LATEST
Home » கட்டுரைகள் » விமர்சனங்கள் » ஹமாஸ் தீவிரவாத இயக்கமாக அன்றி பாலஸ்தீன இராணுவமாகவே நோக்கப்பட வேண்டும் – நியாயவான்களின் (?) விமர்சனத்திற்கு பதில்

ஹமாஸ் தீவிரவாத இயக்கமாக அன்றி பாலஸ்தீன இராணுவமாகவே நோக்கப்பட வேண்டும் – நியாயவான்களின் (?) விமர்சனத்திற்கு பதில்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.  (அல்குர்ஆன் 05:08)

29.07.2014 அன்று எனது பேஸ்புக் பக்கத்தில் “காசாவில் உக்கிர தாக்குதல்; ஒரே இரவில் 100 பேர் பலி” என்ற தலைப்பில் BBC தமிழ் செய்தித் தளம் (http://www.bbc.co.uk/tamil/global/2014/07/140729_gazabombing.shtml) வெளியிட்டிருந்த ஒரு செய்தியை பதிவிட்டிருந்தேன்.

குறித்த செய்தியில் பாலஸ்தீன அப்பாவி முஸ்லிம்களை கொலை செய்யும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளை “இராணுவம்” என்றும் பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக போராட்டம் நடத்தி வரும் ஹமாஸ் இயக்க போராளிகளை “தீவிரவாதிகள்” என்றும் BBC குறிப்பிட்டிருந்தது.

100 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற செய்தியை BBC வெளியிட்டதை குறிப்பிடும் போது குறித்த செய்தியை நாமும் அப்படியே வெளியிட்டிருந்தோம். இதனைப் பார்த்த சில சகோதரர்கள் ஹமாஸை நாம் தீவிரவாதிகள் என்று சொல்வதைப் போல செய்திகளை பரப்பினார்கள்.

குறிப்பாக நியாயமாக ஒரு சதவீதம் கூட சிந்திக்க மாட்டோம் என்று விடாப்பிடியாக இருக்கும் ஜமாத்தே இஸ்லாமியை சேர்ந்த சில சகோதரர்கள் இதனை தெளிவாக பரப்பினார்கள்.

இதில் ஒருவர் (முஸ்தாக்) எனக்கு அனுப்பியிருந்த பெர்சனல் மெஸேஜில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

தப்பித் தவறியும் தவறிழைக்காத றஸ்மி மிஸ்கீ(ன்) அவர்களுக்கு! உங்களது முக நூல் பக்கத்தில் நேற்று (30.07.2014) புதன்கிழமைகாசாவில் உக்கிர தாக்குதல்; ஒரே இரவில் 100 பேர் பலி.எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை சேர் செய்திருக்கிறீர்கள். அதில் ஒரு பந்தி இவ்வாறு வருகிறது.திங்கட்கிழமை 10 இஸ்ரேலிய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஐந்து ராணுவத்தினர் இஸ்ரேலுக்குள் சுரங்கம் வழியாக புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள் மூலம் கொல்லப்பட்டனர்.இங்கு குறித்துக் காட்டப்படும் சொற்களை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? உடனுக்குடன் பதில் சொல்லும் நீங்கள் ஏன் பலரும் இவ்விடயத்தை சுட்டிக் காட்டியும் கருத்தேதும் பதியாமல் இருக்கிறீர்கள். உங்கள் மௌனம் அக்கருத்தோடு நீங்களும் உடன்படுகிறீர்கள் என்பது தானா? உங்களுக்கு ஹமாஸை பயங்;கரவாதிகள் என்று சொல்ல உரிமை இருக்கிறது. ஏனெனில் அவர்கள் உங்கள் கூட்டமல்லவே! உங்கள் இயக்கத்தைச் சாராத எவரும் நல்லவர்களாக இருக்க முடியாதே!!

பொதுவாகவே இந்த சகோதரர்கள் நாம் தவரே செய்யக் கூடாது என்று நினைக்கின்றார்கள் போலும், அதே போல் தவறு செய்தால் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் நினைக்கின்றார்கள். நான் பெருநாள் முடிந்து வெளியூரில் இருந்ததினால் தான் குறித்த செய்தி தொடர்பில் விளக்கம் சொல்வதற்கு நேரம் கிடைக்கவில்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய இவர்கள் இது போன்ற செய்திகளை லாவகமாக பரப்பியுள்ளார்கள்.

ஹமாஸ் இயக்கத்தின் போராட்ட யுக்தி தொடர்பில் சில முரன்பாடுகள் மற்றும் கொள்கை கோட்பாடுகளில் பாரிய மாற்றுக் கருத்துக்கள் இருந்தாலும் அவர்கள் தமது நாட்டுக்காகவும், உரிமைக்காகவும், நியாயத்திற்காகவும் போராடுகின்றார்கள் என்பதினால் அவர்களின் இந்த போராட்டத்தினை நாம் மறுக்கவில்லை. மாத்திரமல்லாமல் ஹமாஸின் மார்க்க நிலைப்பாட்டில் நமக்கு உடன்பாடில்லை என்பது தெளிவான விஷயமாகும்.

