LATEST
Home » கட்டுரைகள் » சிறப்புக் கட்டுரை »  டெங்கு நோய் தொற்று – இஸ்லாமியத் தீர்வு என்ன?

 டெங்கு நோய் தொற்று – இஸ்லாமியத் தீர்வு என்ன?

நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள டெங்கு நோய் தொற்று காரணமாக மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலை உருவாகியுள்ளதுடன் டெங்கு நோய்த் தடுப்பு தொடர்பான வேலைத் திட்டங்களும் வேகமாக நடைபெற்று வருகின்றன.

டெங்கு நோய்த் தொற்றினால் இதுவரை நாடு முழுவதும் 24 ஆயிரத்து 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

2017 ஜன­வரி மாதம் 10,464 பேர், பெப்­ர­வரி மாதத்தில் 8,308 பேர் , மார்ச் மாதம் 5790 பேர் என்ற ரீதியில் நாடு முழுவதும் டெங்கு நோயா­ளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.

இதில் மேல் ­மா­கா­ணத்தில் கொழும்பில் 5838 பேரும், கம்­பஹா மாவட்­டத்தில் 2965 பேரும், களுத்­துறை மாவட்­டத்தில் 1386 பேரும் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர். அதேபோல் காலி மாவட்­டத்தில் 1507 பேரும், யாழ்ப்பா­ணத்தில் 1527 பேரும், திரு­கோ­ண­ம­லையில் 1745 பேரும், குரு­நாகல் மாவட்­டத்தில் 1032 பேரும், இரத்தினபுரி மாவட்­டத்தில் 1033 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதேபோல் ஏனைய மாவட்­டங்­க­ளிலும் மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதேபோல் கிழக்கு மாகா­ணத்தில் இது­வ­ரையில் 23 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். .

கடந்த ஆண்டில் நாட­ளா­விய ரீதியில் 55ஆயி­ரத்து 150 பேர் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தனர். கடந்த ஆண்­டுடன் ஒப்­பி­டு­கையில் இந்த ஆண்­டியின் முதல் மூன்று மாத காலத்தில் 24 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான பொது­மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் இந்த எண்­ணிக்கை மிகவும் பாத­க­மான தன்மைகளை வெளிப்­ப­டுத்­து­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இப்படியான பயங்கரமான நோய்த் தொற்றுகள் ஏற்படும் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பில் புனித இஸ்லாமிய மார்க்கம் நமக்கு தெளிவாக பல செய்திகளை உணர்த்துகிறது.

அந்த வகையில் இது போன்ற நிலைகள் ஒரு சோதனையாக அமைந்திருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

“உங்களுக்கு மேலே இருந்தோ, உங்களின் கால்களுக்குக் கீழே இருந்தோ உங்களுக்கு வேதனையை அனுப்பிடவும், உங்களைப் பல பிரிவுகளாக்கி ஒருவரின் கொடுமையை மற்றவர் சுவைக்கச் செய்திடவும் அவன் ஆற்றலுடையவன்” என்றும் கூறுவீராக! அவர்கள் புரிந்து கொள்வதற்காகச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்பதைக் கவனிப்பீராக!

அல்குர்ஆன் 6:65

“இதிலிருந்தும், ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்” என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 6:64

நமது வாழ்வில் ஏற்படும் இது போன்ற விளைவுகள் அனைத்தும் இறைவன் நம்மை சோதிப்பதற்காக தருபவை என்பதை நாம் உணர்ந்து கொண்டு செயலாற்றும் போது இது போன்ற நிலையில் நம்மை நாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து பொருமையாக இருப்பதற்கு அது உதவியாக இருக்கும்.

தொற்று நோய் பற்றி இஸ்லாம் சொல்வது என்ன?

حدثنا عبد العزيز بن عبد الله حدثنا إبراهيم بن سعد عن صالح عن ابن شهاب قال أخبرني أبو سلمة بن عبد الرحمن وغيره أن أبا هريرة رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم قال لا عدوى ولا صفر ولا هامة فقال أعرابي يا رسول الله فما بال إبلي تكون في الرمل كأنها الظباء فيأتي البعير الأجرب فيدخل بينها فيجربها فقال فمن أعدى الأول رواه الزهري عن أبي سلمة وسنان بن أبي سنان

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘தொற்று நோய் கிடையாது. ஸஃபர் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது’ என்று கூறினார்கள்.

அப்போது கிராமவாசி ஒருவர், ‘அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன?’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்?’ என்று திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5717

இந்த ஹதீஸில் தொற்று நோய் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் ஒரு ஒட்டகத்திலிருந்து மற்றொரு ஒட்டகத்திற்கு சிரங்கு தொற்றிக் கொள்வதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு கிராமவாசி அது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளிக்கும் பதில் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

முதல் ஒட்டகத்திற்கு அந்த நோயைத் தந்தவன் யார்? என்ற வாதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் வைக்கின்றார்கள்.

