LATEST
Home » அரசியல் » எதிர்காலத்தை அறியும் ஆற்றல் மனித மூலைக்கு உள்ளதா? இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் ஆய்வு முடிவு.

எதிர்காலத்தை அறியும் ஆற்றல் மனித மூலைக்கு உள்ளதா? இஸ்லாத்தை உண்மைப் படுத்தும் ஆய்வு முடிவு.

கனவு காணாத மனிதர்களே உலகில் இல்லை. இருக்கவும் முடியாது. கனவுகள் என்பது மனித வாழ்வில் ஓர் அங்கமாக மாறி விட்டது. நாம் கானும் கனவுகளுக்கும் மனித மூலைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நவீன அறிவியல் கண்டு பிடிப்பொன்று கூறுகின்றது.

எதிர்காலத்தை அறியும் ஆற்றல் மனித மூளைக்கு உள்ளதா?

மனித மூளை எப்போதும் விசித்திரமானது. அதன் முழுமையான செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பல விசித்திரங்களுக்கு இன்னும் விடை கிடைத்த பாடில்லை. நாம் தூங்கும் போது மூளையும் நம்முடனே சேர்ந்து தூங்குவதாகத்தான் பலரும் நினைக்கிறோம். ஆனால், மூளை தூங்குவதில்லை.

மாறாக, இரவில் அதிகமான சுறுசுறுப்புடன் அது இயங்குகிறது. கனவு வந்தாலும் வராவிட்டாலும் மூளை தொடர்ந்து உற்சாகமாக இயங்குகிறது. மூளை எப்போதும் தூங்கவே தூங்காது என்பதுதான் உண்மை. அப்படி, அது தூங்கினால் நாம் நிரந்தரமாக தூங்கி இருப்போம்.

நமது மூளைக்கு எதிர்காலத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கும் ஆற்றல் உள்ளது. பின்னாளில் நடைபெறும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிவிக்கும் திறன் நம் மூளைக்கு உண்டாம். அதுதான் கனவுகளாக நமக்கு உணரவைக்கப் படுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த கனவு வழியாக எதிர்காலத்தை அறியும் திறன் மனிதனுக்கு மனிதன் வித்தியாசப்படும். அதனால்தான் சிலர் காணும் கனவுகள் மட்டும் அப்படியே பலிக்கின்றன. சிலரின் கனவுக்கும் நடப்பதற்கும் சம்பந்தமே இருப்பதில்லை. இது எப்படி நடக்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கே முழுமையாக புரியவில்லை.

இவ்வுலகைப் படைத்து பரிபாலனம் செய்து கொண்டிருக்கும் ஏக இறைவன் அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தின் இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இந்த செய்தியை முற்கூட்டியே நமக்கு சொல்லிச் சென்றுள்ளமையானது இஸ்லாம் தான் உண்மையான மார்க்கம் என்பதை நிரூபணம் செய்யும் மற்றொரு சான்றாகும்.

இது தொடர்பில் இஸ்லாமிய மார்க்கம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு தெளிவாக கற்றுத் தந்துள்ளது.

‘கனவுகள் மூன்று வகைப்படும். நல்ல கனவுகள் அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தியாகும். மற்றொரு கனவு ஷைத்தான் புறத்திலிருந்து கவலையை ஏற்படுத்துகின்ற கனவாகும். மூன்றாவது தன் உள்ளத்திலிருந்து மனிதன் காண்கின்ற கனவாகும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 4200

‘நல்ல கனவுகள் நுபுவ்வத்தின் (இறைவனிடமிருந்து தூதர்களுக்கு கிடைக்கும் தூதுச் செய்தியின்) நாற்பத்தி ஆறு பங்கில் ஒரு பங்காகும்’ என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 6987, 6988, 6989, 6983, 6994

சில அறிவிப்புக்களில் ’45ல் ஒரு பங்கு’ என்று கூறப்பட்டுள்ளது. (முஸ்லிம் 4200)

வேறு சில அறிவிப்புகளில் ’70ல் ஒரு பங்கு’ என்று கூறப்பட்டுள்ளது. (முஸ்லிம் 4205)

நமக்கு எதிர்காலத்தில் கிடைக்கவுள்ள பொருட்செல்வம், மழலைச் செல்வம், பட்டம், பதவிகள் போன்றவற்றை முன்கூட்டியே கனவின் மூலம் இறைவன் அறிவிப்பான். இது முதல் வகை கனவு. அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்செய்தி என்பதன் கருத்து இது தான்.

