LATEST
Home » கட்டுரைகள் » சிறப்புக் கட்டுரை » அசத்தியத்தின் பதில் அசையாத மௌனமே! – பகிரங்க விவாதம் ஓர் சுருக்கப் பார்வை

அசத்தியத்தின் பதில் அசையாத மௌனமே! – பகிரங்க விவாதம் ஓர் சுருக்கப் பார்வை

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. (அல்குர்ஆன் 21:18)

அசத்தியத்தை மூலதனமாக வைத்து சத்தியத்தை அழிப்பதற்கும், இல்லாதொழிப்பதற்கும் காலா காலமாக வழிகேடர்கள் முயற்சி செய்வதும், இறுதியில் அது செயலற்றுப் போய் வழிகேடு அழிந்து நாசமாவதும் உலக வரலாறாகும்.

அந்த வகையில் இலங்கை பிரச்சாரக் களத்தில் ஏகத்துவப் பிரச்சாரத்தையும், சமுதாயப் பணிகளையும் வேகமாகவும், வீரியமாகவும் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத மக்கள் மத்தியில் செய்து வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் (SLTJ) மற்றும் இதன் தாய் அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) ஆகிய அமைப்புகளின் பிரச்சாரத்திற்கு எதிர் பிரச்சாரம் செய்து வரும் வழிகேடர்கள் நமக்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள்.

அந்த வகையில் தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் “ஆதார பூர்வமான நபி மொழிகளை மறுக்கின்றார்கள்” என்ற பாரிய குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு எதிராக நாம் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்தத் தயார் என்று அழைப்பு விடுத்தும் போலி தவ்ஹீத் பேசும் எந்த உலமாக்களும் அதற்கு தயாராகவில்லை. விவாத ஒப்பந்தம் வரை வந்த சிலர் கூட இறுதியில் ஓடி ஒழிந்து தாம் அசத்திய வாதிகள் தான் என்பதை அவர்களே நிரூபித்த காட்சிகளே ஏராளம்.

புகழ் பெற வேண்டும், ஆகவே தான் விவாதிக்க வந்தோம்.

இதன் தொடரில் ஜமாத்துல் முஸ்லிமீன் (பைஅத்) என்ற அமைப்பினர் நாங்கள் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்துடன் பகிரங்க விவாதம் நடத்தத் தயார் என்று சொல்லி விவாத ஒப்பந்தமும் போடப்பட்டது.

தமது 25 வருட கால பிரச்சார களத்தை உமர் அலி என்ற தமது அமைப்பின் முன்னால் அமீர் நாசமாக்கி விட்டதாகவும் தற்போது அவரை விட்டு தாங்கள் பிரிந்து தனியாக செயல்படுவதாகவும் கூறிய ஒரு கூட்டத்தார் மௌலவி ஹிபதுர் ரஹ்மான் என்பவரின் தலைமையில் விவாத ஒப்பந்தம் போடுவதற்காக ஜமாத்தின் தலைமையகத்திற்கு வந்தார்கள்.

உமர் அலியினால் நாசப்படுத்தப்பட்டுள்ள தமது அமைப்பை மீண்டும் உயிர்பிக்க வேண்டும் என்றும் அத்துடன் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் போன்ற மக்கள் மத்தியில் பிரபலமான ஓர் அமைப்புடன் விவாதம் செய்தால் அதன் மூலம் இதனை நாங்கள் சாத்தியப்படுத்திக் கொள்வோம் எனவே தான் உங்களுடன் விவாதத்திற்கு வருகின்றோம் என்று விவாத ஒப்பந்தத்திலேயே பைஅத் கூட்டம் வாக்கு மூலம் தந்தது. குறித்த விவாத ஒப்பந்தம் வீடியோவாக பதிவும் செய்யப்பட்டது.

