LATEST
Home » தவ்ஹீத் » பித்அத் » ஆஷூரா நோன்பும், முஸ்லிம்களின் நிலையும்.

ஆஷூரா நோன்பும், முஸ்லிம்களின் நிலையும்.

இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளின் பட்டியலில் நோன்பும் ஒன்றாகும். அதிலும் ரமழான் மாத நோன்புக்கு மற்ற எல்லா நோன்புகளையும் விடவும் அதிக சிறப்புகள் சொல்லப்பட்டுள்ளன. ரமழான் மாத நோன்புக்கு அடுத்ததாக இஸ்லாமிய மார்க்கம் சிறப்பித்து சொல்லும் ஒரு நோன்பு ஆசூரா நோன்பாகும்.

முஹர்ரம் மாதம் பிறை ஒன்பதிலும் பிறை பத்திலும் இரண்டு நோன்புகளைப் பிடிப்பது மார்க்கத்தில் ஆர்வமூட்டப்பட்ட அதிகம் நன்மைகள் பெற்றுத் தரக் கூடிய செயலாகும்.

இந்த இரண்டு நோன்புகள் தொடர்பாக இஸ்லாமிய சமுதாயத்தில் பலவிதமான மூட நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக முஹர்ரம் மாதம் என்பது இரண்டு முக்கிய சம்பவங்கள் இடம் பெற்ற மாதமாகும்.

மூஸா நபியவர்களின் கூட்டத்தினர் எதிரிகளை விட்டும் காப்பாற்றப்பட்டது இம்மாதத்தில் தான்.

அதே போல் நபியவர்களின் பேரர் ஹ{ஸைன் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்ட ‘கர்பலா” போர் இடம் பெற்றதும் இம்மாதத்தில் தான். இந்த இரண்டு சம்பவங்களும் முஹர்ரம் மாதத்தில் இடம் பெற்றிருந்தும், நமது சமுதாய மக்களிடம் மூஸா நபியவர்களின் கூட்டத்தினர் காப்பாற்றப்பட்ட செய்திகள் மறக்கடிக்கப்பட்டு ஹ{ஸைன் (ரலி) அவர்கள் கொலை செய்யப்பட்ட ‘கர்பலா” மாத்திரம் மக்கள் மனங்களில் பதியப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் இஸ்லாமிய வரலாற்றில் வரலாற்றுத் திரிபுகளை மார்க்கமாக்கிய ஷீயா மதத்தினர் தான் என்றால் அது மிகையில்லை.

எந்தளவுக்கென்றால் மூஸா நபியவர்களின் கூட்டத்தினர் காப்பாற்றப்பட்டதற்காக நபியவர்கள் பிடித்த நோன்பைக் கூட கர்பலாவின் துக்கத்தை அனுஷ்டிப்பதற்காகத் தான் நாம் பிடிக்கின்றோம் என்ற ஒரு கட்டுக் கதையை இஸ்லாமிய மார்க்கத்திற்குள் இவர்கள் புகுத்திவிட்டார்கள்.

நபியவர்கள் மரணித்து சுமார் ஐம்பது வருடங்களின் பின்னர் மரணித்த ஹ{ஸைன் (ரலி) அவர்களுக்காக எப்படி நோன்பு கடமையாக்கப்படும்? நபியவர்கள் உயிருடன் இருந்தால் வஹி மூலம் இறைவன் நோன்பை கடமையாக்கியிருப்பான். நபியவர்களின் மரணத்திற்குப் பின் மரணித்த ஹ{ஸைனுக்காக நோன்பு நோற்பதாக இருந்தால் யாரிடம் இருந்து, யாருக்கு வஹி வந்தது? என்ற கேள்வி எழுந்துவிடும்.

ஆக நபியவர்கள் மூஸா நபியின் கூட்டத்தினர் காப்பாற்றப்பட்டதற்காகத் தான் இந்த நோன்பைப் பிடித்தார்களே தவிர, ஹ{ஸைன் (ரலி) அவர்களுடைய மரணத்திற்கும் ஆசூராவின் நோன்புக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள்.இது என்ன நாள்?” என்று கேட்டார்கள்.  “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 3397

நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.

ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர்.  அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.

ஆஷூரா நோன்பின் சிறப்புகளையும், சட்டங்களையும் நோக்குவோம்.

நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போதுஇ யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோஇ அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1592

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள்இ நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 1901)

மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆஷூரா நோன்பின்  சிறப்புகள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. (நூல்: புகாரி 2006)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் 1976

நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்குஇ அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள். (அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம் 1977)

யூதர்களுக்கு மாறு செய்வோம்.

ஆஷூரா நோன்பு என்பது  பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்றுஇ நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.

மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 1916, 1917

நபி (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.

1,012 total views, 5 views today