இதன் மூலம் தொற்று நோய் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயடியாக மறுக்காமல், தொற்று நோயைக் காரணம் காட்டி, இறைவனுடைய விதியை மறுத்து விடக் கூடாது என்பதை உணர்த்துகின்றார்கள்.

ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்று நம்ப வேண்டும்.

ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நோய் தொற்றும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை. தொற்றுவதால் மட்டுமே நோய் ஏற்படுகிறது என்பதைத் தான் மறுக்கின்றார்கள். முதல் ஒட்டகத்துக்கு நோயைக் கொடுத்தவன் யார் என்று கேள்வி எழுப்பியதன் மூலம் முதன் முதலில் ஒருவருக்கோ சிலருக்கோ இறைவன் நோயை ஏற்படுத்துகிறான். அதன் மூலம் மற்றும் சிலருக்கு பரவச் செய்கிறான் என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

நடைமுறையிலும் இதை நாம் அனுபவப் பூர்வமாக உணர்கிறோம்.

குறிப்பிட்ட ஒரு நோய் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பின்னர் அந்த நோய் உலகில் யாருக்கும் ஏற்படுவதில்லை. சில வருடங்கள் கழித்து மீண்டும் ஏற்படுகிறது. நோய்கள் இயற்கையாக ஏற்படுவதில்லை. மாறாக இறைவன் நாடும் போது அதை ஏற்படுத்துகிறான் என்பதை இது உறுதி செய்கிறது.

மேலும் ஒரு வீட்டில் ஒருவருக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. அந்த நோய் அந்த வீட்டில் வேறு யாருக்கும் தொற்றாமல் வேறு தெருவில் உள்ளவருக்கு தொற்றுவதைக் காண்கிறோம். தொற்றுதல் என்பது இறைவனின் நாட்டத்தைப் பொருத்தது என்பது இதிலிருந்தும் தெரிகின்றது.

இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர தொற்று நோய் அறவே கிடையாது என்று கூறவில்லை. தொற்று நோய் உண்டு என்ற கருத்தில் அமைந்த பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இதை வலியுறுத்துகின்றன.

حدثنا عبد الله بن يوسف أخبرنا مالك عن ابن شهاب عن عبد الحميد بن عبد الرحمن بن زيد بن الخطاب عن عبد الله بن عبد الله بن الحارث بن نوفل عن عبد الله بن عباس أن عمر بن الخطاب رضي الله عنه خرج إلى الشأم حتى إذا كان بسرغ لقيه أمراء الأجناد أبو عبيدة بن الجراح وأصحابه فأخبروه أن الوباء قد وقع بأرض الشأم قال ابن عباس فقال عمر ادع لي المهاجرين الأولين فدعاهم فاستشارهم وأخبرهم أن الوباء قد وقع بالشأم فاختلفوا فقال بعضهم قد خرجت لأمر ولا نرى أن ترجع عنه وقال بعضهم معك بقية الناس وأصحاب رسول الله صلى الله عليه وسلم ولا نرى أن تقدمهم على هذا الوباء فقال ارتفعوا عني ثم قال ادعوا لي الأنصار فدعوتهم فاستشارهم فسلكوا سبيل المهاجرين واختلفوا كاختلافهم فقال ارتفعوا عني ثم قال ادع لي من كان ها هنا من مشيخة قريش من مهاجرة الفتح فدعوتهم فلم يختلف منهم عليه رجلان فقالوا نرى أن ترجع بالناس ولا تقدمهم على هذا الوباء فنادى عمر في الناس إني مصبح على ظهر فأصبحوا عليه قال أبو عبيدة بن الجراح أفرارا من قدر الله فقال عمر لو غيرك قالها يا أبا عبيدة نعم نفر من قدر الله إلى قدر الله أرأيت لو كان لك إبل هبطت واديا له عدوتان إحداهما خصبة والأخرى جدبة أليس إن رعيت الخصبة رعيتها بقدر الله وإن رعيت الجدبة رعيتها بقدر الله قال فجاء عبد الرحمن بن عوف وكان متغيبا في بعض حاجته فقال إن عندي في هذا علما سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إذا سمعتم به بأرض فلا تقدموا عليه وإذا وقع بأرض وأنتم بها فلا تخرجوا فرارا منه قال فحمد الله عمر ثم انصرف