எது எப்படியிருப்பினும், அசத்தியம் எவ்வழியில் வந்தாலும் அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் தவ்ஹீத் ஜமாத் விவாதத்திற்கு ஒப்புக் கொண்டு ஒப்பந்தமும் போட்டது. அதன் படி கடந்த 13.09.2015 அன்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இரு தரப்புக்கும் இடையிலான பகிரங்க விவாதம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்ப உரையும், ஆட்டம் கண்ட அசத்தியமும்.

விவாதத்தில் இரு தரப்பிலும் தலா 05 நபர்கள் வீதம் வாதம் செய்வது என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும், பைஅத் அமைப்பின் சார்பில் மேடையில் 04 நபர்கள் அமர்ந்திருந்தாலும் மௌலவி ஹிபதுர் ரஹ்மான் மாத்திரமே விவாதிக்கும் நிலையில் இருந்தார்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் சகோ. பர்சான், சகோ. அப்துர் ராசிக், சகோ. அப்து நாசிர், சகோ. ரஸ்மின், சகோ. ஹிஷாம் ஆகியோர் விவாதத்தில் கலந்து கொண்டார்கள்.

“ஆதாரபூர்வமான எந்த ஹதீஸும் அல்குர்ஆனுக்கு முரண்படாது” அல்குர்ஆனுக்கு முரண்படுவதாக இவர்கள் கூறுவது இவர்களின் சிற்றறிவின் காரணமாகவே ஆகும். பரந்து பட்ட அறிவின் மூலம் இவர்கள் மறுக்கும் எந்தச் செய்தியும் அல்குர்ஆனுக்கு முரண்படாது என்று நாம் இங்கு நிரூபிப்போம் என்று கூறி மௌலவி ஹிபதுர் ரஹ்மான் பைஅத் அமைப்பு சார்பாக தமது ஆரம்ப உரையை நிகழ்த்தி முடித்தார்.

அதனைத் தொடர்ந்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் சகோ. ரஸ்மின் அவர்கள் ஆரம்ப உரையாற்றினார். அதில் “அல்குர்ஆனுக்கு முரண்படா விட்டால் தான் அது ஆதார பூர்வமான ஹதீஸாகவே இருக்கும்” என்பதை ஆதாரங்களுடன் முன்வைத்து நிறுவியதுடன், இந்த மேடையில் நாம் மறுக்கும் செய்திகளை உண்மையான, நபியவர்கள் சொன்ன செய்தி தான் என்று உங்கள் பரந்து பட்ட அறிவின் மூலம்  நீங்கள் நிரூபித்துக் காட்ட வேண்டும். அத்துடன் நீங்களும் உங்கள் கருத்துப் பட பிரச்சாரம் செய்யும் அனைவரும் வழிகேடர்கள் என்பதையும், தவ்ஹீத் ஜமாத் சொல்வது மாத்திரமே சத்தியம் என்பதையும் நாம் இந்த மேடையில் நிரூபித்து விட்டே அரங்கை விட்டு வெளியேறுவோம் என்றும் கூறி முடித்தார்.

விவாதிப்பதற்கு பதிலாக பயான் செய்த பைஅத் அமைப்பு

விவாதத்தின் முதல் உரை முடிந்து வாதம் வைக்கும் அமர்வு ஆரம்பமானது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகராக இருந்த அப்பாஸ் அலி தவ்ஹீத் ஜமாத்துடன் இருக்கும் போது எழுதி வெளியிடப்பட்ட “ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா?” என்ற தலைப்பிலான புத்தகத்திற்கு எதிராக தாம் வாதம் செய்ய இருப்பதாக ஒப்பந்தத்தில் பைஅத் அமைப்பினர் குறிப்பிட்டிருந்தார்கள்.

