்சாரம் செய்யும் நிலையில் பி.ஜெ மாத்திரம் இலங்கை வரக் கூடாது. அவர் விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைத்ததின் மூலம் பொது மக்கள் மத்தியில் அவமானப்பட்டது ஜம்மிய்யதுல் உலமா சபை.

அத்துடன் அவர்களின் கடிதத்திற்கு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நாம் வழங்கிய பதில் கடிதம் பெரும் வரவேற்பையும் பெற்றுக் கொண்டது.

அனைத்துத் தரப்பாரையும் அரவனைக்கும் செயலில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்து நாடகமாடிய அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவினர் தாம் தப்லீக் மற்றும் கப்ரு வணக்கம், ஷீயா, காதியானிகள் சார்ந்தவர்களை மாத்திரம் தான் ஆதரிப்போம் இவற்றுக்கு எதிராக இருக்கும் தவ்ஹீத் ஜமாத்தை எதிப்பது தான் எம் வேலை என்பதை வெளிப்படுத்திக் காட்டினார்கள்.

ஊழியரின் கையெழுத்தில் வெளியான உத்தியோகபூர்வ (?) கடிதம்

பாராளுமன்ற அனுமதியைப் பெற்ற அமைப்பு ஜம்மிய்யதுல் உலமா சபை என்று பீத்திக் கொள்ளும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவினால் அறிஞர் பி.ஜெ அவர்களின் இலங்கை வருகையைத் தடுக்குமாறும், பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் வேண்டப்பட்டு வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ கடிதத்தில் உலமா சபை அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியரே கையெழுத்திட்டுள்ளார்.

உத்தியோகபூர்வ கடிதத்தில் தலைவர், பொதுச் செயலாளர் அல்லது அதற்கு கீழ் மட்டத்தில் நிர்வாகியாக இருப்பவர்கள் கையெழுத்திடுவார்கள். ஆனால் இவர்களின் இந்த கடிதத்தில் ஒரு ஊழியர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்தளவு அற்பத்தனமாக செயல்படுபவர்கள் தான் இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையில் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது ஒரு கேவலமான உண்மையாகும்.

அடுத்தவன் மனைவியை அபகரித்தவனெல்லாம் அல்லாஹ்வின் மார்கத்தை பற்றி பேசலாமா?

இலங்கையின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் மனைவியை அபகரித்து அவளுடன் குடும்பம் நடத்தும் அசிங்கமானவன் தான் அஸாத் சாலி என்பவன்.

சகோ. பி.ஜெ அவர்கள் இலங்கை வரக் கூடாது என்று ஊடகங்களில் கருத்துக் கூறி, பி.ஜெ யின் வருகையை தடுக்கும் ஜம்மிய்யதுல் உலமாவின் முயற்சிக்கு மிக ஒத்துழைப்பாக இருந்தவனும் இவன்தான்.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எத்தி வைக்கும் அறிஞர் பி.ஜெ அவர்களின் இலங்கை வருகையை தடுப்பதற்கு இவனுக்கோ ஜம்மிய்யதுல் உலமாவுக்கோ என்ன அருகதை இருக்கின்றது?

உணவுப் பொருட்களுக்கு ஹழால் சான்றிதல் வழங்கும் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா அஸாத் சாலியின் அடுத்தவன் மனைவி அபகரிப்புக்கும் ஹழால் சான்றிதழ் வழங்கியுள்ளதா? என்பதே சமூக வலை தளங்களில் நடுநிலையாளர்கள் எழுப்பும் முக்கிய கேள்வியாகும்.

குர்ஆனை முடக்க முஷ்ரீகீன்கள் செய்த முயற்சி

சிங்கள மொழியில் அல்குர்ஆன் வெளியிடப்படுவதை தடுக்க முயன்ற கப்ரு வணங்கிகளும், ஜம்மிய்யதுல் உலமா ஆதரவாளர்களும் இணைந்து கடந்த 06.11.2015 அன்று தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக ஒரு வழக்கை தாக்கள் செய்தார்கள்.