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஷாம் நாட்டை நோக்கிப் புறப்பட்டார்கள். சர்க் எனும் இடத்தை அடைந்த போது, படைத் தளபதிகளான அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் உமர் (ரலி) யைச் சந்தித்து, ஷாம் நாட்டில் கொள்ளை நோய் பரவியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள், ‘ஷாம் நாட்டிற்குப் போகலாமா?’ என்று ஆரம்ப கால முஹாஜிர்களை அழைத்து, கருத்துக் கேட்ட போது முஹாஜிர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிலர் போகலாம் என்றும் சிலர் வேண்டாம் என்றும் பதிலளித்தார்கள். பிறகு அன்சாரிகளை அழைத்துக் கருத்து கேட்டார்கள். அவர்களிடமும் இது விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிறகு மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் ஹிஜ்ரத் செய்து வந்த குறைஷிப் பெரியவர்களை அழைத்து கருத்துக் கேட்டார்கள். அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கருத்து வேறுபாடின்றி தெரிவித்தனர். ஆகவே உமர் (ரலி) அவர்கள் திரும்பிச் செல்வதென முடிவு எடுத்தார்கள்.

அப்போது தமது தேவை ஒன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அங்கு வந்தார்கள். அவர்கள், ‘இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது. ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடுவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சொல்ல நான் கேட்டேன்’ என்று கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 5729

கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள ஊருக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்த ஊரில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. தொற்று நோய் இல்லை என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிடத் தேவையில்லை. எனவே தொற்று நோய் உண்டு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

கிருமிகள் மூலமாக நோய் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. அதே சமயம், இறைவனின் நாட்டப்படியே அந்த நோய் பரவியது என்பதையும் மறுக்கக் கூடாது.

காலையிலும் மாலையிலும் இறைவனிடம் பிரார்திப்போமாக!

நபி (ஸல்) அவர்கள் இதுபோன்ற தீமைகளிலிருந்து காலையிலும் மாலையிலும் பாதுகாப்புக் கோரியிருக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாலைப் பொழுதை அடைந்தவுடன் கீழ்க்கண்ட துஆவை ஓதுவார்கள்.

أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ للهِ وَالْحَمْدُ للهِ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلّ شَيْءٍ قَدِيْرٌ رَبّ أَسْأَلُكَ خَيْرَ مَا فِي هَذِهِ اللَّيْلَةِ وَخَيْرَ مَا بَعْدَهَا وَأَعُوْذُ بِكَ مِنْ شَرّ مَا فِيْ هَذِهِ اللَّيْلَةِ وَشَرِّ مَا بَعْدَهَا رَبّ أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَسُوْءِ الْكِبَرِ رَبّ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ

அம்ஸைனா வஅம்ஸல் முல்(க்)கு லில்லாஹி, வல்ஹம்து லில்லாஹி, லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். ரப்பி(இ) அஸ்அலு(க்)க கைர மாபீ(எ) ஹாதிஹில் லைலத்தி வ கைர மா ப(இ)ஃதஹா, வஅவூது பி(இ)(க்)க மின் ஷர்ரி மாபீ(எ) ஹாதிஹில் லைலத்தி வ ஷர்ரிமா ப(இ)ஃதஹா, ரப்பி(இ) அவூது பி(க்)க மினல் கஸ்லி வஸுயில் கிப(இ)ரி, ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அதாபி(இ)ன் பி(எ)ன்னாரி, வஅதாபி(இ)ன் பி(எ)ல் கப்(இ)ரி

இதன் பொருள்:

நாங்கள் மாலைப் பொழுதை அடைந்து விட்டோம். மாலை நேரத்து ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் யாருமில்லை. அவனுக்கே ஆட்சி. புகழும் அவனுக்கே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா! இந்த இரவின் நன்மையையும், அதன் பின்னர் வரும் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்த இரவின் தீங்கை விட்டும் அதன் பின்னர் வரும் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். சோம்பலை விட்டும், மோசமான முதுமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். என் இறைவா! நரகின் வேதனையை விட்டும், மண்ணறையின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

நூல்: முஸ்லிம் 4901

தொற்று நோய்கள் ஏற்படும் நேரங்களில் இஸ்லாம் காட்டித் தரும் இது போன்ற அழகிய வழிகாட்டல்களை நம் வாழ்வில் எடுத்து நடப்போமாக!

இதுவரை படிக்காவிட்டால் படித்து விடுங்கள்…

டெங்கு நுளம்பும், தவளை வளர்ப்பும் – டெங்கு நோயை தடுக்க இஸ்லாம் சொல்லும் எளிய வழி

17349455_632985506894550_2083014380_oதவளைகளால் எப்படிப்பட்ட நன்மைகள் விளைகின்றன என்பதை அன்றைய கால மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான் என்பதை மேற்கண்ட ஆய்வு முடிவுகள் உண்மைப்படுத்துகின்றன. அப்படியானால் தவளைகளின்  காரணமாக ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டுதான் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் தவளைகளைக்  கொல்ல வேண்டாம் என்ற கட்டளையை 

914 total views, 1 views today