அப்பாஸ் அலி ஜமாஅத்தை விட்டு நீக்கப்பட்டு விட்டார். அவர் எழுதிய புத்தகம் ஜமாத்தின் அடிப்படைக் கொள்கை அதனை நாங்கள் தாராளமாக பொறுப்பெடுத்துக் கொள்கின்றோம். தாராளமாக நீங்கள் அதிலிருந்தே எங்களிடம் கேள்விகளை கேட்க்களாம் என்றும் ஒப்பந்தத்தில் தவ்ஹீத் ஜமாத் தரப்பில் குறிப்பிட்டிருந்தோம்.

விவாதத்தில் குறித்த புத்தகத்தில் இருந்து வாதங்களை எடுத்து வைப்பதாகவும், குறித்த புத்தகமக் தவறானது என்றும் கூறிச் சென்ற பைஅத் அமைப்பினர் புத்தகத்தில் நாம் உள்ளடக்கியிருந்த எந்தவொரு வாதத்திற்கும் பதில் சொல்ல முன்வரவில்லை.

விவாதத்திற்கு வாதங்களை தயாரித்துக் கொண்டு வர வேண்டிய பைஅத் அமைப்பினர் முழு நாளுக்குறிய பயான் குறிப்பை தயாரித்து வந்திருந்தார்கள். நாள் முழுவதும் பயான் செய்ய ஆரம்பித்தார்கள்.

ஸாலிம் பற்றிய செய்தியும் சமாதியான அசத்தியமும்.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் முதல் வாதமாக ஸாலிம் என்ற ஒரு இளைஞருக்கு ஸஹ்லா என்ற பெண்மணியை பால் கொடுக்கும் படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் (முஸ்லிம் – 2638, 2639, 2639, 2640 ) என்ற செய்தி பற்றிய வாதம் முதல் வாதமாக முன் வைக்கப்பட்டது.

பால் குடி சட்டம் என்பது பிறந்து 02 வருடங்களுக்குள் மாத்திரம் தான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. (அல்குர்ஆன் 2:233)

குறித்த செய்தியோ ஒரு இளைஞருக்கு இளம் பெண்ணை பால் கொடுக்க சொன்னதாக இடம் பெருகின்றதே இது எப்படி உண்மையாகும். இது இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கும் காரிணம் ஆகவே இது பொய்யானது.

ஸாலிம் என்பவர் தாடி வைத்த இளைஞர் என்றும் அவருக்கு நான் எப்படி பால் கொடுப்பேன் என்றும் குறித்த பெண்மணியே நபியிடம் கேட்ட போதும், நபியவர்கள் சிரித்துக் கொண்டே பால் கொடுக்க சொன்னதாகவும் அசிங்கத்தையும், ஆபாசத்தையும், அருவருப்பையும் சுமந்து, நபி (ஸல்) அவர்களின் கண்ணியத்தையும், நற்குணத்தையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் மேற் கண்ட செய்தி அமைந்திருக்கின்றதே.

புனித அல்குர்ஆன் கூறும் கருத்துக்களுக்கு நேர் மாற்றமாக இருக்கும் இந்தச் சம்பவம் கண்டிப்பாக நபியின் வாழ்வில் நடந்திருக்காது. நடந்ததாக நம்புவது முஃமின்களின் பண்பு கிடையாது. ஆகவே இது மறுக்கப்பட வேண்டிய பொய்யான இட்டுக்கட்டப்பட்ட நபியின் கண்ணியத்தை அழித்தொழிக்கும் செய்தியாகும்.

இதற்கு உங்கள் பதில் என்ன?

குறித்த செய்தி அல்குர்ஆனுக்கு முரண்பட வில்லை என்று நிரூபித்துக் காட்டுங்கள்?

அண்ணியப் பெண்ணிடம் ஓர் இளைஞரை பால் அருந்தும் படி நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்களா?

குறித்த செய்தியை ஆதாரமாக வைத்து இப்பொழுதும் நீங்கள் இது போல் பத்வா கொடுப்பீர்களா?

போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இருதி வரை மௌனத்தையே பதிலாகத் தந்து தாங்கள் அசத்திய வாதிகள் தாம் என்பதை அச்சி அசலாக நிரூபித்தது எதிர்த் தரப்பு.