பொது பல சேனாவினால் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குடன் இணைந்ததாக இவர்களின் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஒரு குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு எதிர்வரும் 08.11.2015 அன்று வெளியிடப்படவுள்ளது. குறித்த குர்ஆன் மொழி பெயர்ப்பில் மதங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உண்டாக்கும் விதமான கருத்துக்கள் அடங்கியுள்ளன. ஆகவே இந்த குர்ஆனை வெளியிடக் கூடாது என்று நீதி மன்றம் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியே குறித்த வழக்கை வழிகேடர்கள் தாக்கள் செய்திருந்தார்கள்.

அல்-குர்ஆனிய கருத்துக்கள் சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருந்தால் இனவாதப் பிரச்சினைகளின் பல தடுக்கப்பட்டிருக்கும் என்ற நிலையில் குர்ஆனை சிங்கள மொழியாக்கம் செய்து வெளியிட எத்தனிக்கும் நேரம் அதனைத் தடுப்பதற்கும் முடக்குவதற்கும் எந்த முஸ்லிமாவது முயற்சி செய்வானா?

இவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள்.

குர்ஆனையும், நபியவர்களின் தூய வழிகாட்டல்களையும் புறக்கணித்து, ஷீயாக்களின், காதியானிகளின் கொள்கைகளை இஸ்லாமாக ஏற்றுக் கொண்டுள்ள இவர்கள் குர்ஆனை வெளியிட முடியாமல் தடை விதிக்க கோரிக்கை வைத்ததில் ஏகத்துவ வாதிகளுக்கு ஆச்சரியம் இல்லை.

கற்பூர வாசனை அறியாத கழுதைகள்

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? என்று தமிழில் இருக்கும் பழமொழிக்கு முழு விளக்கவுரையாக இருப்பவர்கள் இவர்கள் தான் என்று பொது மக்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வெளியீட்டை தடுக்க இவர்கள் செய்த முயற்சி அமைந்து விட்டது.

அல்-குர்ஆனை படித்திருந்தால், அதில் உள்ள கருத்துக்களை புரிந்திருந்தால், ஈமான் உள்ளத்தை ஈர்த்திருந்தால், அல்லாஹ்வின் மீதான பயம் உள்ளத்தில் இருந்திருந்தால் அல்லாஹ்வின் வேதத்தை தடுப்பதற்கு இவர்கள் முயற்சி செய்திருக்க மாட்டார்கள்.

அறிவை அடகு வைத்த கப்ரு வணங்கிகள்

சிங்கள மொழியாக்க அல்-குர்ஆனில் பிரச்சினை இருப்பதாக முறைபாடு செய்தவர்களிடம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் (CCD) முன்வைத்த ஒரு கேள்வி அவர்களை திக்குமுக்காடச் செய்தது.

சிங்கள குர்ஆன் மொழியாக்கம் இன்னும் வெளியிடப்படவே இல்லை அப்படியிருக்கும் போது, குர்ஆனில் பிழை இருப்பதாக எப்படி சொல்ல முடியும்? இவர்கள் அதனை வெளியிடவே இல்லை? யாரும் அதனை படிக்கவும் இல்லையே? இனி எப்படி அதில் சிக்கள் இருப்பதாக நீங்க்ள சொல்ல முடியும்? என்பதே குற்றத் தடுப்புப் பிரிவின் கேள்வியாக அமைந்தது.

குறித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அசிங்கப்பட்டு தலை குனிந்தது கப்ரு வணங்கிக் கூட்டம்.

சிங்கள மொழியில் அல்-குர்ஆன் வெளியீடு அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன் (அல்குர்ஆன் 86:15)

வழிகெட்டவர்களின் அனைத்து சூழ்சிகளையும் தாண்டி இறைவன் தந்த மாபெரும் வெற்றியாக நேற்றைய குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு அமைந்தது அல்ஹம்து லில்லாஹ்.

சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் சமூக சகவாழ்வுக்கு என்ன வழி? என்ற தலைப்பில் ஜமாத்தின் தலைவர் சகோ. ஆர்.எம் ரியால் அவர்களும், இளைஞர்களே இஸ்லாத்தின் தூண்கள் என்ற தலைப்பில் ஜமாத்தின் துணை தலைவர் சகோ. பர்சான் அவர்களும், புரட்சிப் பாதையில் தவ்ஹீத் ஜமாத் என்ற தலைப்பில் ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் அவர்களும் சிங்கள மொழியில் எக்காலத்திற்கும் பொருத்தமான வேதம் அல்-குர்ஆன் என்ற தலைப்பில் ஜமாத்தின் செயலாளர் ஆர். அப்துர் ராசிக் அவர்களும் உரையாற்றினார்.

ஜமாத்தின் துணை செயலாளர் சகோ. ஹிஷாம் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

மனதை நெகிழ வைத்த அல்-குர்ஆன் வெளியீடு

சிங்கள மொழி மூலமான உரையை தொடர்ந்து அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமானது.

சிங்கள மொழியில் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வில் குர்ஆனில் முதல் பிரதியை பாராளுமன்ற உறுப்பினரும், மத்திய கொழும்பு ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் MP அவர்களுக்கு ஜமாத்தின் தலைவர் சகோ. ரியாழ் அவர்கள் வழங்கி வைத்தார்கள்.

முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹுனைஸ் பாருக், மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீமின் சகோதர் ரவுப் ஹஸீர் உலமா கட்சி தலைவர் மவ்லவி முபாரக் அப்துல் மஜீத், சட்டத்தரணிகளான ரூஷ்தி ஹபீப், மற்றும் சரூக் ஆகியோரும் அல்குர்ஆன் பிரதிகளை பெற்றுக் கொண்டார்கள்.

பல தடைகளையும் தாண்டி அல்-குர்ஆன் வெளியிடப்பட்ட அந்த நேரம் அனைவரும் மனம் நெகிழ்ந்து சந்தோஷப்பட்டார்கள். – அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.

சந்தோஷம் தந்த சகோதரர் பி.ஜெ வின் உரை.

சகோ. பி.ஜெ அவர்களின் இலங்கை வருகை இறுதி நேரத்தில் தடை செய்யப்பட்டதும். அவரை எப்படியும் உரையாற்றச் செய்ய வேண்டும் என்பதினால் இணையதளம் மூலம் சகோ. பி.ஜெ அவர்கள் உரை நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இலங்கை வந்து ஓர் அரங்கத்தில் உரை நிகழ்த்துவதை தடை செய்த சூழ்ச்சியாளர்களை அல்லாஹ் கேவலப்படுத்தி விட்டான்.

அரங்கத்தில் உரையாற்றினால் அங்குள்ளவர்கள் மாத்திரம் பி.ஜெ யின் உரையை கேட்டிருப்பார்கள். ஆனால் இவர்களின் சூழ்ச்சியினால் உலகம் முழுவதும் இருந்து பி.ஜெ யின் உரையை அனைவரும் பார்க்கும் நிலையை இவர்கள் உண்டாக்கி விட்டார்கள்.

ஆன்லைன் பி.ஜெ (www.onlinepj.com) இணையதம் மற்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் www.sltj.lk ஆகிய தளங்களில் இந்நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பி.ஜெயின் இலங்கை வருகையை தடுத்து இலவச விளம்பரம் பெற்றுத் தந்து உலகம் முழுவதம் இருந்து பி.ஜெ யின் உரையை அனைத்து மக்களையும் கேட்ப்பதற்கு வழி செய்த கப்ரு வணங்கிகளுக்கும், ஜம்மிய்யதுல் உலமாவினருக்கும் ஒரு வகையில் நாம் நன்றி சொல்ல வேண்டும்.

யார் என்ன சூழ்ச்சி செய்தாலும் ஏகத்துவத்தின் வெற்றியை யாரும் தடுத்த நிறுத்த முடியாது என்பதை அல்லாஹ் மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டி விட்டான் – அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர். நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன் (அல்குர்ஆன் 86:15)

912 total views, 1 views today