ஹமாஸின் இடத்தில் வேறு ஒரு இயக்கம் இருந்தாலும் இதுதான் நாம் எடுக்கும் முடிவாக இருக்கும். நியாயம் யார் செய்தாலும் நியாயமே! சரியான ஒரு காரியத்தை தவ்ஹீத் ஜமாத் அல்லாத ஒருவர் செய்தார் என்பதற்காக அந்த சரியான காரியத்தை நாம் மறுக்க மாட்டோம். இதனை குறித்த சகோதரர்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

மாதம்பையில் தவ்ஹீத் ஜமாத் கிளை அமைத்து பிரச்சாரம் செய்ததை புதிய பள்ளி கட்டுகின்றார்கள் “ஊருக்குள் இரண்டு பள்ளி எங்களுக்கு வேண்டாம்” என்று பெண்களை வைத்து போராட்டம் நடத்திய ஜமாத்தே இஸ்லாமியினர் என்றைக்காவது இனவாதிகளினால் பள்ளிவாயல்கள் உடைக்கப்படும் போது இப்படி குரல் கொடுத்தார்களா? ஊருக்குள் தவ்ஹீத் ஜமாத் மர்கஸ் அமைத்ததை எதிர்த்த அதே வேகத்தை இனவாதத்திற்கு எதிராக இவர்கள் கைக் கொள்ளாதது ஏன்?

நியாயம் நியாயமாக நோக்கப்படா விட்டால், அது அநியாயமாக மாறிவிடும் என்பதற்கு நடைமுறை உதாரணமாக இவர்கள் தான் இருக்கின்றார்கள்.

ஹமாஸை “தீவிரவாதிகள்” என்று BBC வெளியிட்ட செய்தியை நாம் குறிப்பிட்டதற்கே இந்தக் குதி குதிப்பவர்கள் – எகிப்தில் முர்சியின் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக அத்தனை பொது மக்களை அழிப்பதற்கு காரணமாக இருந்த “இஹ்வான்களை” கண்டிக்க மறுப்பது எவ்விதத்தில் நியாயம்?

இன்றைக்கு பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் செய்யும் அநியாயத்தை விட அதிகமாக எகிப்தில் இஹ்வான்கள் செய்தார்களே அதனை ஏன் இவர்கள் கண்டிக்க மறுத்தார்கள்? நமது இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ன தவறு செய்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் இருப்போம். மற்றவர்கள் செய்தால் மட்டும் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்போம் என்பதுதான் இவர்களின் கொள்கை என்பது தெளிவானது.

ஹமாஸை நாம் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டு விட்டதாக பொய்யாக செய்தி பரப்புவதற்கு இவ்வளவு ஆர்வம் எடுத்த இவர்கள் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவதற்கு எதிராக இஸ்ரேலை கண்டிக்கும் விதமாக என்ன முன்னெடுப்புகளை மேற்கொண்டார்கள்? குறைந்தது ஓரு ஆர்பாட்டத்தையாவது இவர்கள் மேற்கொண்டார்களா?

இலங்கையில் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போதுதான் வாய் திறக்கவில்லையென்றால், வெளிநாடுகளில் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போதாவது வாய் திறக்க மறுப்பது ஏன்? இங்கு ஹமாஸுக்காக குரல் கொடுத்தால் அல்லது பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்தால் நம்மையும் இங்குள்ள பாதுகாப்புத் துறை தீவிரவாத பட்டியலில் சேர்த்து விடுமோ என்ற உள்ளச்சம் தான் இந்த மௌனத்திற்கு காரணமா?

நம்மை சகட்டு மேனிக்கு விமர்சித்துத் திரியும் இவர்கள் – முடிந்தால் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒரு ஆர்பாட்டத்தையாவது நடத்திக் காட்டட்டுமே – இது இவர்களின் கொள்கை சார்ந்த அனைவருக்குமான சவாலாகும்.

மாதம்பையில் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பெண்களை வைத்து போராட்டம் நடத்திய ஜமாத்தே இஸ்லாமியினர் குறைந்த பட்சம் அதே போல பெண்களை வைத்தாவது பாலஸ்தீனத்திற்கு எதிராகவும் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்திக் காட்டட்டும் பார்க்கலாம்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 05:08)

நீதி என்பது நீதி தான் என்று அனைவருக்கும் புரிவதாகும்.

ஹமாஸ் தொடர்பிலான தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாட்டை பற்றிய அறிய இங்கு க்லிக் செய்யவும்.

666 total views, 2 views today