காணாமல் போன இரண்டு வசனங்களை தேடித் தாருங்கள்.

வளர்க்க எடுக்கும் குழந்தைக்கு 10 தடவைகள் பால் ஊட்ட வேண்டும் என்று ஒரு வசனம் குர்ஆனில் இறங்கியதாகவும், பின்னர் அது 05 தடவைகள் என்று மாற்றப் பட்டதாகவும், நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை குறித்த வசனங்கள் திருக்குர்ஆனில் ஓதப்பட்டதாகவும் அண்ணை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை (முஸ்லிம் – 2876) எடுத்துக் காட்டிய தவ்ஹீத் ஜமாத் தரப்பினர் குறித்த செய்தி பொய்யானது. இட்டுக் கட்டப்பட்டது. இது உண்மையென்று மறுமை நாள் வரை உங்களினால் நிரூபணம் செய்ய முடியாது. காரணம் குறித்த செய்தியில் இடம் பெருவதைப் போன்ற வசனங்கள் தற்போது குர்ஆனில் இல்லை. இது குர்ஆன் மீது சந்தேகத்தை உண்டாக்கும் செய்தியாகும். இது மறுக்கப்பட வேண்டிய பொய்யான செய்தியாகும். உங்களினால் முடிந்தால் இந்தச் செய்தி குர்ஆனுடன் முரண்பட வில்லை என்பதை நிரூபணம் செய்யுங்கள் பார்க்களாம். என்று சவால் விடப்பட்டது.

ஒரு கட்டத்தில் குர்ஆன் பிரதியொன்றை எதிர் தரப்பிடம் வழங்கி இப்போது நீங்கள் குறித்த இரண்டு வசனங்களை எடுத்துக் காட்டி விட்டால் இத்துடன் விவாதத்தை முடித்துக் கொள்கின்றோம். நீங்கள் தயாரா என்று சவால் விட்ட போது, உடனடியாக கொடுத்த குர்ஆனை திருப்பி அனுப்பி விட்டது. அசத்தியக் கும்பல்.

தங்களது பரந்து பட்ட அறிவைக் கொண்டு குர்ஆனுக்கு குறித்த செய்திகள் முரண்பட வில்லை என்பதை நிரூபிப்போம் என்று விவாதக் களத்திற்கு வந்தவர்கள் ஒரு கேள்விக்குக் கூட பதில் கூற முடியாமல் அடங்கிப் போனார்கள்.

அசத்திய வாதிகளை அடக்கிய சத்தியக் கொள்கை.

நபி மூஸாவிடம் உயிரைக் கைப்பற்ற வந்த வானவருக்கு, உயிரைக் கைப்பற்றுவதை விரும்பாத மூஸா நபியவர்கள் கண்ணத்தில் அரைந்து விட்டதாகவும், அதனைத் தொடர்ந்து மூஸா நபியின் செயலைப் பற்றி அல்லாஹ்விடம் மலக்குல் மௌத் அவர்கள் சென்று முறையிட்டதாகவும் ஒரு செய்தி புகாரி – 3407 ம் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது நபி மூஸா அவர்களை அவமதிப்பதுடன், குர்ஆனின் நேரடிக் கருத்துக்கு மாற்றமாகவும், இறைவனின் வல்லமையை அவமதிக்கும் விதமாகவும் அமைந்துள்ளது. கண்டிப்பாக இப்படியொரு சம்பவம் நடந்திருக்காது, இப்படி நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கவும் முடியாது.

ஒரு நபி மரணிக்க மறுப்பாரா?

மலக்குள் மௌத்துக்கு நபி அடிக்க முடியுமா? அடிப்பாரா?

அடி வாங்கிக் கொண்டு சென்று மலக்கு இறைவனிடம் முறையிடுவாரா?