கவலையை ஏற்படுத்தி வணக்க வழிபாடுகளில் உள்ள ஈடுபாட்டைக் குறைப்பதற்காகவும், போலிகளிடம் விளக்கம் கேட்டு இறை நம்பிக்கைக்கு ஊறு விளைவிப்பதற்காகவும் ஷைத்தான் நடத்தும் நாடகம் இன்னொரு வகையான கனவாகும்.

நமது ஆழ் மனதில் பதிந்துள்ள எண்ணங்களும் கனவுகளாக வெளிப்படுகின்றன. இதில் மகிழ்ச்சியடையவோ கவலைப்படவோ ஒன்றுமில்லை. இதற்கு எந்த அர்த்தமுமில்லை. இது மூன்றாவது வகையாகும்.

அதே போல் இன்னொரு முக்கிய செய்தியையும் அந்த ஆய்வு வெளிப்படுத்துகின்றது.

மூளையின் நடுப்பகுதியில் உள்ள “டோபமைன்” என்ற அமைப்பு நமது வாழ்வில் இது வரை நடக்காத சம்பவங்களைப் பற்றி நமக்கு அறிகுறிகளை தந்துகொண்டே இருக்கும். நாம் சில செயல்களை செய்யும்போது தடுத்து, ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த “டோபமைன்” என்ற பகுதிதான் காரணமாக இருக்கின்றது. அதையும் மீறி அந்தக் காரியத்தை நாம் செய்யும்போது தோல்வி அடைகிறோம் என்றும், மூளை தரும் அந்த அச்சம்தான் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பு என்றும் கூறுகிறார்கள். இதைதான் தன்னம்பிக்கை இல்லாமல் ஒரு செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் குறிப்பிடுகிறார்கள். என குறித்த ஆய்வு குறிப்பிடுகின்றது.

ஒரு காரியத்தில் ஈருபடும் போது, அந்தக் காரியம் பற்றி முடிவெடுக்க முடியாதவாறு குழப்பம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று இஸ்லாம் ஓர் அழகிய வழிமுறையைக் கற்றுத் தருகின்றது.

ஒரு காரியத்தைச் செய்யலாமா? வேண்டாமா? என்ற குழப்பம் ஏற்பட்டால் கடமையில்லாத இரண்டு ரக்அத்கள் நபில் தொழுது விட்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும். அவ்வாறு ஓதினால் அக்காரியம் நல்லதாக இருந்தால் அதில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்துவான். அது கெட்டதாக இருந்தால் அதிலிருந்து நம்மைக் காப்பாற்றி விடுவான்.

ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390

اَللّهُمَّ إِنّيْ أَسْتَخِيْرُكَ بِعِلْمِكَ وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيْمِ فَإِنَّكَ تَقْدِرُ وَلاَ أَقْدِرُ وَتَعْلَمُ وَلاَ أَعْلَمُ وَأَنْتَ عَلاَّمُ الْغُيُوْبِ اَللّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ خَيْرٌ لِيْ فِيْ دِينِيْوَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ وَآجِلِهِ فَاقْدُرْهُ لِيْ وَيَسِّرْهُ لِيْ ثُمَّ بَارِكْ لِيْ فِيْهِ وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الأَمْرَ شَرٌّ لِيْ فِيْ دِينِيْ وَمَعَاشِيْ وَعَاقِبَةِ أَمْرِيْ وَآجِلِهِ فَاصْرِفْهُ عَنِّيْ وَاصْرِفْنِيْ عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِيْ

இதன் பொருள் :

இறைவா! நீ அறிந்திருப்பதால் எது நல்லதோ அதை உன்னிடம் தேடுகிறேன். உனக்கு ஆற்றல் உள்ளதால் எனக்கு சக்தியைக் கேட்கிறேன். உனது மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ தான் சக்தி பெற்றிருக்கிறாய். நான் சக்தி பெறவில்லை. நீ தான் அறிந்திருக்கிறாய். நான் அறிய மாட்டேன். நீ தான் மறைவானவற்றையும் அறிபவன்.