இறைவனின் கட்டளையை ஒரு மலக்கு நிறைவேற்றாமல் திரும்பி வருவாரா?

இறைவன் உயிரைக் கைப்பற்ற மலக்கை அனுப்பியும், ஒரு நபி அதனை மறுப்பாரா?

போன்ற இன்னோரன்ன கேள்விகள் தவ்ஹீத் ஜமாத் தரப்பால் தொடுக்கப்பட்டு, முடிந்தால் இந்தச் செய்தியை நிரூபித்துக் காட்டுங்கள். இது இட்டுக் கட்டப்பட்ட போலியான செய்தி, இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் செய்தியாகும்.

நீங்கள் தான் சத்திய வாதிகள் என்றால் இந்தச் செய்திக்குறிய நியாயங்களை முன் வையுங்கள் பார்க்கலாம் என்று தவ்ஹீத் ஜமாத் சார்பில் வாதம் வைக்கப்பட்டது. விவாதத்தின் இறுதி வரை இதற்கும் எதிர் தரப்பிடமிருந்து பதில் வரவில்லை. மௌனமே பதிலாக அமைந்தது.

சூனிய விஷயத்தில் சூனியமாகிப் போன வழிகேடர்கள்.

நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு யூதன் சூனியம் வைத்ததாகவும், அதன் பாதிப்பால் நபியவர்கள் செய்யாத செயல்களை செய்வதாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். மனைவியுடன் உடலுறவில் ஈடுபடாமல் ஈடுபடுவதைப் போல் நினைத்துக் கொண்டிருப்பார்கள் (புகாரி – 3268) என்ற செய்தியை எடுத்துக் காட்டி இது தெளிவாக குர்ஆனிய வசனத்திற்கு முரணாக இருக்கின்றது.

சூனியக் காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று குர்ஆன் கூறும் போது, (17:47) நபியவர்களுக்கே சூனியம் வைத்ததின் மூலம் சூனியக் காரர்கள் வெற்றி பெற்றதைப் போன்றதொரு தோற்றத்தை இக்கட்டுக் கதை மூலம் உருவாக்க முயல்கின்றார்கள்.

நபி முஹம்மத் (ஸல்) அவர்களை இறைவன் இது போன்ற மன நோய்கள் உண்டாகும் விதத்தில் வைக்க வில்லை. இறைவனால் பாதுகாக்கப் பட்ட நபியவர்களை கேவலப் படுத்தி, அசிங்கப் படுத்தி, இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் விதமாக இந்தச் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.

இவை இஸ்லாத்தையும், இஸ்லாத்தின் புனித வேதமான திருக் குர்ஆனையும் சந்தேகிக்க வைக்கின்றன. ஆகவே இந்தச் செய்திகள் போலியானவை இவற்றை உண்மை என்று நிரூபித்துக் காட்டுங்கள் என்று தவ்ஹீத் ஜமாத் வாதிட்டது. வழமை போல் அதற்கும் எதிர் தரப்பினர் அமைதியையே பதிலாகத் தந்தார்கள்.

பல்லி பற்றிய செய்தியும் பல்லிழித்த பைஅத் வாதிகளும்

இப்றாஹீம் நபியவர்களை அவர்களுடைய எதிரிகள் நெருப்பில் போட்ட நேரத்தில் பல்லி இப்றாஹீம் நபியின் நெருப்பை ஊதி விட்டதாகவும், அதனால் பல்லியைக் கொல்ல வேண்டும் எனவும் குறி்ப்பிட்டு வரும் (புகாரி – 3359) செய்தி பொய்யானது, போலியானது, குர்ஆனின் கருத்துக்கு மாற்றமானது என்று அடுக்கடுக்கான வாதங்களை முன் வைத்து தவ்ஹீத் ஜமாத் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்ட போது பதிலின்றி பல்லிழிப்பை மாத்திரமே பதிலாகத் தர முடிந்தது. எதிர் தரப்பினரால்.

தவ்ஹீத் ஜமாத்தினால் மறுக்கப்படும் போலியான செய்திகளை உண்மையென்று நிரூபிப்போம் என்று வாதிக்க வந்த பைஅத் அமைப்பினர் தவ்ஹீத் ஜமாத் எடுத்து வைத்த எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் ஒரு நாள் முழுவதும் பயான் செய்து கொண்டிருந்தது அவையோரை வெருக்க வைத்தது.

இன்னும் சொல்லப் போனால் தரப்புக்கு 250 நபர்கள் வீதம் பார்வையாளர் உள்ளீர்க்கப் பட முடியும் என்ற ஒப்பந்த விதிப்படி தவ்ஹீத் ஜமாத் தரப்பில் 250 நபர்கள் அரங்கில் அமர்ந்திருந்தார்கள். நாட்டின் பல பாகங்களிலும் அமைந்துள்ள ஜமாத்தின் கிளைகளில் இருந்து பல நூற்றுக் கணக்கான சகோதரர்கள் விவாத அரங்கில் அமர்வதற்கு சந்தர்பம் கேட்டிருந்தும் அனுமதிக்க முடிந்த 250 நபர்கள் வரையருக்கப் பட்டு அனுமதி வழங்கப்பட்டிருந்து.

ஆனால் சத்தியத்தை சாகடிக்க எண்ணி, அசத்தியத்தை மூலதனமாகக் கொண்டு விவாதிக்க வந்த பைஅத் அமைப்பினர் சார்பாக வெரும் 21 நபர்கள் மாத்திரமே விவாத பார்வையாளர்களாக வருகை தந்திருந்தார்கள் என்பது மேலதிக செய்தியாகும்.

ஷவ்கானி இமாம் விஷயத்தில் வாங்கிக் கட்டிய ஹிபதுர் ரஹ்மான் ஆலிம்சா

தவ்ஹீத் ஜமாத் தரப்பில் விவாதத்தின் போது எடுத்து வைத்த எந்த வாதத்திற்கும் பதில் அளிக்காத ஆலிம்சா அவர்கள் தானாக ஒரு ஹதீஸை எடுத்து வைத்து (அஹ்மத் – 15478) குறித்த ஹதீஸ் பலவீனமானது என்று இமாம் ஷவ்கானி அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

இதற்க்கு தவ்ஹீத் ஜமாத்தின் பதில் என்னவென்று கேட்டுக் கொண்டேயிருந்தார்.

ஷவ்கானி என்ன சொன்னார் என்பதை அறியாத ஹிபதுர் ரஹ்மான் ஆலிம்சா அவர்கள் ஷவ்கானி சொன்னதாக எவரோ ஒருவர் சொன்னதை நம்பி வாதத்தை எடுத்து வைத்து விட்டார்.

தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக விவாதிக்க வருபவர் குறைந்த பட்சம் தவ்ஹீத் ஜமாத் குறித்த தலைப்பில் வெளியிட்டுள் புத்தகங்களையாவது படித்திருக்க வேண்டாமா?

விவாதத்தில் ஷவ்கானி தொடர்பில் எந்த வாதத்தை ஆலிம்சா எடுத்து வைத்தாரோ அந்த வாதங்களுக்குறிய ஆதாரபூர்வமான பதில்கள் “வஹியில் முரண்பாடா?” என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டுள்ள தற்போதைய புத்தகத்தில் தெளிவாக விளக்கியுள்ளது.

அதனைக் கூட படிக்காமல் விவாதிக்க வந்துள்ளார் விவாதப் புலி என்பது தெளிவாக அனைவருக்கும் புரிந்து விட்டது.

இருப்பினும் கேள்வி கேட்க்கப்பட்டு விட்டால் பதில் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் ஷவ்கானி விஷயத்திலும் கொடுக்கப்பட்ட பதிலில் வாங்கிக் கட்டிக் கொண்டார் ஆலிம்சா.