இறைவா! இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும், மறுமைக்கும் நல்லது என்று நீ கருதினால் இதைச் செய்ய எனக்கு வலிமையைத் தா! மேலும் இதை எனக்கு எளிதாக்கு! பின்னர் இதில் பரகத் (புலனுக்கு எட்டாத பேரருள்) செய்!

 இந்தக் காரியம் எனது மார்க்கத்திற்கும், எனது வாழ்க்கைக்கும், எனது இம்மைக்கும்,எனது மறுமைக்கும் கெட்டது என்று நீ கருதினால் என்னை விட்டு இந்தக் காரியத்தைத் திருப்பி விடு வாயாக! இந்தக் காரியத்தை விட்டும் என்னைத் திருப்பி விடுவாயாக. எங்கே இருந்தாலும் எனக்கு நன்மை செய்யும் ஆற்றலைத் தருவாயாக! பின்னர் என்னைத் திருப்தியடையச் செய்வாயாக.

ஆதாரம்: புகாரி 1166, 6382, 7390

இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டு மேலுள்ள துஆவை ஓதினால் நாம் முடிவெடுக்கும் விதமாக இறைவன் நமக்கு குறித்த விஷயத்தில் ஓர் தெளிவைத் தருவான் என்பது மேற்கண்ட நபி மொழியின் கருத்தாகும். இதனைத் தான் இன்றைய நவீன அறிவியல் மூளையின் நடுப்பகுதியில் உள்ள “டோபமைன்” என்ற அமைப்பின் செயல்பாடு என்று கூறுகின்றது.

இன்றைய நவீன அறிவியல் கண்டு பிடித்து சொல்லும் ஒரு செய்தியை 1400 வருடங்களுக்கு முன்பே முஹம்மது நபியினால் எப்படி சொல்ல முடியம் என்பதை சிந்தித்தால், கண்டிப்பாக அவர் இறைவனின் தூதர் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகின்றது.

மூலை தொடர்பாக இந்த ஆய்வுக் கட்டுரையின் இறுதிப் பகுதி இன்னொரு முக்கிய அம்சத்தையும் நமக்கு தெளிவு படுத்துகின்றது.

அதாவது, சராசரியாக, ஆணோடு ஒப்பிடும்போது பெண்கள் தங்கள் மூளையை 10 சதவீதம் குறைவாகவே பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால்தான் முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை வரும்போது பெண்கள் சற்று குழம்புகிறார்கள். என்கிறது அந்த ஆய்வு முடிவு.

அறிவியல் உலகம் இன்றைக்கு ஆய்வு செய்து ஒப்புவித்த முடிவை 1400 வருடங்களுக்கு முன்பதாகவே இஸ்லாம் உலகுக்கு எத்தி வைத்து விட்டது.

பொதுவாகவே பெண்களின் சிந்தனை ஆற்றல் என்பது குறைவானது. ஆணுக்கு பெண் சமம் என்ற வாதம் அனைத்து இடங்களுக்கும் பொருத்தமானது அல்ல என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

“நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை, அறிவிலும் மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்” என்று நபியவர்கள் கூறினார்கள். அப்போது அப்பெண்கள், “மார்க்த்திலும் அறிவிலும் எங்களுடைய குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?” என்று  நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், “ஆம் (பாதியளவுதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அதுதான் அவளது அறிவின் குறைபாடாகும்:” என்று கூறிவிட்டு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்க, மீண்டும் அப்பெண்கள் “ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்” என்று கூறினார்கள்.

புகாரி -304

பெண்களைப் பொருத்த வரையில் அவர்கள் அறிவில் ஆண்களை விட குறைவுடையவர்கள் என்பதை இன்றைய நவீன அறிவியல் சொல்வதற்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பதாகவே நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இஸ்லாம் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட உண்மை வழிகாட்டி என்பதை நவீன அறிவியலும் நாளும் நாளும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

மேற்கண்ட ஆய்வு முடிவு இலங்கையில் பிரபல செய்தி இணையதளமான தமிழ் மிரர் தளத்தில் கடந்த 04.10.2015 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஆக்கம் : ரஸ்மின் MISc

4,120 total views, 2 views today