பி.ஜெ யின் பெயரைச் சொல்லி காலம் கடத்திய பைஅத் ஆலிம்சா

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா? என்ற புத்தகத்தில் உள்ள தகவல்கள் பொய்யானவை அதனை நிரூபிப்பேன் என்று மேடைக்கு வந்தவர். புத்தகத்தில் தொகுக்கப்பட்ட ஒரு செய்தியைக் கூட பொய்யென்று நிரூபிக்க முடியாமல் அடி அசைந்து போனது மாத்திரமல்லாமல், தப்பிக்க வழி தேடி பி.ஜெ யின் குர்ஆன் மொழியாக்கத்தில் தவறு உள்ளது என்று வாதிக்க ஆரம்பித்தார்.

தலைப்பிற்கு தொடர்பில்லாமல் ஆலிம்சா அவர்கள் உளரினாலும், அதற்கும் விட்டு வைக்காமல் பதில் சொல்லி முடித்தது தவ்ஹீத் ஜமாத்.

ஸாலிம் பற்றிய செய்தியை முன் வைத்த அடுத்த கனமே “நாங்கள் தலைப்புக்கு வெளியில் செல்ல மாட்டோம், தலைப்புக்கு உள்ளிருந்து தான் விவாதிப்போம், ஆகவே தலைப்புக்கு வெளியில் கேள்வி கேட்க்க வேண்டாம்” என்று தாம் விவாதிக்க வந்த தலைப்பையே மறந்து உளர ஆரம்பித்தார் ஆலிம்சா அவர்கள்.

இப்படியொருவருடன் ஒரு விவாதம் நடத்தியதை விட சமுதாயத்திற்கு தேவையான இன்னும் பல காரியங்களை செய்திருக்கலாம் என்று எண்ணும் அளவுக்கு ஒரு ஆதாரத்தைக் கூட எடுத்து வைக்காமல் அசத்தியக் கும்மல் தான் நாம் என்பதை பகிரங்கமாக நிரூபித்தது பைஅத் அமைப்பு.

அசத்தியத்தின் பதில் அசையா மௌனமே!

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? “என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்” என்று இப்ராஹீம் கூறிய போது, “நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!” என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏகஇறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 2:258)

இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று அசத்தியத்தின் பதிலே அதன் மவுனம் தான். ஆனால் சத்தியத்தின் அடியோ நெத்தியடியாக விழுகின்றது. இறுதியில் அசத்தியம் நொறுங்கிவிடுகின்றது.

உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.

(அல்குர்ஆன் 21:18)

“உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழிவதாகவே உள்ளது” என்றும் கூறுவீராக!

(அல்குர்ஆன் 17:81)

TNTJ மற்றும் SLTJ அமைப்பினர் ஹதீஸ்களை மறுக்கின்றார்கள், இவர்கள் முஃதஸிலாக்கள், வழிகேடர்கள் என்றெல்லாம் அறைக்குள் ஆடும் பல போலி தவ்ஹீதிகளும் தவ்ஹீத் ஜமாத்துடன் பகிரங்க விவாதத்தில் பங்கெடுத்து தங்கள் கருத்தை நிலை நாட்ட அழைக்கப் படும் போதெல்லாம் ஓடி ஒழிவதின் மர்மம் இந்த இடத்தில் தான் வெளிப்படுகின்றது.

சத்தியத்திற்கு எதிராக போர் கொடி யார் ஏந்தினாலும் அவர்களும் அவர்களின் போலிக் கொள்கைகளும் அழிக்கப்பட்டு, அடியோடு தகர்த்தெரியப் பட்டதே வரலாறு. இதற்கு இந்த விவாதக் களம் இன்னொரு சாட்சியாகும்.

குறிப்பு :

வீடியோ விரைவில் வெளியிடப்படும் இன்ஷா அல்லாஹ்.

5,589 total views, 2 views today